news

News March 31, 2025

தேசியத்தின் அடையாளம் RSS: பிரதமர்

image

சனாதன தர்மம், ஒற்றுமை, தேசியத்துவத்தின் அடையாளமாக RSS திகழ்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் அழிவற்ற கலாசாரத்தில் ஆலமரமாக திகழ்வதோடு, நவீன காலத்தின் சவால்களுக்கு தீர்வுகளும் கூறுவதாகவும், கல்வி, சுகாதாரம், பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட பல துறைகளில் RSS-ன் சேவைப்பணிகள் மகத்தானது எனவும் பாராட்டியுள்ளார். மேலும், RSS தன்னார்வலர்கள் தன்னலமின்றி பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

News March 31, 2025

பான் இந்தியா ஹீரோவாகும் VJS!

image

தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கும் பான் இந்திய படத்தில், விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதியை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை பார்க்காத விஜய் சேதுபதியை இப்படத்தில் பார்க்கலாம் என படக்குழு தெரிவித்துள்ளது. பிசினஸ் மேன், டெம்பர், இஸ்மார்ட் ஷங்கர் என தெலுங்கில் பல ஹிட் படங்களை பூரி ஜெகன்னாத் இயக்கியுள்ளார்.

News March 31, 2025

SRH குற்றச்சாட்டுகளுக்கு HCA ரியாக்‌ஷன்

image

<<15944222>>SRH<<>> மற்றும் ஹைதராபாத் கிரிக்கெட் அசோசியேஷனின் (HCA) நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சிலர் தவறான தகவல்களைப் பரப்புவதாக HCA குற்றஞ்சாட்டியுள்ளது. SRH நிர்வாகத்திடம் இருந்து இதுவரை எந்த மெயிலும் வரவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது. மேலும், சமூக ஊடகங்களில் வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளது. SRH-யிடம் இலவச டிக்கெட் கேட்டு HCA மிரட்டுவதாக செய்திகள் வெளியாகின.

News March 31, 2025

ஆயுதங்களை கீழே இறக்கினால் தான் அமைதி: நெதன்யாகு

image

பணயக் கைதிகளை விடுவித்து ஆயுதத்தை கீழே இறக்கினால்தான், போர்நிறுத்த உடன்பாடு குறித்து பரிசீலிக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். டிரம்பின் திட்டத்தை செயல்படுத்த ஹமாஸ் அமைப்பு காசாவை விட்டு வெளியேற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். கத்தார், எகிப்து மத்தியஸ்தம் செய்து வைத்த போர்நிறுத்த உடன்படிக்கையை ஏற்றுக் கொள்வதாக ஹமாஸ் தெரிவித்த நிலையில், நெதன்யாகு இவ்வாறு கூறியுள்ளார்.

News March 31, 2025

‘வேட்டுவம்’ படத்தின் ஷூட்டிங் ஸ்டார்ட்

image

பா.ரஞ்சித் இயக்கும் ‘வேட்டுவம்’ படத்தின் ஷூட்டிங் காரைக்குடியில் தொடங்கியுள்ளது. தினேஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கிறார். மேலும், ஃபகத் பாசில், அசோக் செல்வன், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடிக்கின்றனர். கோல்டன் ரேயோம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2022 சர்வதேச கான் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது.

News March 31, 2025

தேஜாவு: அன்று நடந்தது இன்றும்..!

image

CSK vs RR மோதிய போட்டியில் சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. 2023 மற்றும் நேற்று நடந்த போட்டிகள் ஒரே மாதிரியான முடிவை எட்டியுள்ளன. 2023ல் CSK வெல்ல ஒரு ஓவருக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது, நேற்று 20 ரன்கள் தேவைப்பட்டது. 2 போட்டிகளிலும் தோனி, ஜடேஜா களத்தில் இருக்க, கடைசி ஓவரை சந்தீப் ஷர்மா வீசியுள்ளார். இந்த 2 போட்டிகளிலும் ராஜஸ்தான் அணியே வெற்றி பெற்றுள்ளது.

News March 31, 2025

நேதாஜி பொன்மொழிகள்

image

*சுதந்திரம் கொடுக்கப்படுவதில்லை. எடுக்கப்படுகிறது. *கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள். *ஒரு சிந்தனைக்காக மனிதன் இறக்கலாம். ஆனால் அவனது சிந்தனைகள் அதன் பின் 1000 பேரிடம் செல்லும். *வெற்றி தோல்வி முக்கியமில்லை, துணிந்து சண்டையிடுவதுதான் முக்கியம். *போராட்டம் இல்லாத வாழ்க்கை போர் அடித்து விடும். * வன்முறை என்பது மோசமானது தான். ஆனால், அடிமைத்தனம் வன்முறையை காட்டிலும் மோசமானது.

News March 31, 2025

இலவச டிக்கெட் கேட்டு SRHக்கு மிரட்டல்

image

ஹைதராபாத் கிரிக்கெட் அசோசியேஷனைச் (HCA) சேர்ந்த அதிகாரிகள் இலவச டிக்கெட் கேட்டு SRH நிர்வாகத்தை மிரட்டுவதாக அந்த அணியின் மேனேஜர் ஸ்ரீநாத் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்ந்தால், ஹைதராபாத்தில் தங்கள் அணி விளையாடாது எனவும், இது குறித்து BCCI, தெலங்கானா அரசுக்கு தெரிவிப்போம் எனவும் HCA பொருளாளருக்கு அவர் மெயில் அனுப்பியுள்ளார். மேலும், 2 ஆண்டுகளாக இந்த பிரச்னை தொடர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News March 31, 2025

Vodafone கொடுத்த ₹36,950 கோடி.. ஓகே சொன்ன அரசு

image

Vodafone Ideaவின் ₹36,950 கோடி மதிப்பிலான பங்குகளை கையகப்படுத்த மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. நிலுவையில் உள்ள ஸ்பெக்ட்ரம் ஏல நிலுவைத் தொகைக்கு ஈடாக, பங்குகளை பெற அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடனில் மூழ்கியுள்ள அந்நிறுவனத்தின் 22.6% பங்குகள் அரசிடம் உள்ள நிலையில், தற்போதைய அறிவிப்பின் படி அது 48.99% உயரும். இதன்மூலம், அந்நிறுவனத்தின் மிகப்பெரிய ஒற்றை பங்குதாரராக அரசு மாறும்.

News March 31, 2025

நிலநடுக்கத்தின் மத்தியிலும் தாக்குதல்

image

நிலநடுக்கத்தால் 1,700 மாண்ட நிலையிலும், மியான்மர் ராணுவம் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்துவதாக, அந்நாட்டின் கிளர்ச்சி அமைப்பு கரேன் நேஷனல் யூனியன் குற்றஞ்சாட்டியுள்ளது. மீட்பு பணிகளுக்கு செய்யாமல், படைகளை அனுப்பி மக்களை தாக்குவதாக அந்த அமைப்பு சாடியுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு ராணுவ தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. கடந்த 2021 முதல் அங்கு ராணுவ ஆட்சி நடந்து வருகிறது.

error: Content is protected !!