India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் மீதான கல்வீச்சு தாக்குதல் சம்பவத்திற்கு பிரதமர் மோடி & தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஜெகன் விரைவில் குணமடைந்து, உடல் நலம் பெற்று மக்கள் பணியாற்ற வேண்டுமென பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். மறுபுறம், இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை தண்டிக்க என்று தேர்தல் ஆணையத்தை சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

*தமிழக மக்கள் அளிக்கும் தீர்ப்பு நிச்சயமாக மாற்றத்தை உருவாக்கும் – சீதாராம் யெச்சூரி
*2026 பேரவைத் தேர்தலிலும் அதிமுக உடனான கூட்டணி தொடரும் – அசாதுதீன் ஒவைசி
*பாகிஸ்தானின் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பழமையான ‘கைபர் கோயில்’ இடிக்கப்பட்டது.
*மார்ச் மாதத்தில் சில்லரை விலை பணவீக்க விகிதம் 4.85% ஆக குறைந்தது.
*PBKS அணிக்கு எதிரான ஆட்டத்தில் RR அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இன்று (ஏப்ரல் 14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

ஹரியானாவின் பஹதுர்கர் பகுதியைச் சேர்ந்த கார்விட் (25), நந்தினி (22) தம்பதி அடுக்குமாடி குடியிருப்பின் 7ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர். யூடியூப் சேனல் நடத்தி வரும் இவர்கள், படப்பிடிப்பு முடித்து வீட்டிற்கு திரும்பிய நிலையில் விபரீத முடிவெடுத்துள்ளனர். யூடியூப் & பேஸ்புக் மூலம் பிரபலமான இவர்களின் தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் அகஸ்தியர்பட்டியில் வரும் 15ஆம் தேதி நடைபெறும் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்காக காவல்துறை பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என பல இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாளை & நாளை மறுநாள் அகஸ்தியர்பட்டியை சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், மலச்சிக்கல், அசிடிட்டி, அஜீரணம் பிரச்னைகளிலிருந்து விடுபடவும் வாழைத்தண்டு உதவி புரிகிறது. உடல் எடையை குறைக்க முயற்சிப்போர் வாரத்திற்கு 3 நாள்கள், வாழைத்தண்டை பொடியாக நறுக்கிவிட்டு சிறிது தண்ணீர் விட்டு அரைத்து எடுத்து கொள்ளுங்கள். அரைத்தெடுத்த ஜூஸில் சிறிது சீரகத்தூள், சிறிது மிளகுத்தூள், சிறிது கல் உப்பு சேர்த்து வெறும் வயிற்றில் காலையில் குடிக்கலாம்.

மக்களவைத் தேர்தலுக்கான 16 வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதன்படி இமாச்சலின் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத்தை எதிர்த்து இமாச்சல் அமைச்சர் விக்ரமாதித்ய சிங்கை காங்கிரஸ் களம் இறக்கியுள்ளது. இவர் இமாச்சல் முன்னாள் முதல்வர் வீரபத்ரசிங்கின் மகன். இவரது தாய் பிரதீபா சிங், மண்டி தொகுதியின் தற்போதைய எம்.பி. ஆவார். இதன் மூலம் மண்டி தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது.

ஒப்பந்த பணிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் ஹைதராபாத்தைச் சேர்ந்த மேகா இன்ஜினியரிங் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிறுவனம் தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வழங்கிய 2ஆவது பெரிய நிறுவனமாகும். அதிகபட்சமாக BRSக்கு ₹195 கோடி, திமுகவுக்கு ₹85 கோடி உள்பட ₹966 கோடியை இந்நிறுவனம் தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடையாக அளித்துள்ளது.

PBKS அணிக்கு எதிரான ஆட்டத்தில் RR அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 17ஆவது ஐபிஎல் தொடரின் 27 ஆவது போட்டியில், டாஸ் வென்ற RR பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த PBKS அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 148 ரன்கள் இலக்கை துரத்திய RR அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.

ஆசியாவிலேயே அதிக பணவீக்கம் கொண்ட நாடுகளில் பாகிஸ்தான் முதலிடம் பிடித்துள்ளதாக ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானில் 25% அளவுக்கு பணவீக்கம் இருப்பதாக ஆசிய வளர்ச்சி வங்கி குறிப்பிட்டுள்ளது. மேலும், பணவீக்கம் அதிகரிப்பு, வளர்ச்சி குறைவால் நடப்பு நிதியாண்டிலும் பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி 1.9% ஆக இருக்குமெனவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.