India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் நாளை (மார்ச் 31), ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். ஷவ்வால் மாதப் பிறை தென்படாததால், ரம்ஜான் கொண்டாடப்படுமா என்ற சந்தேகம் நிலவி வந்தது. இந்நிலையில், தற்போது அந்தப் பிறை தென்பட்டதால் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மூட்டை அரிசி வாங்குவதை மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இதை வைத்து ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. 26 கிலோ மூட்டையில் கால் கிலோ வரை பிளாஸ்டிக் அரிசியை கலந்து விற்கிறது. வேக வைக்கும் போதும், சுத்தம் செய்யும் போதும் பிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடித்து தவிர்த்து விட வேண்டும். இல்லையேல் அதை சாப்பிடும் ஆபத்து உள்ளது. உங்களுக்கு இந்த அனுபவம் உண்டா?
திமுகவுக்கு ஆதரவாக தான் செயல்படுவதாக தவெகவின் ஆதவ் அர்ஜுனா கூறியதற்கு, பதிலளித்துள்ள அண்ணாமலை, திமுகவுக்கு எதிராக பேசி அதிக அவதூறு வழக்குகளை எதிர்கொண்டிருப்பவன் தான் என்றும், சிலரை போல மாமனார் காசில், வாழ்பவனல்ல, லாட்டரி விற்ற காசில் அரசியலுக்கு வந்தவனல்ல என்றார். மேலும், பவருக்காக தான் அரசியலுக்கு வரவில்லை எனவும், மக்களுக்காக தான் வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கிரகங்களின் நகர்வுகளின்படி, வரும் ஏப்ரல் மாதம் 4 ராசிக்காரர்கள் அடித்து தூள் கிளப்பப் போவதாக ஜோதிடர்கள் கணித்துள்ளனர். மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய ராசிகள்தான் அவை. தொழிலில் சிறந்து விளங்குவீர்கள். பயணம் ஆதாயம் தரும். ஆரோக்கியம் மேம்படும். மன அழுத்தம் குறையும். ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் ஈடுபட இது சரியான நேரம். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
2022 முதல் 2025ம் நிதியாண்டு வரை திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை (ITR-U )தாக்கல் செய்ய IT அவகாசம் அளித்திருந்தது. இந்த அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. நாளைக்குள் தாக்கல் செய்தால், 2022-23க்கு 50% கூடுதல் வரி மற்றும் வட்டி, 2023-24, 2024-25க்கு 25% கூடுதல் வரி மற்றும் வட்டி. அதன்பிறகு தாக்கல் செய்தால் 2024-25 தவிர்த்து அனைத்து கணக்குக்கும் கூடுதலாக 50% வரி மற்றும் வட்டி செலுத்த வேண்டும்.
ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்புக்கு சட்டம் மூலம் உத்தரவாதம் தரப்பட்டுள்ளது. ரயில் பயணத்தின் போது மது அருந்தக் கூடாது, அதேபோல் மது அருந்திவிட்டு இடையூறு செய்யக் கூடாது என்று ரயில்வே சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறும் பயணிகளுக்கு ரயில்வே சட்டத்தின் 145ஆவது பிரிவின்கீழ் அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. SHARE IT.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், சிஎஸ்கே அணி பவுலிங்-ஐ தேர்வு செய்துள்ளது. புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் இருக்கும் சென்னை அணியும் கடைசி இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணியும் கவுஹாத்தி மைதானத்தில் மோதுகின்றன.
படிப்பு முடிந்த பிறகும், அப்பாவின் சம்பளத்தில் ஊதாரித்தனமாக செலவு செய்து ஊர் சுற்றும் பல இளைஞர்களுக்கு மத்தியில், இப்படிப்பட்ட சில பெண்களும் இருக்கவே செய்கிறார்கள். சீனாவை சேர்ந்த யங் (18) என்ற இந்த இளம்பெண், தனது வீட்டிற்கு மாதாமாதம் பணம் அனுப்ப வேண்டும் என்பதற்காக, தான் வேலை பார்க்கும் ஃபர்னிச்சர் கடையின் கழிவறையை, இரவு நேரத்திற்கு மட்டும் ரூ.600-க்கு வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கிறாராம்.
10,12ம் வகுப்புக்கு 2025-26ம் கல்வியாண்டுக்கான புதிய பாடத்திட்டத்தை CBSE வெளியிட்டுள்ளது. அதில் 10ம் வகுப்புக்கு இனி பிப்ரவரி, ஏப்ரலில் 2 முழு ஆண்டு தேர்வு எனக் கூறப்பட்டுள்ளது. 10ம் வகுப்பிற்கு 80 மதிப்பெண்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்படும். மீதியுள்ள 20 மதிப்பெண்கள் இன்டர்னல் ASSESSMENT மூலம் அளிக்கப்படும். குறைந்தது 33% மதிப்பெண் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Google தனது பயனாளர்களுக்கு 15ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் வசதியை வழங்கி வருகிறது. இதன்மூலம் நீங்கள் உங்களது புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் முக்கிய தரவுகளை சேமித்து வைத்துக் கொள்ளலாம். ஆனால் Google-க்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் 50 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் வசதியை ஜியோ உரிமையாளர் முகேஷ் அம்பானி தற்போது வழங்குகிறார். தனது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இதனை இலவசமாக வழங்குகிறார்.
Sorry, no posts matched your criteria.