India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும் தொகுதி பொறுப்பாளரே பதில் சொல்ல வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். வேட்பாளர்கள் அறிவிப்பை தொடர்ந்து நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், கூடுதல் வாக்கு பெறும் பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களையே சாரும் என்று கூறினார். மேலும், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

INDIA கூட்டணி ஆட்சி அமைத்தால் இளைஞர்களுக்கு ஓராண்டு தொழில் பயிற்சியுடன் தலா ₹1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. காங்., தேர்தல் அறிக்கையில் டிப்ளமோ, பட்டம் முடித்த 25 வயதுக்குட்பட்டோருக்கு பயிற்சியுடன் ₹1 லட்சம், 30 லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசில் உடனடி வேலை, 40 வயதுக்குட்பட்ட தொழில் முனைவோருக்காக ₹5,000 நிதி ஒதுக்கப்படும் என பல வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

ஆளுநர் பதவியை துறந்து அரசியலில் பணியாற்றுவது என்ற கடினமான முடிவை தமிழிசை எடுத்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழிசை பாஜகவில் இணைந்தது தொடர்பாக பேசிய அவர், ” 2 மாநிலங்களில் ஆளுநராக இருந்து நற்பெயரை எடுத்த தமிழிசை, பாஜகவில் இணைந்துள்ளார். அவர் 25 வருடமாக பாஜக உறுப்பினராக இருந்துள்ளார். களத்தில் இருந்து பணியாற்ற வேண்டும் என்பதற்காக, ஆளுநர் என்ற பெரிய பதவியை விட்டுக் கொடுத்துள்ளார்” என்றார்.

ஆர்சிபி அணியின் வைஷாக் விஜய்குமார் மிகச் சிறப்பாக பவுலிங் செய்வதாக இந்திய வீரர் அஷ்வின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், தமிழ்நாடு-கர்நாடகா அணிகளுக்கு ரஞ்சி போட்டியில், வைஷாக் விஜய்குமார் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். உயிரை கொடுத்து விளையாடு வீரராக அவர் தெரிகிறார். அவருக்கு ஐபிஎல் போட்டி அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கியதாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கார்த்தி நடிக்கும் 26ஆவது படத்தின் OTT உரிமத்தை, அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. நலன் குமாரசாமி இயக்கும் இந்தப் படத்திற்கு, ‘வா வாத்தியாரே’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், விரைவில் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தருமபுரி திமுக வேட்பாளர் மணிக்கு, தொகுதியின் தற்போதைய எம்.பி செந்தில் குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த 2019ஆம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியை 70 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் செந்தில் குமார் வீழ்த்தியிருந்தார். இந்த முறை அவருக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், திமுக வேட்பாளர் வெற்றி பெற அவர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிட உள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். இதன் மூலம் அவர் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமாரை எதிர்த்து போட்டியிட உள்ளார். 2019 தேர்தலில் அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி, திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமாரிடம் 1,20,767 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.

கடும் பசி இருக்கும் நேரங்களில் பலர் தெரியாத திருமண வீடுகளில் சாப்பிடுவது உண்டு. வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு சத்தமில்லாமல் செல்பவர்களும் இருக்கிறார்கள். அப்படி செல்லும்போது பிடிபட்டால் சிலர் கண்டித்து அனுப்புவார்கள். ஆனால், இப்படி நடந்துகொள்பவர்கள் மீது புகார் பதிவானால் IPC பிரிவு 441 ‘கிரிமினல் அத்துமீறல்’ சட்டத்தின் கீழ் 3 மாதங்கள் சிறை/ ரூ.500 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மும்பை அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா அந்த அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் நியமனத்தை ஜஸ்பிரித் பும்ரா முழு மனதுடன் ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. மும்பை அணியில் எழுந்துள்ள கோஷ்டி பூசல் காரணமாகவே அவர், பயிற்சியில் பங்கேற்காமல் அகமதாபாத்தில் நடக்கும் போட்டியில் நேரடியாக இணைவதாக தெரிவித்திருப்பதாக பேச்சு அடிபடுகிறது.

மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. அதைத் தொடர்ந்து, மார்ச் 22ல் அதிமுக தேர்தல் அறிக்கையும், இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீட்டை நாளைக்குள் அதிமுக நிறைவு செய்ய உள்ளதாக தெரிகிறது.
Sorry, no posts matched your criteria.