India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மோகன்லாலின் எம்புரான் படம் வியாழக்கிழமை வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தில் குஜராத் கலவரம் போன்ற காட்சிகள் இடம்பெற்றதால் சர்ச்சை எழுந்தது. இதனால் படத்தில் இருந்து 17 காட்சிகளில் திருத்தம் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம். படத்தின் புதிய வெர்ஷன் ஏப்ரல் 2ஆம் தேதியில் இருந்து திரையிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே பயணிகள் ரயில் தடம் புரண்டது. பெங்களூருவிலிருந்து கவுகாத்தி நோக்கிச் சென்ற காமாக்யா எக்ஸ்பிரஸின் 2 பெட்டிகள் தடம் புரண்டதாகவும், இதனால் பயணிகள் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
கணவருக்கு பாலியல் உறவு மீது ஆர்வம் இல்லை, ஆன்மீகத்தில் மட்டுமே ஆர்வம் இருப்பதால் விவாகரத்து வழங்க கோரி பெண் ஒருவர் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனைவிக்கு உணர்ச்சி ரீதியான துன்பத்தை கொடுப்பது, மனரீதியான கொடுமைக்கு சமம். குடும்ப வாழ்க்கையில் ஆர்வமின்மை என்பது ஒரு கணவராக தனது பொறுப்புகளை நிறைவேற்றவில்லை என்பதற்கான அறிகுறி எனக்கூறி விவாகரத்து வழங்கியுள்ளது.
நடிகராக மட்டுமே பெரிதாக அறியப்படும் மனோஜ் பாரதிராஜா, பல திறமைகளையும் வைத்திருந்திருக்கிறார். தாஜ் மஹால் படத்தில் வரும் ‘ஈச்சி எலுமிச்சி’ நல்லா கேட்டுப்பாருங்க. அது மனோஜ் பாடிய பாடல் தான். படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமான், மனோஜின் வாய்ஸை கேட்டு இம்பிரஸ் ஆகி, அவருக்கு இந்த வாய்ப்பை வழங்கி இருக்கிறார். இன்று மனோஜ் நம்முடன் இல்லை என்ற போதிலும், சினிமா மூலம் அவர் காலத்திற்கும் பேசப்படுவார்.
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பகல் 12.38 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவாகியுள்ளது. 2 நாட்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மியான்மர் உருக்குலைந்து உள்ளது. 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.
சல்மான் கான் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் இன்று ‘சிக்கந்தர்’ படம் வெளியாகி இருக்கிறது. பெரிய கலெக்ஷனை இப்படம் செய்யும் என வழி மேல் விழி வைத்து காத்திருந்த படக்குழு தலையில், பெரிய இடி விழுந்துள்ளது. பட ரிலீசின் 5 மணி நேரத்திற்கு முன்பே ஆன்லைனில், Tamilrockers மற்றும் MovieRules தளங்களில் படம் வந்துவிட்டது. இதனால், படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இப்படி படம் பார்ப்பதை ஊக்குவிக்க வேண்டாம்!
திமுகவுக்கு எதிரான விஜய்யின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாக சீமான் கூறியுள்ளார். வரும் தேர்தலில் தவெக தனித்துப் போட்டியிட்டு திமுகவை வீழ்த்தும் என விஜய் பேசியது வரவேற்கத்தக்கது என்ற அவர், தான் பிரபாகரனை போல தனித்தே நின்று போட்டியிடுவேன் என்றார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் நாங்கள்(நாதக) வாங்கப்போவது திமுக, அதிமுக வாக்குகள் அல்ல, மக்களின் வாக்குகள் எனத் தெரிவித்தார்.
மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குறித்த நேரத்தில் மும்பை அணி பந்து வீசி முடிக்கவில்லை. இதனால் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் அபராதம் விதிக்கப்படும் முதல் கேப்டன் ஹர்திக்தான். நேற்றைய ஆட்டத்தில் தோல்வி கண்ட மும்பை புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
சி.வோட்டர் கருத்துக்கணிப்பில், 36 லட்சம் வாக்குகள் பெற்று, அரசியல் அங்கீகாரம் பெற்ற நாதக பெயர் ஏன் இடம்பெறவில்லை என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அது கருத்துக்கணிப்பு அல்ல, கருத்துத் திணிப்பு என்று விமர்சித்த அவர், நான் செய்வது அரசியல் புரட்சி, பிசினஸ் அல்ல. எங்களுடைய எதிரி யார் என தீர்மானித்து தான் களத்திற்கு வந்திருக்கிறோம். அதில் எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை எனத் தெரிவித்தார்.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் நாளை கொண்டாடப்படும் நிலையில், மாநிலம் முழுவதும் கால்நடை சந்தைகள் களைகட்டி வருகின்றன. சிறிய ஆடுகள் முதல் பெரிய ஆடுகள் வரை விலை ₹10,000 முதல் ₹30,000 வரை விற்கப்படுகிறது. அதுவும், ஒரு ஆட்டுக்கு குறைந்தபட்சம் ₹3000 முதல் ₹5000 வரை விலை அதிகரித்துள்ளது. அதேபோல், கோழி விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.