India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேர்தல் பிரசாரம் செய்யவிடாமல் சிபிஐ அதிகாரிகள் தடுப்பதாக மஹுவா மொய்த்ரா குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் அதானி குறித்து கேள்வி எழுப்ப ஹிராநந்தானியிடம் லஞ்சம் வாங்கிய புகாரில் மஹுவாவின் MP பதவி பறிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மக்களவைத் தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிடும் நிலையில், சோதனை என்ற பெயரில் தனது பிரசார முயற்சிகளை சிபிஐ முறியடிப்பதாக தேர்தல் ஆணையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.

இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய வழக்கில் இருந்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்ரமணியம் விலகியுள்ளார். அனுமதியின்றி பாடல்களை பயன்படுத்த எக்கோ மற்றும் அகி மியூசிக் நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. தடையை நீக்கக் கோரி, எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கில் இருந்து நீதிபதி விலகியுள்ளார்.

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் சேர்ந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை செலவு செய்யும் என்று தேர்தல் ஆணையம் கணித்துள்ளது. தேர்தல் பிரசாரத்திற்கு மேடை அமைக்கும் செலவு, வாகன செலவு, நோட்டீஸ் செலவு, உணவு செலவு, தங்குமிட செலவு ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இதுதவிர தேர்தல் ஆணையம் ₹5,300 கோடி செலவிடவுள்ளது.

▶மார்ச் 26: சென்னை – குஜராத், ▶மார்ச் 31: சென்னை – டெல்லி, ▶ஏப்ரல் 5: சென்னை – ஐதராபாத், ▶ஏப்ரல் 8: சென்னை – கொல்கத்தா, ▶ஏப்ரல் 14: சென்னை – மும்பை, ▶ஏப்ரல் 19: சென்னை – லக்னோ, ▶எப்ரல் 23: சென்னை – லக்னோ, ▶ஏப்ரல் 28: சென்னை – ஐதராபாத், ▶மே 1: சென்னை – பஞ்சாப், ▶மே 5: சென்னை – பஞ்சாப், ▶மே 10: சென்னை – குஜராத், ▶மே 12: சென்னை – ராஜஸ்தான், ▶மே 18: சென்னை – பெங்களூரு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைந்தது. கடந்த மார்ச் 4ஆம் தேதி தொடங்கிய இந்தப் பொதுத்தேர்வை, சுமார் 8 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். கடைசி தேர்வான இன்று, கணிதம், விலங்கியல், வணிகவியல் ஆகிய தேர்வுகள் நடைபெற்றன. மேலும், பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 14ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஐபிஎல் தொடரின் முழு போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட முதற்கட்ட அட்டவணையில் 21 போட்டிகள் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது 74 போட்டிகள் கொண்ட முழு அட்டவணையும் ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 2ஆம் கட்ட போட்டிகள், ஏப்ரல் 8ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மே 21- குவாலிபையர் 1, மே 22- எலிமினேட்டர், மே 24- குவாலிபையர் 2, மே 26- இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.

ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம், வாளி, பலா, திராட்சை ஆகிய சின்னங்களில் ஏதேனும் ஒன்றை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருக்கிறார். இதன்மூலம் அவர் இரட்டை இலை சின்னத்தை கைவிட்டார் என்பது தெளிவாகிறது. இதுநாள் வரை ‘இரட்டை இலை’ சின்னம் எங்களுக்குதான் என்று சொல்லி வந்தவர், தற்போது வேறு சின்னங்களை கேட்டிருக்கிறார்.

வேட்பு மனு தாக்கல் செய்யும் முன்பு வீரப்பன் சமாதியில் அவருடைய மகள் வித்யா ராணி சபதம் எடுத்தார். கிருஷ்ணகிரியில் நாதக சார்பில் போட்டியிடும் அவர், வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக, வீரப்பன் சமாதிக்கு சென்று ஆதரவாளர்களுடன் சபதம் எடுத்தார். பின்னர் அவர் கூறுகையில், “எனது தந்தையின் கொள்கைகளுடன் இருக்கும் ஒரே தலைவர் சித்தப்பா சீமான்தான். அதனால் தான் அவரது கட்சியில் சேர்ந்தேன்” என்றார்.

காஷ்மீரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 27,000 பேர் பாஜகவில் இணைந்துள்ளதாக அம்மாநில பாஜக பொதுச்செயலாளர் அசோக் கவுல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், யூனியன் பிரதேசங்களில் பாஜகவின் வளர்ச்சியை நேரடியாக காண முடிகிறது என்றார். இதனால் புல்வாமா, அனந்தநாக் போன்ற பகுதிகளைச் சேர்ந்த தொழில் அதிபர்கள், சமூக ஆர்வலர்கள் என ஒரே மாதத்தில் 27,000 பேர் பாஜகவில் இணைந்துள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

நீண்ட இழுபறிக்கு பின்னர் நெல்லை மக்களவைத் தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் திமுக கூட்டணியில், காங்கிரஸுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதுவரை 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மேலும், விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தாரகை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மயிலாடுதுறைக்கு காங்கிரஸ் இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை.
Sorry, no posts matched your criteria.