India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மகாராஷ்டிராவில் I.N.D.I.A கூட்டணிக்கு மக்கள் துணை நிற்பார்கள் என்ற முழு நம்பிக்கை உள்ளதாக சிவசேனா (உத்தவ் அணி) இளந்தலைவர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து பேசிய அவர், “மகாராஜ் சிவாஜிக்கு முன்னால் தலைவணங்கினோம். இனி என்ன நடந்தாலும் அவர் பார்த்துக் கொள்வார். துரோகிகளுக்கு நாங்கள் பாடம் புகட்டுவோம்” என்றார்.

SRH அணிக்கு எதிரான லீக் போட்டியில், சேஸிங் செய்த MI அணி Second- Innings-இல் அதிக ரன்கள் எடுத்து சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது, ஐபிஎல் வரலாற்றில் சேஸிங் செய்து அதிக ரன்கள் (மூன்று முறை) எடுத்த அணி என்ற பெருமையை MI அணி பெற்றுள்ளது. அதன விவரம் பின்வருமாறு:- *SRH எதிராக MI (2024) 246 *PBKS எதிராக RR (2020) 226 *CSK எதிராக RR (2010) 223 *PBKS எதிராக MI (2017) 223 *CSK எதிராக MI (2021) 219

உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றி, கிட்னியை தூய்மைப்படுத்த பெரு நெருஞ்சில் குடிநீரை பருகலாம் என்று சித்த மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார். கைப்பிடி அளவு பெரு நெருஞ்சில் செடியை வேருடன் எடுத்து, சுத்தம் செய்து 2 லிட்டர் நீரில் கொதிக்க வைத்து, சுண்ட காய்ச்சி குடிநீராக பருகலாம். இந்த குடிநீரை 7 நாள்கள் குடித்தால் போதும், ரத்தம் சுத்தமாவதுடன் கிட்னியில் உள்ள நச்சுகள் அனைத்தும் வெளியேறிவிடுமாம்.

கோவை தொகுதியில் களம் காணும் அண்ணாமலைக்குக் கடும் நெருக்கடியை அதிமுக கொடுக்கத் தொடங்கியிருக்கிறது. கொங்கு பகுதியில் தங்கள் சமூகத்திலிருந்து தங்களுக்கு மாற்றாக வேறொருவர் எழுந்து வருவதை, வேலுமணி போன்ற அதிமுக சீனியர்கள் விரும்பவில்லை. இதன் பின்னணியில் தான் சிங்கை ராமச்சந்திரன், அண்ணாமலையை குறிவைத்து தொடர்ந்து கேள்விக் கணைகளை எய்து வருவதாகக் கூறப்படுகிறது.

காவிரி நீர் விவகாரத்தில் இரு மாநில விவசாயிகளின் நலன்கள் பாதிக்காத வகையில் பேசி முடிவெடுக்க வேண்டும் என்று நடிகர் சிவராஜ்குமார் கருத்து தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “முந்தைய கசப்பான அனுபவங்கள் மீண்டும் நிகழக் கூடாது. நீதிமன்றங்களும் இந்தப் பிரச்னைக்கு முடிவெடுக்கவேண்டும். அவர்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் நானும் என் மனைவியும் ஆதரவாக இருப்போம்” என்றார்.

2022 இல் உலகளவில் 105 கோடி மெட்ரிக் டன் (19%) உணவுப் பொருள்கள் வீணடிக்கப்பட்டதாக ஐ.நா சபை (சுற்றுச்சூழல் பிரிவு) தெரிவித்துள்ளது. உணவு வீணடிக்கப்படுவது குறித்த அதன் அறிக்கையில், “உலகம் முழுவதும் 78 கோடி பேர் நாள்பட்ட பட்டினியை எதிர்நோக்கியுள்ள நிலையில், ஒவ்வொரு நபரும் ஆண்டுதோறும் 79 கிலோ உணவை வீணாக்குகின்றனர். உணவை வீணாக்குவதில் வீடுகள் 60% பங்கு வகிக்கின்றன” எனக் கூறப்பட்டுள்ளது.

*1868 – ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி பிறந்த நாள். *1930 – கொன்ஸ்டன்டீனபில் இஸ்தான்புல் எனப் பெயர் மாற்றம் பெற்றது. *1737 – பாஜிராவ் படை முகலாயர்களை டெல்லிப் போரில் தோற்கடித்தது. *1959 – சீன மக்கள் குடியரசின் அரச மன்றம் திபெத்து அரசைக் கலைத்தது. *1988 – ஹலப்ஜா நகரின் குர்திய இன மக்களுக்கு எதிராக ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. *2006 – தமிழக மெய்யியலாளர் வேதாத்திரி மகரிஷி மறைந்த நாள்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய வங்கிகளில் ₹5.3 லட்சம் கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. ஆர்.டி.ஐ கேள்விக்கு ஆர்பிஐ அளித்த பதிலில், “2013-2024 வரையிலான காலத்தில் 4,62,733 மோசடிகள் நடந்துள்ளன. மகாராஷ்டிராவில் ₹2.24 லட்சம் கோடி அளவுக்கு அதிக எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளது. இன்டர்நெட் பணப் பரிவர்த்தனைகள் மூலம் 6,659 மோசடிகள் இடம்பெற்றுள்ளன”எனக் கூறப்பட்டுள்ளது.

சிபிஐ இணை இயக்குநர் சுப்ரியா பாட்டீல் யாதவின் பதவி காலத்தை ஓர் ஆண்டுக்கு நீட்டித்து மத்திய பணியாளர் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின்படி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரியான சுப்ரியா 2025ஆம் ஆண்டு வரை சிபிஐ இணை இயக்குநராக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுப்ரியாவின் பதவி காலம் ஏப்ரல் 17ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

▶ குறள் பால்: காமத்துப்பால் | ▶ இயல்: கற்பியல்
▶ அதிகாரம்: ஊடலுவகை ▶ குறள் எண்: 1323
▶குறள்:
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.
▶ பொருள்:
நிலத்தோடு மழைநீர் கலந்த பேரழகான காட்சியைப் போல பேரன்புடன் கூடியிருக்கும் காதலரிடத்தில் ஊடல் கொள்வதால் வரும் இன்பத்தைவிட தேவருலகிலும் வேறொரு இன்பம் இருக்க வாய்ப்பில்லை.
Sorry, no posts matched your criteria.