India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அக்னிவீர் திட்டத்தில் தேவைப்பட்டால் மாற்றம் செய்ய அரசு தயாராக உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டைம்ஸ் நவ் தொலைக்காட்சி கருத்தரங்கில் பேசிய அவர், “பாதுகாப்புப் படை இளம்தலைமுறையினரை கொண்டதாக இருப்பது அவசியம். எதிர்காலத்தில் அக்னிவீர் திட்டத்தில் சேருவோரின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும். தேவைப்பட்டால், அக்னிவீர் திட்டத்தில் மாற்றம் செய்வோம்” என்றார்.

தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை (மார்ச் 29) முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும். வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக் கூடும். ஏப்ரல் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில், தென் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள 171ஆவது படத்தின் டைட்டிலை, வரும் ஏப்ரல் 14ஆம் தேதி அன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. முன் தயாரிப்பு பணிகளுக்கு மட்டுமே 5 மாதங்கள் தேவைப்பட்ட நிலையில், வரும் ஜூன் மாதத்தில் இருந்து படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக இயக்குநர் லோகேஷ் தெரிவித்திருந்தார். ரஜினியை வைத்து இதுவரை எடுக்கப்படாத ஸ்டைலில் இப்படம் உருவாகவுள்ளதால், ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

பாஜகவில் இந்தாண்டு இதுவரை பிற கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என புதிதாக 80,000 பேர் சேர்ந்திருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதோர், அதிருப்தி தலைவர்கள் பிற கட்சிகளில் சேர்ந்து வருகின்றனர். பாஜகவில் 1 லட்சம் பேரை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் 80,000 பேர் சேர்ந்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் கூறியுள்ளன.

சூரியனால் தாமரையை எதுவும் செய்ய முடியாது என பாஜக வேட்பாளர் தமிழிசை தெரிவித்துள்ளார். தென் சென்னை தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட அவர், ” மக்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் நான் ஓடோடி வருவேன் என பல இடங்களில் பொதுமக்கள் நேரடியாக என்னிடம் கூறுகிறார்கள். மக்களுக்காக எப்போதும் நாங்கள் தெருவில் இருப்போம். இதற்கு முன்பு திமுக உறுப்பினர் நிறைவேற்றாத அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவேன்” எனக் கூறினார்.

‘வில்லேஜ் குக்கிங் சேனல்’ யூடியூபர் பெரியதம்பி, இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யூடியூபில் 2.5 கோடி சந்தாதாரர்களை கொண்ட இந்த சேனல், உலக முழுவதும் பிரபலமானது. ‘இன்னைக்கு ஒரு புடி’ என்ற இவர்களது வசனத்துக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், குழுவின் சமையல் கலைஞரான பெரியதம்பிக்கு இன்று திடீரென இதய பாதிப்பு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு எம்.பி கணேசமூர்த்தியின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியவர் கணேசமூர்த்தி என்பதை நினைவுகூர்ந்த முதல்வர், அவரது மறைவு செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாக உருக்கமாக கூறியுள்ளார். மேலும், அவர் பிரிவால் வாடும் மதிமுக தொண்டர்கள், திராவிட இயக்க பற்றாளர்களுக்கு என்னுடைய இரங்கல் என்றும் தெரிவித்துள்ளார்.

மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், சிறப்பாக விளையாடிய ஹென்ரிச் கிளாசனுக்கு ஐதராபாத் அணி சார்பில் மெடல் வழங்கப்பட்டுள்ளது. 4 பவுண்டரி, 7 சிக்சர்கள் என மொத்தம் 80(34) ரன்கள் குவித்த அவர், அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதனால் ஐதராபாத் அணி சார்பில் இன்று அவருக்கு, பெரிய மெடல் ஒன்று வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன், அதிக ரன் குவித்தவருக்கான ஆரஞ்சு கேப்பையும் பெற்றுள்ளார்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் வாரத்தின் 7 நாட்களும் மோடி தமிழகத்தில் இருப்பதாக கனிமொழி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் மழை பாதிப்பு வந்த போதெல்லாம் தமிழ்நாட்டுக்கு வர மறந்த மோடி, தேர்தல் வந்ததும் வருகிறார். பாஜகவுக்கு தேர்தலில் வாக்கு கிடைத்தால் மட்டும் போதும். தமிழக மக்களின் நலன்களில் அவர்களுக்கு சிறிதும் அக்கறை இல்லை” என விமர்சித்தார்.

அருணாச்சலின் 3 மாவட்டங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திராப், சாங்லாங், லாங்டிங் மாவட்டங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் ஏப்.1 முதல் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 3 காவல்நிலைய பகுதிகளிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.