India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஸ்பெயின் மாஸ்டர்ஸ் சூப்பர் 300 பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அபார வெற்றி பெற்றுள்ளார். இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான 2ஆவது சுற்றுப் போட்டியில், இந்தியா – தைவான் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், சிந்து 21-14, 21-12 என்ற நேர் செட் கணக்கில் தைவான் வீராங்கனையை வீழ்த்தி மகத்தான வெற்றியை பதிவு செய்ததோடு, காலிறுதிச் சுற்றுக்கும் முன்னேறினார்.

இந்தியாவின் பணக்கார பெண் தொழிலதிபரும், JSW ஸ்டீல் குழுமத் தலைவருமான சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார். இவர் அடுத்ததாக பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சாவித்ரி ஜிண்டாலின் மகனும், முன்னாள் காங்., எம்.பியுமான நவீன் ஜிண்டால் பாஜகவில் இணைந்த நிலையில், ஹரியானாவின் குருக்ஷேத்திர தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரஜினி நடிக்கும் 171ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரஜினிக்காக ஒன்றரை வருடமாக எழுதப்பட்ட இந்தக் கதையில், இதுவரை பார்த்திராத ரஜினியை பார்ப்போம் என சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். அதற்கேற்றவாறு, படத்தின் போஸ்டர் அமைந்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் டைட்டில் ஏப்ரல் 22 அன்று வெளியாகவுள்ளது.

சூர்யகுமார் யாதவால், இன்னும் ஒரு சில ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க முடியாது என தகவல் வெளியாகியுள்ளது. குடலிறக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர், தற்போது முழு உடல் தகுதியை பெரும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் ஐபிஎல் தொடரின் தொடக்க ஆட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என தெரிவித்திருந்தார். தற்போது உடல் நலம் தேறி வரும் அவர், மேலும் ஒரு சில போட்டிகளில் கலந்து கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிபிட் தொகுதி மக்களுடனான பந்தம், தனது கடைசி மூச்சு வரை தொடருமென பாஜக எம்.பி வருண் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக வாய்ப்பு மறுத்த நிலையில், அவர் மக்களுக்கு எழுதிய கடிதத்தில், ‘எம்.பி., பதவி வேண்டுமானால் முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால், உங்கள் மகனாக வாழ்நாள் முழுவதும் தொகுதிக்கு சேவைச் செய்ய கடமைப்பட்டுள்ளேன். உங்களுக்காக என் வீட்டுக் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்’ என்றார்.

2023-24ஆம் நிதியாண்டின் கடைசி வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவடைந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 639 புள்ளிகள் உயர்ந்து 73,635 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 219 புள்ளிகள் உயர்ந்து 22,343 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. இதனால் முதலீட்டாளர்கள் வசமுள்ள பங்குகளின் மதிப்பு, ஒரே நாளில் ₹3 லட்சம் கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது.

பிளஸ் 2 கணித வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக மாணவர்களுக்கு 13 மதிப்பெண்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 19ஆம் தேதி நடைபெற்ற கணிதப்பாடத்திற்கான வினாத்தாளில் கேள்வி எண் 17, 25 மற்றும் 47 ஆகியவை தவறாக கேட்கப்பட்டிருந்ததாக கணித ஆசிரியர்கள் தேர்வுத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர். எனவே அந்த கேள்விகளுக்கு விடையளிக்க முயன்ற மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படுமென கூறப்படுகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 2D எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படமானது, சூர்யாவின் 44ஆவது படமாகும். மரத்தில் ரத்தம் வடியும் அம்பு மற்றும் காட்டுத் தீ எரியும் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், #LoveLaughterWar என்ற ஹேஷ்டேகும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

மறைந்த நடிகர் விவேக்கின் மூத்த மகளுக்கு எளிய முறையில் திருமணம் முடிந்தது. நகைச்சுவையால் பலரை சிரிக்க வைத்து கொண்டாடிய நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக 2021இல் உயிரிழந்தார். இந்நிலையில், அவரது மூத்த மகளான தேஜஸ்விக்கு, சிரஞ்சீவி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. நெருங்கிய சொந்தங்களுக்கு மத்தியில் நடந்த இந்தத் திருமணத்தில், தந்தையின் விருப்பத்திற்கு ஏற்ப அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு தவறாக இருப்பதாக அதிமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறது. வழக்கமாக Non Judicial முத்திரைத் தாளில்தான் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், அண்ணாமலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக் கூடிய India Court Fee முத்திரைத் தாளில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்திருக்கிறார். இதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லவிருப்பதாகவும் அதிமுக தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.