India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
MP தொகுதி மறுவரையறைக்கு எதிராக தெலங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்தியில் ஒரே கட்சி ஆட்சியில் இருக்கவே, வடமாநிலங்களின் தொகுதிகளை அதிகரிக்க முற்படுவதாகவும், தங்கள் மாநில மக்களின் உரிமையை என்றும் விட்டுத்தரமாட்டோம் எனவும் அம்மாநில CM ரேவந்த் சூளுரைத்துள்ளார். மேலும், அனைத்து கட்சிகளுடன் ஆலோசித்த பிறகே தொகுதி மறுவரை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாமக்கல்லில் முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.4.25ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டையின் தேவை அதிகரித்திருப்பதால் விலை உயர்த்தப்பட்டிருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஐந்து ரூபாய்க்கு விற்கப்படும் முட்டையின் விலை உயர்வதற்கு வாய்ப்புள்ளது.
முன்னணி ஈ- காமர்ஸ் நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் குடோன்களில் இந்திய தர நிர்ணய ஆணையம் சமீபத்தில் சோதனை நடத்தியது. சென்னை, டெல்லி போன்ற இடங்களில் உள்ள குடோன்களில் நடந்த சோதனையில், தரச்சான்று இல்லாத மற்றும் நுகர்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கிட்டத்தட்ட ₹76 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
‘முர்சி’ பழங்குடியினம் தான் உலகின் மிகவும் ஆபத்தான பழங்குடியினம். தெற்கு எத்தியோப்பியா மற்றும் சூடானில் வசிக்கும் இவர்கள், கொலை செய்வது ஆண்மையின் அடையாளமாக கருதப்படுகிறார்கள் என்கின்றனர். இந்த இனப் பெண்கள், தங்களின் கீழ் உதட்டில் களிமண் வட்டு செருகி கொள்கின்றனர். இந்த பழங்குடியினத்தினர், இதுவரை நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்றுள்ளதால், எத்தியோப்பிய அரசு அவர்களுடன் தொடர்பு கொள்ள தடை விதித்துள்ளது.
கவுஹாத்தியில் இன்று மாலை ஏற்பட்ட கோர விபத்தில், சிறுவன் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சோனாப்பூர் பகுதியில் மூன்று சக்கர வாகனம் டிரக் மீது மோதியதாகத் தெரிகிறது. இதில், மூன்று சக்கர வாகனத்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் உயிரிழந்தனர். சாலையோரம் பல வாகனங்கள் அனுமதியின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.
ஆண்கள் கோலோச்சும் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டனர். பிரபலங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பவுன்சர் பணியில் ஆண்களே அதிகமாக இருக்கும் நிலையில், கேரளாவைச் சேர்ந்த பெண் பவுன்சர் கவனம் ஈர்த்துள்ளார். கொச்சியைச் சேர்ந்த அனு குஞ்சுமோன்(37), மோகன் லால் நிகழ்ச்சி ஒன்றில் பவுன்சராக திறம்பட பணியாற்றியுள்ளார். ஆண்களுக்கு நிகரான இந்த பவுன்சர் சிங்கப் பெண்ணை நாமும் வாழ்த்தலாமே!
கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணியும், ரிஷப் பண்ட்டின் லக்னோ அணியும் சற்றுநேரத்தில் களத்தில் மல்லுக்கட்ட உள்ளன. நடப்பு சீசனில் ஹைதராபாத் ஒரு போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், லக்னோ இன்னும் வெற்றிக் கணக்கைத் தொடங்கவில்லை. இவ்விரு அணிகளும் இதுவரை 4 போட்டிகளில் மோதியுள்ளன. அதில், லக்னோ 3 முறையும், ஹைதராபாத் ஒரு முறையும் வென்றுள்ளன. இன்றைய போட்டியில் வெல்லப் போவது யார்?
பிரபல சமூக செயல்பாட்டாளர் கஞ்சண்ட்டை பாருலேகர்(74) காலமானார். மகாராஷ்டிராவில் கோலாப்பூரில் செயல்பட்ட இவர் தொடங்கிய ஸ்வயம்சித்தா அமைப்பின் மூலம் ஆயிரக்கணக்கான பெண்களை தொழில்முனைவோராக மாற்றியுள்ளார். வங்கி அதிகாரிப் பணியை உதறிவிட்டு, அடித்தட்டு பெண்களுக்கு வெறும் ரூ.1 பெற்றுக்கொண்டு, தொழில் பயிற்சிகளை அளித்து அவர்களை முன்னேற்றியவர் கஞ்சண்ட்டை.
பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான சல்மான் கான், தென்னிந்திய ரசிகர்கள் குறித்து ஆதங்கத்தை கொட்டியுள்ளார். தென்னிந்தியாவில் தனக்கு ரசிகர்கள் பட்டாளம் இருப்பதாகவும், ஆனால் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் பாலிவுட் படங்களை தியேட்டரில் பார்ப்பதில்லை என்றும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். ரஜினி, சிரஞ்சீவி உள்ளிட்ட நட்சத்திரங்களின் படங்கள் ஹிந்தியில் நல்ல வரவேற்பை பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். x தளத்தில் அவர் பகிர்ந்துள்ள பதிவில், அன்புத் தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என கூறியுள்ளார். உற்சாகத்தோடும், துணிவுடனும், தன்னம்பிக்கையோடும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளுங்கள் வெற்றி நிச்சயம் எனவும் பதிவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.