India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு, ஒரே நாளில் ரூ.8,300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. டிரம்ப் மீடியா அன்ட் டெக்னாலஜி குழுமம், 2023ஆம் ஆண்டில் 58 மில்லியன் டாலர் இழப்பை சந்தித்ததாகவும், வருவாய் குறைந்திருப்பதாகவும் அமெரிக்க பங்குச்சந்தையில் அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு நேற்று 21 சதவீதம் சரிந்தது. இதனால் டிரம்புக்கு ரூ.8,300 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

₹ 2,000 கோடி போதைப் பொருள் கடத்தல் வழக்கு விசாரணைக்காக, டெல்லியில் உள்ள தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இயக்குநர் அமீர் ஆஜராகியுள்ளார். இந்த வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். அவர் தயாரித்த படத்தை இயக்கிய அமீருக்கு, இந்த வழக்குத் தொடர்பான விசாரணையில் இன்று ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதை ஏற்று, அமீர் இன்று நேரில் ஆஜரானார்.

காஷ்மீரின் ஒரு பகுதியை பாக். ஆக்கிரமித்து வைத்திருக்க நேருவே காரணமென அமித் ஷா விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், “போரில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை தோற்கடித்து கொண்டிருந்தபோது தன்னிச்சையாக நேரு சண்டை நிறுத்தம் செய்தார். 2 நாள்களுக்கு பிறகு இதை செய்திருந்தால், காஷ்மீர் முழுவதும் இந்தியாவிடம் இருந்திருக்கும். அவர் செய்த தவறால், காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டது” என்றார்.

இரண்டாம் உலகப் போரின் போது இந்திய ராணுவத்தில் பணியாற்றிய வீரர் சுபேதார் தன்சேயா தனது 102வது வயதில் காலமானார். மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த இவர், சில காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்ததாகவும், மார்ச் 31-ஆம் தேதி அவர் உயிரிழந்ததாகவும் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அசாம் படைப்பிரிவைச் சேர்ந்த தன்சேயா, கோஹிமா போரில் முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸை வீழ்த்த 3 முன்னாள் முதல்வர்களை களம் இறங்கியுள்ளனர். 28 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் பாஜக-காங் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் காங்கிரஸை வீழ்த்த முன்னாள் முதல்வர்கள் பசவராஜ் பொம்மை, ஜெகதீஷ் ஷெட்டர், குமாரசாமி உள்ளிட்டோர் தேர்தலில் களம் காண்கிறார்கள். லிங்காயத்து வாக்குகளை ஷெட்டரும், ஒக்கலிகா வாக்குகளை குமாரசாமியும் ஈர்க்க அதிக வாய்ப்புள்ளது.

‘டாடா’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஸ்டார்’. யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில், கவினின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் விக்ரனன் அசோக் இயக்கத்தில் உருவாக உள்ள இப்படத்தில், கவினுடன், நடிகை ஆண்ட்ரியா கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

பாஜக கூட்டணியில் நாம் தமிழர் கட்சியை இணைக்க அக்கட்சி நிர்வாகிகள் தன்னிடம் ஆசை வார்த்தைகளை கூறியதாக சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து தேனியில் பேசிய அவர், “பாஜக கூட்டணியில் நாம் தமிழர் கட்சி இணைந்திருந்தால் ரூ.500 கோடியும், 10 சீட்டுகளும் கிடைத்திருக்கும். அவர்களுடன் கூட்டணி வைக்காததால் நான் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை. பாஜகவின் கட்சி அலுவலகமாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது” என்றார்.

கடந்த ஒரு வாரமாக ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்த நிலையில், இன்று கிடுகிடுவென்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹200 குறைந்து ₹51,440க்கும், கிராமுக்கு ₹25 குறைந்து ₹6,430க்கும் விற்பனையாகிறது. அதே நேரம், வெள்ளியின் விலை 40 காசுகள் அதிகரித்து கிராம் ₹82க்கும், கிலோ வெள்ளி ₹400 அதிகரித்து ₹82,000க்கும் விற்பனையாகிறது.

ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மும்பைக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இது அந்த அணியின் 3வது தொடர் வெற்றி. இதனால் புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. 2 போட்டிகளில் விளையாடி அவற்றை வென்ற கொல்கத்தா 2வது இடத்தில் உள்ளது. 3 போட்டிகளில் விளையாடி 2இல் மட்டும் வென்ற சிஎஸ்கே 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து திரும்ப பெற மத்திய அரசு முயற்சிகள் எடுத்து வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை அளித்துள்ள பேட்டியில், “கச்சத்தீவு, இந்தியாவுக்கு மீண்டும் வேண்டும். இதுவே பாஜகவின் நிலைப்பாடு. இந்திய மீனவர் நலனைக் காக்க, கச்சத்தீவை மீண்டும் பெற மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.