news

News March 30, 2025

கமல் நிறுவனத்தின் பெயரில் மோசடி

image

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரில் சிலர் மோசடியில் ஈடுபடுவதாக நடிகர் கமல் தெரிவித்துள்ளார். நிறுவனம் சார்பில் எந்த காஸ்டிங் ஏஜெண்டுகளையும் நியமிக்கவில்லை எனவும், தாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

News March 30, 2025

உங்களுக்கு ‘சாவா’ எங்களுக்கு ‘எம்புரான்’..

image

‘L2:எம்புரான்’ படத்திற்கு இந்துத்துவ ஆதரவாளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், கேரள முதல்வர் பினராய் விஜயன், அப்படத்தை திரையரங்கில் பார்த்துள்ளார். குஜராத் கலவரம், ED, CBIஐ மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக இப்படம் மறைமுகமாக விமர்சித்துள்ளது. ‘சாவா’ படத்தை பாஜக அரசு, ஆதரவாளர்கள் கொண்டாடி வரும் நிலையில், ‘L2:எம்புரான்’ படத்தை கேரள காங்., கம்யூ. கையில் எடுத்துள்ளது.

News March 30, 2025

ஐன்ஸ்டீன் பொன்மொழிகள்

image

*மற்றவர்களைவிட திறமையாக விளையாட வேண்டுமானால் முதலில் விளையாட்டின் விதிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். *வெற்றி பெற்ற மனிதனாக ஆவதற்கு பதில், மதிப்புமிக்க மனிதனாக மாற முயலுங்கள். *மற்றவர்களுக்காக வாழும் வாழ்க்கையே, ஒரு பயனுள்ள வாழ்க்கையாகிறது. *புத்தி கூர்மையின் உண்மையான அறிகுறி அறிவு சம்பந்தப்பட்டதல்ல, அது கற்பனைத் திறனுடன் தொடர்புடையது. *தவறுகளே செய்யாதவர், புதிதாக எதையுமே முயற்சிக்காதவர்.

News March 30, 2025

உயிரிழப்பு 1,644 ஆக உயர்வு

image

மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,644ஆக உயர்ந்துள்ளது. மேலும், 2,400 பேர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000ஆக இருக்கக்கூடும் என அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில், சாலைகள், பாலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதால், மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால், மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

News March 30, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஈகை ▶குறள் எண்: 221 ▶குறள்: வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து. ▶பொருள்: இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.

News March 30, 2025

DOGEலிருந்து வெளியேறும் மஸ்க்?

image

அமெரிக்க அரசின் வீண் செலவினங்களை, 130 நாள்களுக்குள், நாளொன்றுக்கு 1 டிரில்லியன் டாலர்கள் என்ற அளவில் குறைக்க செயல்திட்டம் தீட்டி வேலை செய்து வருவதாக கூறியுள்ளார். இதன்மூலம், USA அரசு பொறுப்பில் (DOGE) இருந்து வரும் மே மாதம் எலான் மஸ்க் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்களை நீக்குவது உள்பட அவரது செயல்பாட்டிற்கு எதிராக அந்நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

News March 30, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶மார்ச் – 30 ▶பங்குனி – 16 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 06:00 AM – 07:00 AM & 03:30 PM – 04:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 01:30 PM – 02:30 PM ▶ராகு காலம்: 04:30 PM – 06:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 01:30 PM ▶குளிகை: 03:00 PM – 04:30 AM ▶திதி: திதித்துவம் ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: பூரம் ▶நட்சத்திரம் : ரேவதி மா 6.37

News March 30, 2025

அண்ணனுக்கு நிச்சயமான பெண்ணை கடத்திய தம்பி

image

உ.பி.யில் அண்ணனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை, தம்பி கடத்தியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. யோகேஷ் மணம் முடிக்க இருந்த பெண்ணை, அவரது தம்பி ராஜா கடத்திச் சென்றதாக பெண் வீட்டார் புகார் அளித்துள்ளனர். ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்து போலீஸ் தேடி வருகிறது. வீட்டில் இருந்த பணம், நகையுடன் பெண்ணை ராஜா கடத்திச் சென்றதாக புகார் அளித்திருப்பது சற்று சந்தேகத்தை கிளப்பியுள்ளது. எங்கயோ இடிக்குதுல!

News March 30, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News March 30, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

error: Content is protected !!