news

News March 30, 2025

கில் பெயரில் எழுதப்பட்ட சாதனை

image

ஐபிஎல்லில் ஒரு மைதானத்தில் அதிவேகமாக 1,000 ரன்கள் அடித்த 2ஆவது வீரராக ஷுப்மன் கில் உருவெடுத்துள்ளார். MIக்கு எதிரான நேற்றைய போட்டியில், GT கேப்டன் கில் 38 ரன்களை எடுத்தார். இதன்மூலம், அகமதாபாத் மைதானத்தில் மட்டும், 20 போட்டிகளில் அவர் 1,000 ரன்களை கடந்துள்ளார். இந்த பட்டியலில் கெயில் (19 போட்டிகள், பெங்களூரு மைதானம்) முதலிடத்திலும், வார்னர் (22, ஹைதராபாத் மைதானம்) 3ஆம் இடத்திலும் உள்ளனர்.

News March 30, 2025

பிரபல ஹாலிவுட் நடிகர் புரூஸ் குளோவர் காலமானார்

image

பிரபல ஹாலிவுட் நடிகர் புரூஸ் குளோவர் (92) உடல்நலக்குறைவால் காலமானார். ‘Diamonds Are Forever’ படத்தில் வில்லனாக நடித்து உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்ற இவர், சிகாகோவில் பிறந்தவர். மேடை நாடகத்திலிருந்து சினிமாவுக்குள் நுழைந்தவர். சைனா டவுன், வாக்கிங் டால், ஹார்ட் டைம்ஸ் உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குளோவரின் மறைவுக்கு ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP

News March 30, 2025

DC vs SRH: யார் வெற்றி பெற போறாங்க?

image

DC vs SRH அணிகள் விசாகப்பட்டினத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மோதுகின்றன. இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ள SRH, ஒன்றில் வென்றுள்ளது. DC ஒரு போட்டியில் விளையாடி அதில் வெற்றி பெற்றது. முன்னதாக 2 அணிகளும் மோதிய 24 ஆட்டங்களில் SRH 13, DC 11 ஆட்டங்களில் வென்றுள்ளன. விசாகப்பட்டினம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால் இன்று ரன்மழையும் பொழியும் என எதிர்பார்க்கலாம். யார் வெற்றி பெற போறாங்க?

News March 30, 2025

வாகனம் ஓட்ட மிகவும் ஆபத்தான இடம் இதுதான்..

image

வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் ஆபத்தான நாடாக தென்னாப்பிரிக்கா உள்ளதாக அமெரிக்காவின் Zutoby சுட்டிக்காட்டியுள்ளது. இந்தப் பட்டியலில், இந்தியா 5வது இடத்தை பிடித்துள்ளது. அதே நேரத்தில், வாகனம் ஓட்டுவதற்கான மிகவும் பாதுகாப்பான நாடாக நார்வே உள்ளது. உலகளவில், கடந்த ஆண்டை (8.9 %) விட இந்த ஆண்டு (6.3 %) சாலை விபத்துகளின் சராசரி எண்ணிக்கை குறைந்திருக்கிறதாம். உங்க ஊரு ரோடு எப்படி இருக்கு?

News March 30, 2025

BREAKING: ஏப்ரல் 1 முதல் கட்டணக் குறைப்பு

image

பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைப்பு தொடர்பாக சற்றுமுன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ₹10 லட்சம் வரை வீடு, மனை, விளை நிலம் போன்ற அசையா சொத்துகள் பெண்கள் பெயரில் வாங்கினால் பதிவு கட்டணம் குறைக்கப்படும். இந்த கட்டணக் குறைப்பு நாளை மறுநாள் முதல் அமலுக்கு வருவதாகவும் அரசு அறிவித்துள்ளது.

News March 30, 2025

ஆட்சியைப் பற்றி திமுகவுக்கு கவலையில்லை: T.R.B ராஜா

image

திமுக தான் தவெகவின் எதிரி என்று விஜய் பேசியதற்கு அமைச்சர் T.R.B. ராஜா பதிலடி கொடுத்துள்ளார். நாங்கள் ஆட்சியைப் பற்றி எல்லாம் கவலைப்பட்டதில்லை. மக்களைப் பற்றியே கவலைப்படுகிறோம் எனக் கூறிய அவர், இன்றைக்கு வந்தவர்கள் எல்லாம் திமுகதான் எதிரி என்று திரிகின்றனர். எப்போதும் எல்லோருக்கும் திமுக மட்டுமே போட்டி; திமுக மக்கள் பக்கம் நிற்பதுபோல், மக்களும் திமுக பக்கம் நிற்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

News March 30, 2025

உன்ன வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா

image

18 வருசங்களை சினிமாவில் கடந்து விட்டாலும், இன்னும் தமன்னா மீது ரசிகர்களுக்கு அப்படி ஒரு கிரேஸ் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ‘மில்க்கி ப்யூட்டி’ என வர்ணிக்கப்படும் தமன்னா, சோஷியல் மீடியாவிலும் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அண்மையில் அவர் வெளியிட்டுள்ள போட்டோஸ், நெட்டிசன்களை திக்குமுக்காட வைத்துள்ளது. பலரும் ‘எங்க ஹார்ட்டை திருப்பி கொடுங்க மேடம்’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

News March 30, 2025

197 ரன்களை சேஸ் செய்ய முடியாத 5 முறை சாம்பியன்கள்?

image

CSK, MI அணிகள் இல்லாத IPL தொடரை யாராலும் யூகித்து விட முடியாது. இரு அணிகளும் செய்த சம்பவங்கள் அப்படி. ஆனால், இந்த சீசனில் இரு அணிகளுமே கொஞ்சம் தடுமாறுகின்றன. சென்னையிலேயே 17 ஆண்டுகள் கழித்து தோற்ற CSK, ஒருமுறை கூட அகமதாபாத்தில் GTயை வீழ்த்த முடியாத MI என சற்று தடுமாறி வருகின்றன. இதில், கூடுதல் தகவல் இரு அணிக்களுக்குமே டார்க்கெட் 197 ரன்கள் மட்டுமே. இவர்களின் தடுமாற்றத்திற்கு என்ன காரணம்?

News March 30, 2025

பிறப்புறுப்பில் இரும்பு வாஷர் செலுத்திய கொடூரம்

image

ஆணின் பிறப்புறுப்பில் சிக்கியிருந்த இரும்பு வாஷர் பாதுகாப்பாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் காசர்கோடு அருகே 46 வயதுடைய ஒருவர் கடந்த 3 வாரங்களாக சிறுநீர் கழிக்க முடியாமல் அவதியடைந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள், டாக்டர்கள் அவருக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளனர். மதுபோதையிலிருந்தபோது யாரோ இதை செலுத்தியதாக அந்த நபர் கூறியுள்ளதுதான் கொடூரத்தின் உச்சம். இதைக் கேட்டு போலீசாரே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News March 30, 2025

அடுத்த முதல்வர் யார்: சர்ச்சையான கருத்துக்கணிப்பு

image

அடுத்த முதல்வர் யார் என்ற சி-வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு சர்ச்சையாக மாறியிருக்கிறது. ஸ்டாலினுக்கு 27% (முதலிடம்), விஜய் 18% (2வது இடம்), இபிஎஸ் 10% (3வது இடம்), அண்ணாமலை 9% (4வது இடம்) பெற்றுள்ளனர். ஆனால், இந்த சதவீதத்தை கூட்டிப் பார்த்தால் மொத்தம் 64% தான் வருகிறது. மீதி 36% மக்கள், யாருக்கு ஆதரவு தெரிவித்தார்கள்? அல்லது கருத்து கூறவில்லையா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

error: Content is protected !!