news

News April 1, 2024

விரைவில் இந்தியா – இலங்கை பேச்சுவார்த்தை

image

மீனவர்கள் கைது தொடர்பாக கடந்த 2022க்குப் பின் இலங்கையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இரு தரப்புக்கும் இடையே 6 மாதத்திற்கு ஒரு முறை பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது, இலங்கை உள்நாட்டு பிரச்னையால் மார்ச் 2022க்குப் பின் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. விரைவில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News April 1, 2024

மார்க்கெட்டிங்கில் இந்தியாவை மிஞ்சவே முடியாது

image

சென்னையில் ஐ.பி.எல் போட்டியை காண டிக்கெட் கிடைக்காமல் அலைமோதும் ரசிகர்கள் ஏராளம். அதே பெயரில் சென்னையில் கீதம் உணவகம் “இட்லி பிரிமீயர் லீக்” என்ற பெயரில் இட்லி திருவிழாவை நடத்தி வருகிறது. இந்த விளம்பரத்தை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா ‘மார்க்கெட்டிங்கில் இந்தியாவின் படைப்பாற்றலை நிறுத்த முடியாது. நான் எனது சீசன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிட்டேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.

News April 1, 2024

டோலிவுட்டில் கால் பதிக்கிறார் இயக்குனர் அட்லீ

image

தமிழ், இந்தியைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் இயக்குனர் அட்லீ கால் பதிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் மற்றும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் அல்லு அர்ஜூன் அவர் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்க உள்ள இப்படத்தில் சமந்தா அல்லது த்ரிஷாவை நாயகியாக நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கிறது. படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது

News April 1, 2024

ராஜஸ்தான் அணிக்கு 126 ரன்கள் இலக்கு

image

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 125/9 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. ஆரம்பத்திலிருந்தே முன்பை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அதிகபட்சமாக பாண்டியா 34, திலக் வர்மா 32 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் தரப்பில் போல்ட் 3, சாஹல் 3, பர்கெர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் RR அணி விளையாட உள்ளது.

News April 1, 2024

நீட் விலக்கு எனும் கண்கட்டி வித்தையை காட்டும் திமுக

image

நீட் தேர்வு விலக்கு எனும் கண்கட்டி வித்தையை திமுக காண்பித்து வருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். காஞ்சிபுரம் வேட்பாளர் ஜோதி வெங்கடேசனை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், ‘எங்கே பார்த்தாலும் திமுக ஆட்சியில் கஞ்சா, போதைப் பொருட்கள் தலைவிரித்து ஆடுகிறது. எடப்பாடி பழனிசாமி பாமக துரோகம் செய்துவிட்டதாக பிரச்சாரம் செய்கிறார். அதிமுகவிற்கு உயிர் கொடுத்தவர்கள் நாங்கள்’ என்றார்.

News April 1, 2024

IPLஇல் மோசமான சாதனை

image

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் டக் அவுட்டான ரோஹித் ஷர்மா ஐபிஎல்லில் ஒரு மோசமான சாதனையைப் படைத்துள்ளார். ஐபிஎல்லில் அதிகமுறை டக் அவுட்டான வீரர்களின் பட்டியலில் தினேஷ் கார்த்திக்குடன் (17) முதலிடத்தை ரோஹித் பகிர்ந்துகொண்டார். இவர்களைத் தொடர்ந்து மேக்ஸ்வெல், பியுஷ் சாவ்லா, மந்தீப் சிங், சுனில் நரைன் ஆகியோர் 15 முறை டக் அவுட்டாகியுள்ளனர். ரோஹித் டக் அவுட்டானதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

News April 1, 2024

இம்ரான் கான் தண்டனை நிறுத்தி வைப்பு

image

பரிசுப்பொருட்கள் முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அந்நாட்டு உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. 2018 – 2022ஆம் ஆண்டில் பாக்., பிரதமராக இருந்த போது, வெளிநாட்டு பிரமுகர்கள் அளித்த பரிசுப்பொருட்களை அரசு கருவூலமான தோஷாகானாவில் ஒப்படைக்காமல் ஊழல் செய்த வழக்கில் நீதிமன்றம், இருவருக்கும் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது.

News April 1, 2024

ரெப்போ வட்டி விகிதம் குறையுமா?

image

பெட்ரோல், டீசல், LPG சிலிண்டர் விலை சமீபத்தில் கணிசமான அளவுக்கு குறைக்கப்பட்டது. இதனால் நாட்டின் சில்லறை பணவீக்கம் குறையும் எனக் கணித்துள்ள நிபுணர்கள், ஏப்.3-5 வரை நடைபெற உள்ள RBI நிதிக் கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதமும் குறைக்கப்படலாம் எனக் கூறுகின்றனர். ரெப்போ வட்டி விகிதம் குறைந்தால் வீடு, வாகனக் கடன் போன்ற கடன்களை பெற்றவர்கள் செலுத்தும் கடனின் வட்டியும் குறைய வாய்ப்புள்ளது.

News April 1, 2024

மறைந்தும் மர்லின் மன்றோவுக்கு மங்காத மவுசு..!

image

ஹாலிவுட்டை கலக்கிய நடிகை மர்லின் மன்றோ, 1962ஆம் ஆண்டு தனது 36ஆவது வயதில் மறைந்தார். மறைந்து சுமார் 60 ஆண்டுகளை கடந்த பின்னும் மர்லின் மன்றோ பயன்படுத்திய பொருட்களுக்கு அவரது ரசிகர்கள் மத்தியில் இன்னமும் மவுசு குறையவில்லை. உச்சபட்சமாக, சமீபத்தில் அவரது தீவிர ரசிகரான அந்தோணி ஜெபின், மர்லின் மன்றோவின் உடல் புதைக்கப்பட்ட சமாதி அருகே உள்ள இடத்தை, ரூ.1 கோடியே 62 லட்சத்துக்கு ஏலத்தில் வாங்கியுள்ளார்.

News April 1, 2024

இளைஞர்களை ஏமாற்றியுள்ளார் மோடி

image

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு கொடுப்பதாகக் கூறி இளைஞர்களை மோடி ஏமாற்றியுள்ளார் என தேமுதிக பிரேமலதா விமர்சித்துள்ளார். பெரம்பலூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய அவர், “பாஜக அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது” என்றார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த முறை பெரம்பலூர் தொகுதியில் வெற்றிபெற்ற பாரிவேந்தர் தொகுதிப்பக்கமே வரவில்லை என குற்றம் சாட்டினார்.

error: Content is protected !!