India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஹைதராபாத்தில் பெண்ணை கொலை செய்த பூசாரிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2023-ல் பூசாரி வெங்கட சாய் சூர்யா கிருஷ்ணா, ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். அந்த பெண் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால், அவரை கொலை செய்து உடலை வீட்டின் செப்டிக் டேங்கில் வெங்கட சாய் வீசியுள்ளார். வழக்கில் சாட்சியங்களை அழித்ததற்காக கூடுதலாக 7 ஆண்டுகள் விதித்தும் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் 4ஆவது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளார். $400 பில்லியன் (₹34.31 லட்சம் கோடி) சொத்து மதிப்பை தாண்டிய முதல் ஆளாகவும் மஸ்க் உருவெடுத்துள்ளார். டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு அவரது சொத்து மதிப்பு 82% உயர்ந்துள்ளது. இதில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 2ஆம் இடத்திலும் ($266 பில்லியன்), மெட்டா நிறுவனர் மார்க் 3ஆம் இடத்திலும் ($242 பில்லியன்) உள்ளனர்.
ஏப்ரல் மாதத்தில் 4 நாள்கள் அரசு விடுமுறை வருவது மக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. அதேநேரம், ஏப்ரல் 10 & 14 ஆகிய தேதிகளில் வரும் விடுமுறை மேலும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. ஏன் தெரியுமா? ஏப்ரல் 10ஆம் தேதி வியாழக்கிழமை வருகிறது. வெள்ளிக்கிழமை மட்டும் நீங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டால், பின்னர் சனி, ஞாயிறு, திங்கள் என 5 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. என்ன டூருக்கு பிளான் பண்ணியாச்சா?
இன்போசிஸ் நிறுவனம், தனது மைசூரு அலுவலகத்தில் பயிற்சி பெற்று வந்த 30 – 45 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு 1 மாத ஊதியம், மேலும், அவர்கள் பணியாற்றுவதற்கு தகுந்த 12 வார பயிற்சி Infosys Business Process Management-ல் அளிக்கப்படும் என உறுதி அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த மாதம் 400 ஊழியர்களை இன்போசிஸ் பணிநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதென்ன கேள்வி என நீங்கள் நினைக்கலாம். ஆனால் பலரும் முட்டையை சைவம் லிஸ்ட்டிலேயே வைத்துள்ளனர். முட்டை கருவுறாத நிலையில் இருப்பதால், அவை இறைச்சிக்கான லிஸ்ட்டில் வராது என அவர்கள் வாதிடுகின்றனர். ஆனால், முட்டை வேறொரு உயிரினத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படுவதால் அவை இறைச்சியே என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். எப்படி இருப்பினும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு முட்டை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு மற்றும் தொடர் கொலை மிரட்டல்கள் குறித்து நடிகர் சல்மான் கான் மனம் திறந்துள்ளார். என்ன நடந்தாலும், கடவுள் நிர்ணயித்த விதி வரை தான் தன்னால் வாழ முடியும் என அவர் வேதனை தெரிவித்துள்ளார். ஷூட்டிங் ஸ்பாட் – வீடு என தனது உலகம் சுருங்கி விட்டதாகவும், எப்போது வெளியே சென்றாலும் அதிக பாதுகாவலர்களுடன் செல்வது, ஒருவித அசௌகரியத்தை தருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
100 நாள் வேலை திட்டத்தில் உழைப்பை உறிஞ்சிவிட்டு, மத்திய அரசு ஊதியத்தை தர மறுப்பதாக CM ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த திட்டத்திற்கான ₹4,034 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்காததைக் கண்டித்து, தமிழகத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் வரும் 29ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். மேலும், உரிய வரிப்பகிர்வை பெற ஒவ்வொரு நாளும் போராட வேண்டியிருப்பதாகவும் சாடியுள்ளார்.
தங்கத்தை வங்கியில், டெபாசிட் செய்து வட்டி வருமானம் ஈட்டும், தங்க முதலீடு திட்டத்தை நிறுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 2015இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்தபின், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, தங்கத்தை முதலீடு செய்திருந்தால், தற்போதைய விதிகளின்படி, அதற்கான காலம் முடியும் வரை பலன்களைப் பெறலாம் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் புடின் விரைவில் உயிரிழப்பார், அப்படித்தான் போர் முடிவுக்கு வரும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். புடினுக்கு நரம்பியல் நோய், கேன்சர் என கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் பரவி வரும் நிலையில், ஜெலன்ஸ்கி இவ்வாறு தெரிவித்துள்ளார். ஆனால், ரஷ்ய அதிபரின் ஆரோக்கியம் சார்ந்த செய்திகளை அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.
பிரபல ஹாலிவுட் நடிகை பமிலா பாச் கடந்த 5-ம் தேதி உயிரிழந்தார். அவரது சாவில் மர்மம் இருந்துவந்த நிலையில், அதற்கான காரணம் தெரியவந்துள்ளது. தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதால் ஏற்பட்ட காயத்தால் அவர் உயிரிழந்ததாக, மரண சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. பே வாட்ச், சைரன்ஸ், நைட் ரைடர் உள்ளிட்ட படங்களில் அவரது கேரக்டர்களால், ரசிகர்களிடையே அவர் மிகவும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.