news

News April 7, 2024

பொருளாதாரத்தில் பிரிட்டனை விஞ்சி விட்டது இந்தியா

image

பொருளாதார பலத்தில் பிரிட்டனையே இந்தியா விஞ்சி விட்டதாக பாஜக தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார். அரியலூர் கூட்டத்தில் பேசிய அவர், 200 ஆண்டுகாலம் இந்தியாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரிட்டனை பொருளாதார பலத்தில் இந்தியா தோற்கடித்து விட்டதென்றார். உலக அளவில் பொருளாதார பலத்தில் தற்போது 5ஆவது இடத்திலுள்ள இந்தியா, மோடி 3வது முறையாக பிரதமரானதும் 3வது இடத்துக்கு வருமென்றும் அவர் கூறினார்.

News April 7, 2024

பஞ்சாப்பில் பெண்ணை அரை நிர்வாணமாக்கி ஊர்வலம்

image

பஞ்சாப்பில் 55 வயது பெண் அரை நிர்வாணமாய் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தார்ன் தாரனில் இளைஞர் ஒருவர் அப்பகுதி பெண்ணை அவரின் குடும்பத்தினர் சம்மதம் இன்றி திருமணம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்து, இளைஞரின் தாயாரை பெண்ணின் குடும்பத்தினர் தாக்கி அரை நிர்வாணமாக்கி இழுத்து சென்றனர். இதை வீடியோ எடுத்தும் வெளியிட்டுள்ளனர். இதில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News April 7, 2024

விமான பயணிக்கு உடைந்த சீட் வழங்கிய ஏர் இந்தியா

image

ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவருக்கு உடைந்த சீட் வழங்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் ஜன்னலோர இருக்கையை கூடுதலாக ₹1,000 செலுத்தி அவர் முன்பதிவு செய்துள்ளார். ஆனால் விமானத்திற்கு சென்று பார்த்தபோது, சீட் உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதனை பொறியாளராலும் சரி செய்ய முடியவில்லை என ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

News April 7, 2024

கே.எல். ராகுல் ஒரு ஸ்பேர் டயர்

image

லக்னோ வீரர் கே.எல். ராகுல் ஜீப்பில் இருக்கும் ஸ்பேர் டயர் போன்றவரென சித்து தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், ஜீப்பின் பின்னால் உள்ள ஸ்பேர் டயரை அவசர நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், அதுபோல கே.எல். ராகுலை அணியில் எந்த இடத்திலும் நம்பி களமிறக்கலாம், விக்கெட் கீப்பராக விளையாட சொல்லலாம் என்றும், இந்த திறமை வேறு யாரிடமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

News April 7, 2024

திருப்பதியில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து

image

திருப்பதி கோயிலில் கோடை விடுமுறையில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் நாடு முழுவதும் இருந்து ஆயிரகணக்கானோர் வருவதால், திருப்பதியில் கூட்டம் அலைமோதுவது வழக்கமாகும். கோடை விடுமுறையில் இக்கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

News April 7, 2024

ஹாய் நான்னா படத்துக்கு சர்வதேச விருது

image

நானி, மிருணாள் தாகூர் நடிப்பில் வெளியான ஹாய் நான்னா படத்துக்கு மார்ச் மாதத்துக்கான சிறந்த சர்வதேச திரைப்பட விருது கிடைத்துள்ளது. தந்தை, மகள் பாச உறவை வைத்து டிச. 7இல் ஹாய் நான்னா வெளியானது. மேலும் ஹாய் டாட் என்ற பெயரில் உலகம் முழுவதும் படம் வெளியிடப்பட்டது. அந்த படத்துக்கு ஏதென்ஸ் சர்வதேச கலை திரைப்பட விழாவில் விருது வழங்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

News April 7, 2024

விஜயகாந்திற்காக மக்கள் வருத்தப்படுகின்றனர்

image

விஜயகாந்தை முதல்வராக்காமல் விட்டுவிட்டோமே என மக்கள் இப்போது வருத்தப்படுகிறார்கள் என்று பிரேமலதா உருக்கமாக கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “கேப்டன் எங்களிடம் மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற அவரது லட்சியத்தை நிச்சயம் செயல்படுத்துவேன். தேமுதிகவை நன்றாக வழிநடத்தி அவர் கண்ட கனவை எட்டுவதற்கு உழைப்பேன்” என்றார்.

News April 7, 2024

கட்சியல்ல அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி

image

திமுக என்பது அரசியல் கட்சியல்ல; அது கார்ப்பரேட் கம்பெனி என்று இபிஎஸ் விமர்சித்துள்ளார். திருச்சியில் பேசிய அவர், “மூன்றாண்டு கால ஆட்சியில், ₹3.5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ள ஸ்டாலின் தமிழகத்துக்கு ஒன்றுமே செய்யவில்லை. தமிழகத்தில் I.N.D.I.A கூட்டணி இல்லை என்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது. ஊழல் முறைகேடுகள் நிறைந்த ஆட்சியை நடத்தும் திமுகவுக்கு தகுந்த பாடம் புகட்ட மக்கள் தயாராக உள்ளனர்” என்றார்.

News April 7, 2024

பாஜகவால் ஓபிஎஸ் வஞ்சிக்கப்படுகிறாரா?

image

ஏ.சி.சண்முகம், நடிகை ராதிகா போன்றோருக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை செய்ய நேரம் ஒதுக்கிய பிரதமர் மோடி ஓபிஎஸ்-ஸுக்கு நேரம் ஒதுக்கவில்லையாம். ஏற்கெனவே இரட்டை இலை சின்னம் விவகாரத்தில், பாஜக தங்களுக்காக எதையும் செய்யவில்லை என்ற மனக்கசப்பில் இருந்த ஓபிஎஸ்-ஸுக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 22ஆவது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் பாஜக தங்களை வஞ்சிக்கிறது என்ற வேதனையில் ஓபிஎஸ் தரப்பு உள்ளதாம்.

News April 7, 2024

கோலியை கிண்டலடித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்

image

ஆர்சிபி வீரர் கோலியை பாக். கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் ஜூனைத் கான் கிண்டலடித்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 67 பந்துகளில் கோலி சதம் அடித்தார். இதன்மூலம் மெதுவாக சதமடித்த வீரர்கள் பட்டியலில் மணிஷ் பாண்டேவுடன் இணைந்தார். இதை சுட்டிக்காட்டி, ஐபிஎல் வரலாற்றில் மிகவும் மெதுவாக சதம் அடித்ததற்காக கோலிக்கு வாழ்த்துக்கள் என கிண்டலடித்து ஜூனைத் கான் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!