news

News August 16, 2025

AK 64 அப்படியான படம் அல்ல: ஆதிக்

image

‘குட் பேட் அக்லி’ முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்காக மட்டுமே எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ‘கூலி’ படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருவதால், முன்னணி ஹீரோக்களின் படங்களை அனைவரும் ரசிக்கும்படியாக எடுங்கள் என்ற கருத்தை நெட்டிசன்கள் முன்வைக்கின்றனர். இந்நிலையில், ‘AK 64’ படம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் என அதன் இயக்குநர் ஆதிக் கூறியுள்ளார். உங்கள் எதிர்பார்ப்பு என்ன?

News August 16, 2025

BREAKING: ஐ.பெரியசாமி வீட்டில் ED ரெய்டு

image

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அதிகாலையில் இருந்து ED அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான புகாரில், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரின் இல்லம், MLA விடுதி, திண்டுக்கலில் உள்ள இல்லம், அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுகிறது. மேலும், அமைச்சர் மற்றும் அவரின் குடும்பத்தினரிடம் ED விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

News August 16, 2025

கிருஷ்ணரை வழிபட சிறந்த நேரம் எது?

image

இன்று கிருஷ்ணரின் பிறந்தநாளை முன்னிட்டு, மக்கள் விரதமிருந்து நாள் முழுவதும் கிருஷ்ணரை வழிபடுவார்கள். பஞ்சாங்க கணிப்பின் படி, ஆகஸ்ட் 16 அதிகாலை 1:41 முதல் இரவு 11:13 வரை அஷ்டமி திதி நீடிக்கிறது. சனிக்கிழமை என்பதால் காலை 10:30 முதல் 11:50 வரை கிருஷ்ணரை வழிபட சிறந்த நேரமாக குறிப்பிடப்படுகிறது. மேலும், மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் பூஜைகளை செய்து வழிபடவும் உகந்த நேரமாகும்.

News August 16, 2025

EPS-க்கு எதிராக அணிதிரளும் அதிமுக சீனியர்கள்

image

அன்வர் ராஜா, மைத்ரேயன் அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்தனர். இது அதிமுகவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் செங்கோட்டையன், தம்பிதுரை, செல்லூர் ராஜு என பல மூத்த தலைவர்கள் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இபிஎஸ் உரிய மரியாதை அளிக்காததே அவர்களது புகாராக உள்ளதாகவும், விரைவில் அவர்கள் இபிஎஸ்-க்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News August 16, 2025

32 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்

image

அடுத்த 2 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) 32 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப்போவதாக IMD எச்சரித்துள்ளது. காஞ்சி, கடலூர், செங்கல்பட்டு, தி.மலை, விழுப்புரம், சேலம், அரியலூர், திருச்சி, தஞ்சை, நாகை, கோவை, தென்காசி உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், சென்னை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

News August 16, 2025

திமுகவுக்கு தோல்வி பயம்: கே.பி.ராமலிங்கம்

image

தோல்வி பயத்தால் திமுக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருவதாக பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் விமர்சித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் தமிழக மக்களுக்கு செய்யாதவற்றை, மீதமுள்ள சில மாதங்களில் செய்வதாக வெளி வேஷம் போட்டு வருகிறார் என சாடிய அவர், தமிழகத்தின் தீய ஆட்சியான திமுக ஆட்சியை அகற்றுவதை நோக்கி நாங்கள் பயணிக்கிறோம். 2026-ல் மக்கள் திமுகவுக்கு பாடம் புகட்டுவார்கள் என எச்சரித்தார்.

News August 16, 2025

ரோஹித், கோலியை நீக்கக் கூடாது: ரெய்னா

image

டெஸ்ட், டி20-களில் ஓய்வறிவித்த ரோஹித், விராட் ODI-யில் மட்டுமே இனி விளையாடவுள்ளனர். இந்நிலையில் 2027 ODI உலகக்கோப்பை அணியில் அவர்கள் இடம்பெறுவது சிரமம் என பல மூத்த வீரர்கள் கருத்து கூறுகின்றனர். இதுபற்றி பேசிய ரெய்னா, ரோஹித் மற்றும் விராட் அனுபவம் அணிக்கு முக்கியமானது, ஆதலால் அணியில் இடம்பெற வேண்டுமென தெரிவித்துள்ளார். மேலும், ஜூனியர்களுக்கு வழிகாட்ட அவர்கள் அணியில் இருப்பது அவசியமென்றார்.

News August 16, 2025

DMKவில் இணையும் தம்பிதுரை? சற்றுநேரத்தில் விளக்கம்

image

OPS, TTV விவகாரத்தில் செய்தியாளர்கள் முன்னிலையிலேயே தம்பிதுரையை EPS கடிந்து கொண்டார். இதனால் EPS மீது அதிருப்தியில் உள்ள தம்பிதுரை அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணையவுள்ளதாக செய்தி வெளியானது. ஆனால், அதற்கு அவரது தரப்பில் இதுவரை எந்த மறுப்பும் வெளியிடவில்லை. இந்நிலையில், இன்னும் சற்றுநேரத்தில் அவர் அதிகாரப்பூர்வமாக விளக்கமளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News August 16, 2025

இன்ஸ்டா ரீல்ஸ்களுக்கு இனி தமிழகத்தில் கிடுக்குப்பிடி?

image

பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கூடிய ரீல்ஸ் அதிகமாகிவிட்டது. இதனைக் கண்காணிக்கும் சைபர் பிரிவு, சிலருக்கு எச்சரிக்கை செய்து அபராதம் விதிக்கிறது. இந்நிலையில், இதுபோன்ற வன்முறையைத் தூண்டும் பதிவுகளை தடுக்கவும், நீக்கவும் கோரி இன்ஸ்டாகிராம் நிறுவனத்துக்கு தமிழக அரசு சார்பில் விரைவில் கடிதம் அனுப்பவுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷ்னர் அருண் கூறியுள்ளார். கடிவாளம் போடப்படுமா?

News August 16, 2025

இன்று இதை செய்தால், 1 கோடி பிறவி பலனை அடையலாம்!

image

இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. சாஸ்திரங்களின் படி, கோயிலில் அஷ்டோத்திர பூஜை செய்து கிருஷ்ணரை வழிபட்டால், ஒரு கோடி பிறவிகளின் பலனை அடையலாம் என நம்பப்படுகிறது. இது குடும்பத்தின் செல்வ செழிப்பை அதிகரித்து, அனைவருக்கும் புண்ணியம் கிடைக்க செய்யும் எனவும் கூறப்படுகிறது. இப்பூஜையை செய்ய முடியாதவர்கள், கிருஷ்ணரை மனதார வழிபட்டாலே, அனைத்து பாவங்களும் கழிந்துவிடும். SHARE IT.

error: Content is protected !!