India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இபிஎஸ் – ஓபிஎஸ் இருவரையும் இணைத்து ஆட்சியை தக்கவைத்தது பாஜக தான் என தமமுக தலைவர் ஜான் பாண்டியன் கூறியுள்ளார். பாஜக கூட்டணியில் தென்காசி தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் அவர், சிறுபான்மையினர் ஓட்டுக்காக கூட்டணியில் இருந்து இபிஎஸ் வெளியேறியதாக சாடினார். தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக போட்டியிலேயே இல்லை என்றும், தேர்தலில் திமுக – பாஜக இடையே தான் போட்டி நிலவுவதாகவும் அவர் கூறினார்.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ரூ.51,120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்று சவரன் ஒன்று ரூ.50 ஆயிரத்தை தொட்ட நிலையில், இன்று சவரன் ரூ.51 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.140 உயர்ந்து, ரூ.6,390க்கு விற்பனையாகிறது. இதே போல, வெள்ளி விலை 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.80.80க்கு விற்பனையாகிறது. இது நடுத்தர மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த சீசன் தொடங்கிய முதல் நாளில் சிஎஸ்கே vs ஆர்சிபி போட்டியை 16.8 கோடி பேர் டிவியில் பார்த்ததாக டிஸ்னி ஸ்டார் தெரிவித்துள்ளது. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவு, முதல் நாள் போட்டியை இவ்வளவு பேர் பார்ப்பது இதுவே முதல் முறை. இந்தப் போட்டியை ஒரே நேரத்தில் 6.1 கோடி பேர் பார்த்துள்ளனர். 1,276 கோடி நிமிடங்கள் பார்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் சல்மான் கான், பிக் பாஸின் இந்தி பதிப்பு தொடரை தொகுத்து வழங்க ரூ.200 கோடி வாங்குகிறார். ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ், தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஒளிபரப்பப்படுகிறது. இதன் இந்தி பதிப்பில் ஒரு நாள் நிகழ்ச்சியில் தோன்ற ரூ.6 கோடி சல்மான் வாங்குகிறார். வார இறுதியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தோன்ற ரூ.12 கோடியும், ஒட்டுமொத்த தொடருக்கு ரூ.200 கோடியும் அவர் வாங்குகிறார்.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று (மார்ச் 29) ஈரோட்டில் பரப்புரையை தொடங்குகிறார். தொடர்ந்து, மார்ச் 30- சேலம், ஏப்.2- திருச்சி, ஏப்.6- ஸ்ரீபெரும்புதூர், சென்னை, ஏப்.7- சென்னை, ஏப்.10 – மதுரை, ஏப்.11- தூத்துக்குடி, ஏப்.14- திருப்பூர், ஏப்.15- கோவை, ஏப்.16- பொள்ளாச்சி என மொத்தம் 11 நாட்களாக திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

தேர்தல் ஆணையத்திற்கு மத்திய அரசு கொடுக்கும் அழுத்தம் காரணமாக பாஜக கூட்டணி கட்சிகளுக்கு கேட்கும் சின்னம் கிடைப்பதாக அதிமுக துணைப்பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி குற்றம் சாட்டியுள்ளார். எதிர்கட்சிகள் கேட்கும் சின்னம் கிடைக்கவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிவதாகவும் அவர் சாடினார். மேலும், 350 முதல் 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற மாய தோற்றத்தை உருவாக்கி வாக்கு பெற முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் 21,000 ரவுடிகளை தனது கண்காணிப்பு வளையத்துக்குள் காவல்துறை கொண்டு வந்துள்ளது. தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல், விளவங்கோடு இடைத் தேர்தல் நடைபெறுகின்றன. இதில் பிரசாரம், வாக்காளர்களை மிரட்டுவது போன்ற செயலில் ரவுடிகள் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதில் ஒன்றாக, 21,000 ரவுடிகளை கண்காணித்து வருகிறது.

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் ரியான் பராக் 45 பந்துகளில் 84 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். ஆட்டநாயகன் விருது வென்ற அவர், தனது தாயை நினைவுகூர்ந்து உருக்கமாக பேசினார். என் அம்மா இங்கே இருக்கிறார். கடந்த 3-4 ஆண்டுகளாக என் தடுமாற்றங்களைப் பார்த்தவர் அவர். நிச்சயம் இன்று அவர் என்னை நினைத்து பெருமைப்படுவார் என்று தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சேலம் மேட்டூரில் தேர்தல் அதிகாரி நர்மதா (37) தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதால், அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

சூது கவ்வும் படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்க நலன் குமாரசாமி திட்டமிட்டுள்ளார். சூர்யாவை வைத்து ‘தர்மம் வெல்லும்’ என்ற பெயரில் இப்படம் உருவாக இருந்தது. எனினும், படம் தொடங்கப்படவே இல்லை. இதனிடையே, சூது கவ்வும் இரண்டாம் பாகத்தை மிர்ச்சி சிவா நடிப்பில் அர்ஜுன் என்பவர் இயக்கினார். இந்நிலையில், சூர்யாவுக்கு எழுதிய கதையை வைத்து சூது கவ்வும் மூன்றாம் பாகமாக விஜய் சேதுபதியை வைத்து நலன் இயக்க உள்ளார்.
Sorry, no posts matched your criteria.