news

News March 30, 2025

ஷேன் வார்னே மரணத்துக்கு இதுதான் காரணமா?

image

கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே, தாய்லாந்து டூருக்கு கடந்த 2022இல் சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக கூறப்பட்டது. ஆனால், அவர் இறந்து கிடந்த அறையில் ‘காமக்ரா’ என்ற செக்ஸ் எழுச்சிக்கான மாத்திரைகள் இருந்ததை ஆஸ்திரேலிய போலீஸ் அதிகாரி ஒருவர் தற்போது கூறியுள்ளார். வார்னே பெயருக்கு களங்கம் ஏற்படக் கூடாது என்பதால் போலீசார் இதை மறைத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News March 30, 2025

Breaking: பயங்கர நிலநடுக்கம். சுனாமி எச்சரிக்கை

image

பசிபிக் பெருங்கடலில் இருக்கும் ‘டொங்கா’ நாட்டு தீவுகள் அருகே, மாலை 6 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் 7.1ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால், அப்பகுதியைச் சுற்றியிருக்கும் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

News March 30, 2025

ஆஸ்பெஸ்டாஸ் சீட்டால் புற்றுநோய்.. KV-இல் தடை

image

மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி வெளியிட்ட பதிவில், ஆஸ்பெஸ்டாஸ் புற்றுநோயை உண்டாக்கக்கூடியது என 65-க்கும் மேற்பட்ட நாடுகள் தடை விதித்துள்ளதாக கூறியுள்ளார். அந்த வகையில், நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா மற்றும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் புதிய கட்டுமானம் அல்லது புதுப்பித்தலில் ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News March 30, 2025

நாளை விடுமுறை இல்லை.. எல்ஐசி ப்ரீமியம் கட்டலாம்

image

இன்று (மார்ச் 30) ஞாயிறு விடுமுறை தினம். அதேபோல், நாளை (மார்ச் 31) ரமலான் பொது விடுமுறை. ஆனால் நிதி ஆண்டு நிறைவையொட்டி, இன்றும், நாளையும் நாடு முழுவதும் எல்ஐசி கிளை அலுவலகங்கள் திறந்திருக்கும் என்றும், ஆதலால் இன்றும், நாளையும் வாடிக்கையாளர்கள் எந்த சிரமமும் இன்றி எல்ஐசி அலுவலகங்களில் ப்ரீமியம் கட்டலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்க.

News March 30, 2025

பழைய ஸ்டார்க் தெரியுமா? வீரனுக்கு சாவே இல்லை..

image

ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் தன் வேகத்தாலும், ஸ்விங் பவுலிங்காலும் எதிர் அணியை மிரள வைப்பதில் வல்லவர். காயம், பார்ம் அவுட் போன்ற காரணங்களால் சமீப காலமாக ஸ்டார்க் பழையபடி விளையாடவில்லை. ஆனால் இன்றைய IPL ஆட்டத்தில் ஸ்டார்க்கை பழைய வெறியுடன் காண முடிந்தது. SRHக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தான் யார் என்பதை மீண்டும் உலகறிய செய்தார். பர்ப்பிள் கேப்பையும் வென்றார்.

News March 30, 2025

அடுத்த 2 நாள்களுக்கு விடுமுறை

image

தமிழ்நாட்டில் இன்று தொடங்கி மூன்று நாள்களுக்கு அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 30 – யுகாதி, மார்ச் 31 – ரம்ஜான், ஏப்ரல் 1 – கணக்கு முடிப்பு என மூன்று நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால், சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் பலர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். இந்த தொடர் விடுமுறையில் நீங்கள் என்ன திட்டமிட்டுள்ளீர்கள் என கமெண்ட்டில் சொல்லுங்க.

News March 30, 2025

ஏப்ரல் 1 முதல் வரும் மாற்றங்கள்

image

* கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு.
* மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய வருமான வரி ஸ்லாப்கள் அமலாகின்றன.
* மத்திய அரசு ஊழியர்களுக்கு பயன் தரும் UPS திட்டம் அமலாகிறது.
* பாதுகாப்புக்காக பல புதிய அம்சங்களை UPI கொண்டு வருகிறது.
* GST வரி செலுத்துவோருக்கு MFA (Multi Factor Authentication) கட்டாயமாகிறது.

News March 30, 2025

உலகில் அதிக மது அருந்தும் நாடுகள்

image

உலகிலேயே மால்டோவா என்ற நாட்டில்தான் மக்கள் அதிகம் மது அருந்துவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நாட்டில், குடிமகன் ஒருவர் சராசரியாக ஓராண்டுக்கு 500 பாட்டில் பீர் குடிக்கிறாராம். இந்தப் பட்டியலில் இரண்டாவது, மூன்றாவது இடத்தில் லிதுவேனியா, செக் குடியரசு ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா இதில் 103ஆவது இடத்தில் உள்ளது. இஸ்லாமிய நாடுகள் கடைசி இடங்களில் உள்ளன.

News March 30, 2025

விஜய்யின் முடிவுக்கு சீமான் வரவேற்பு

image

தனித்து களம் கண்டு திமுகவை வீழ்த்துவோம் என்ற விஜய்யின் முடிவினை வரவேற்பதாக சீமான் தெரிவித்துள்ளார். விஜய் கட்சி தொடங்கியபோது, அவர் சீமானுடன் கூட்டணி சேருவார் என்று சொல்லப்பட்டது. நாளடைவில், அது பொய்த்துப் போகவே, விஜய் தனித்து தேர்தலை காணவிருக்கிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. தவெக, நாதக இரு கட்சிகளும் தனித்து களம் காண்பது யாருக்கு லாபம்?

News March 30, 2025

ஆசிரியர்களை அனுப்ப பள்ளிகளுக்கு உத்தரவு

image

பொதுத் தேர்வு பணிக்கு ஆசிரியர்களை அனுப்பவில்லையேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகளை தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. தேர்வு பணிகளில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுவர். ஆனால் சில மாவட்டங்களில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனுப்பப்படுவதில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

error: Content is protected !!