India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிமுக மூத்தத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் டெல்லி சென்றுள்ளார். எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சந்தித்துவிட்டு திரும்பிய பிறகு அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில், செங்கோட்டையனின் இந்த டெல்லி பயணம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் சினிமா பாடல்களுடன் ஸ்டோரியை பதிவிட்டு வைப் செய்ய புதிய அப்டேட் வந்துள்ளது. முன்பு புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் வைக்கும் வசதிகள் இருந்த நிலையில், அதனுடன் பாடலை ஸ்டேட்டசில் வைக்கும் வசதியும் இணைந்துள்ளது. ஸ்டேட்டஸ் வைக்கும் இடத்தில் மியூசிக் Icon ஒன்று புதிதாக ஸ்கிரீனில் தெரியும், அதை க்ளிக் செய்து உங்களுக்கு பிடித்த பாடலை, படங்களுடன் இணைத்து வைத்துக்கொள்ளலாம்.
ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு விதமான கிரகம் உகந்ததாக திகழும். அந்த நாள்களில், அந்த கிரகங்களுக்கு எதிர்மறையாக இருக்கும் செயல்களை செய்யக்கூடாது. அப்படி சனி அமாவாசையில் சில செயல்களைச் செய்யக்கூடாது *எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது *கருப்பு நிற ஆடை அணியக்கூடாது *வாக்குவாதங்களில் ஈடுபடுவதை குறைக்கவும் *கெட்ட வார்த்தை பேசக்கூடாது *திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற சுபகாரியங்களை மேற்கொள்ளக்கூடாது.
தங்கம் விலை கடந்த 4 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹1,400 உயர்ந்துள்ளது. இது, தங்கத்தில் முதலீடு செய்தவர்களை மகிழ்ச்சியடைய செய்திருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் கடந்த 1ஆம் தேதி ₹63,520க்கு விற்பனையான ஒரு சவரன், ₹3,360 அதிகரித்து இன்று (மார்ச் 29) வரலாறு காணாத உச்சமாக ₹66,880ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருக்கணித பஞ்சாங்க முறைப்படி இன்று சனிப்பெயர்ச்சி நடக்கிறது. இதனால், திருநள்ளாறு கோயிலில் கடல்போல் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து, வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவானை தரிசனம் செய்யும் பக்தர்கள், நள தீர்த்தத்தில் புனித நீராடி எள் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இதனால், கஷ்டங்கள் நீங்கி செல்வம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
நீட் தேர்வு அச்சத்தால், மீண்டும் ஒரு மாணவி தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் அகாடமியில் பயின்று வந்த தர்ஷினி 4/5/2025இல் நடக்கவுள்ள தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர். அனிதா முதல் தர்ஷினி வரை பல உயிர்கள் பறிபோயிவிட்டன. ஆனால், இதற்கு தீர்வுதான் இதுவரை கிடைக்கவில்லை.
வர வர நாய்கள் எப்போது தாக்க வருகிறது என்பதே தெரியாமல் போய்விட்டது. திடீரென கடிக்க பாய்கின்றன. அப்படி ஒரு சூழலை நீங்கள் எதிர்கொண்டால், இந்த ட்ரிக்ஸை பயன்படுத்தி எஸ்கேப் ஆகுங்க * நாயை திசைதிருப்ப எதையாவது தூக்கி எறியுங்க *நாய்களின் கண்களை நேரடியாக பார்ப்பதைத் தவிர்க்கவும் *மெதுவாக நடக்கும்போது நாய் உங்களை நோக்கி வந்தால் அப்படியே நின்றுவிடுங்கள் *பதறாமல், சைலெண்டாக இருங்க. ட்ரை பண்ணி பாருங்க…
CSK அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை RCBயின் விராட் கோலி படைத்துள்ளார். இதுவரை, அவர் 33 இன்னிங்ஸில் விளையாடி, 1,084 ரன்கள் குவித்துள்ளார். அடுத்தடுத்த இடங்களில், தவான் (1,057), ரோஹித் (896), தினேஷ் கார்த்திக் (727) ஆகியோர் உள்ளனர். IPL தொடரின் அனைத்து வகை பேட்டிங் ரெக்கார்டையும் தனது பெயரில் பதிவு செய்து வருகிறார் விராட் கோலி.
சனிப்பெயர்ச்சியான இன்று இரவு 9.44 மணிக்கு சனீஸ்வர பகவான் தனது சொந்த வீடான கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரம் 3ஆம் பாதத்தில் இருந்து மீனத்தில் உள்ள பூரட்டாதி 4ஆம் பாதத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதனால், ஜாக்பாட் அடிக்கும் ராசிகளில் துலாம் முதலிடத்தில் உள்ளது. சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகர ராசிக்கார்களுக்கு ஆரோக்கியம் மேம்படும், பணப்புழக்கம் அதிகரிக்கும், வெற்றி உண்டாகும்.
மகாகும்பமேளாவில் தோன்றி, IIT பாபா திடீரென வைரலாகினார். இவர், IPL 2025 தொடரை RCB அணி தான் வெல்லும் என கணித்துள்ளார். தொடரை வெல்லும் எனக் கூறியும் RCB ரசிகர்கள் புலம்பி தவிக்கின்றனர். விஷயம் என்னவென்றால், IIT பாபா CT தொடரில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தும் எனக் கணித்தார். ஆனால், அத்தொடரில் பாகிஸ்தான் ரொம்ப மோசமாக தோற்றது. அது ஞாபகம் வர, தற்போது RCB ரசிகர்கள் தவிக்கிறார்கள். யார் ஜெயிக்க போறாங்க?
Sorry, no posts matched your criteria.