India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை முறைகேடாகப் பயன்படுத்த வாய்ப்பே இல்லை என தலைமைத் தேர்தல் ஆணையம் உறுதியாகத் தெரிவித்துள்ளது. கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் ஒரு வாக்கிற்கு 2 வாக்குகள் பாஜகவுக்குப் பதிவானதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவ்வாறு வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

வாக்காளருக்கு ஒப்புகைச் சீட்டு வழங்க முடியுமா எனத் தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டை ஒப்பிட்டுப் பார்க்கக்கோரித் தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணையின்போது, உச்சநீதிமன்றம் இந்தக் கேள்வியை எழுப்பியது. அதற்கு பதிலளித்த ஆணையம், அது மிகப்பெரும் ஆபத்து, யாருக்கு வாக்களித்தோம் என்பது விவிபேட் திரையில் 7 வினாடிகள் தெரியும் என்றது.

நடப்பு ஐபிஎல் தொடரில், தோனியும், தினேஷ் கார்த்திக்கும் சிறப்பாக விளையாடி வருவதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா புகழாரம் சூட்டியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டிகளில், தோனி 20(4) ரன்களும், தினேஷ் கார்த்திக் 83(35) ரன்களும் குவித்தனர். தோனியை உலகக் கோப்பையில் விளையாட வைப்பது கடினம். ஆனால், தினேஷ் கார்த்திக்கை சம்மதிக்க வைப்பது எளிது எனத் தெரிவித்தார்.

நெஸ்லே நிறுவனம் குழந்தைகளுக்கான செரிலாக்கில் விதிகளுக்கு மாறாகச் சர்க்கரையை சேர்ப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உடல்பருமன், பிற நோய்களைத் தடுக்க பச்சிளம் குழந்தை உணவுப் பொருளில் சர்க்கரை சேர்க்கக்கூடாது என சர்வதேச வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறி, இந்தியாவில் 3 கிராம் அளவு சேர்ப்பதும், வளர்ந்த நாடுகளில் சேர்ப்பதில்லை என்றும் பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேராசிரியை நிர்மலா தேவிக்கு எதிரான வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்குச் சென்னை ஐகோர்ட் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளது. தவறாக வழிநடத்த முயற்சித்ததாக நிர்மலா தேவிக்கு எதிராக மாணவிகள் அளித்த புகார் மீது 6 ஆண்டாக எடுத்த நடவடிக்கை என்ன? என்றும், புகாரை விசாகா குழுவுக்கு அனுப்பாதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், ஜூன் 7க்குள் விளக்கமளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

பிட் காயின் மோசடி வழக்கில் ஷில்பா ஷெட்டியின் பங்களாவை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. பிட்காயின் திட்டம் மூலம் ரூ.6,600 கோடி மோசடி நடந்தது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மும்பை ஜூஹூவில் உள்ள பங்களா, புனேவில் உள்ள பங்களா, ஷில்பா கணவர் ராஜ் குந்த்ரா பெயரில் உள்ள பங்குகள் ஆகியவற்றை முடக்கியுள்ளது.

காங்கிரசை பாஜகவின் B-Team என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பாஜகவை சித்தாந்த ரீதியிலோ, அரசியல் ரீதியிலோ எதிர்க்க காங்கிரஸ் விரும்பவில்லை என்றும், ஏனெனில் பாஜகவின் B-Teamஆக காங்கிரஸ் தன்னை மாற்றிக் கொண்டுள்ளது என்றும் குற்றம்சாட்டினார். கருத்து கணிப்புகள் குறித்த கேள்விக்கு, அவை புனையப்பட்டவை, பணம் கொடுத்து வெளியிடப்பட்டவை என்று அவர் கூறினார்.

காயம் காரணமாக அணியில் இணையாமல் இருந்த CSK வீரர் டெவோன் கான்வே, ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலும் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு பதிலாக, இங்கி., வீரர் ரிச்சர்ட் கிளீசன் அணியில் இணைந்துள்ளார். அதேபோல், CSK அணியின் நட்சத்திர பவுலர் முஸ்தஃபிசுர், பஞ்சாபிற்கு எதிரான (மே 1) போட்டிக்குப் பிறகு அணியில் இருந்து விலகுகிறார். இந்த மாற்றம் அணியின் வெற்றியைப் பாதிக்குமா? எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

‘Control Unit’ – வாக்குப்பதிவு இயந்திரத்தில் என்ன வாக்கு பதிவாகிறது என்பதை பதிவு செய்து அதனை ஒப்புகைச் சீட்டு இயந்திரத்திற்கு அனுப்பி நகலெடுக்க உத்தரவிடும்; அந்த நகல் கண்ணாடி வழியாக 7 நொடிகளுக்கு வாக்காளர்களுக்கு தெரிந்த பின் கத்தரிக்கப்பட்டு ஒப்புக்கை சீட்டு இயந்திரத்தில் விழும். இதைத்தொடர்ந்து ஒப்புகைச் சீட்டு இயந்திரம் அனுப்பும் பதிலை மீண்டும் ‘Control Unit’ பதிவு செய்து கொள்ளும்.

▶அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘சைரன்’ (ஹாட்ஸ்டார்), ▶ஷெரிஃப் இயக்கத்தில் வைபவ், தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா நடித்த ‘ரணம்’ (அமேசான் பிரைம்), ▶ஆதித்யா சுஹாஸ் ஜம்பலே இயக்கத்தில் பிரியாமணி, யாமி கௌதம் நடித்துள்ள ‘ஆர்டிக்கிள் 370’ (ஜியோ சினிமா) ஆகிய திரைப்படங்கள் நாளை (ஏப். 19) OTT தளங்களில் வெளியாக உள்ளன.
Sorry, no posts matched your criteria.