news

News March 31, 2025

இன்று MI vs KKR: வெற்றி யாருக்கு?

image

12 ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் MI vs KKR அணிகள் இன்று மோத உள்ளன. மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது. தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வியடைந்த பிறகு நடைபெறும் போட்டி என்பதால், சொந்த மண்ணில் வெற்றி பெற மும்பை அணி முயற்சிக்கும். அதேபோல், 2 போட்டிகளில் 1 வெற்றி, 1 தோல்வி பெற்றுள்ள கொல்கத்தா அணி, இன்றைய போட்டியில் வெற்றியை பதிவு செய்ய முனைப்பு காட்டும்.

News March 31, 2025

தமிழ் கலாச்சாரத்தின் ஆன்மா கம்பராமாயணம்: ஆளுநர்

image

கம்பர் வெறும் கவிஞர் மட்டுமல்ல, பாரதத்தின் நாயகன் என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். தமிழ் கலாச்சாரத்தின் ஆன்மாவாக கம்பராமாயணம் உள்ளதாகவும், தமிழகத்தில் கம்பர் கொண்டாடப்படாதது வருத்தத்திற்குரியது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் கலாச்சாரம் அரசியல் மயமாகியுள்ளதாகவும், அரசியல் காரணங்களால் கலாச்சாரம் மறக்கடிப்படுவதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

News March 31, 2025

தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டிங் படங்கள்

image

தமிழ் சினிமாவில் மௌனப்படங்கள் வந்து கொண்டிருந்தபோது, 1931ல் முதல் பேசும்படமாக ‘காளிதாஸ்’ வெளியானது. பாடல்களே இல்லாத படமான ‘அந்த நாள்’, புதுமையான திரைக்கதை அம்சத்துடன் 1954ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. கருப்பு, வெள்ளை படங்களுக்கு மத்தியில், 1958 ஆண்டில் முதல் கலர் படமாக ‘நாடோடி மன்னன்’ ரிலீசானது. தமிழின் முதல் சயின்ஸ் பிக்‌ஷன் படமாக, 1963ஆம் ஆண்டு ‘கலை அரசி’ வெளியானது.

News March 31, 2025

விரைவில் மாதந்தோறும் மின் கணக்கீடு

image

மாதந்தோறும் மின் பயன்பாட்டை கணக்கீடு செய்யும் திட்டத்தை அடுத்த 6 மாதங்களுக்குள் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 3.04 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் திட்டத்திற்கு தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், அடுத்த 3- 4 மாதங்களுக்குள் தகுதியான நிறுவனங்களுக்கு பணி ஆணை வழங்கப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இதன்மூலம், மக்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேற உள்ளது.

News March 31, 2025

திமுகவை அகற்ற இதுதான் ஒரே வழி: கிருஷ்ணசாமி

image

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்றால், மற்ற கட்சிகள் எல்லாம் ஈகோவை விட்டுவிட்டு ஓரணியில் திரள வேண்டும் என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். கூட்டணி ஆட்சிக்கு யாரும் தயாராகவில்லை என்றால், திமுகவை ஆட்சியில் அமர்த்த மறைமுகமாக ஆதரவு தருகிறார்கள் என்றுதான் அர்த்தம் எனவும், யார் தலைமையில் கூட்டணி அமையும் என்பதெல்லாம் தற்போது சொல்ல முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

News March 31, 2025

மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?

image

இந்தியா- இலங்கை மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் உறுதியளித்துள்ளார். இலங்கை சென்ற ராமேஸ்வரம் மீனவப் பிரதிநிதிகள் அமைச்சர் ராமலிங்கத்தை சந்தித்து பேசினர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் மீனவர் பிரச்னைக்கு இரு நாட்டு அரசுகளும் நிரந்தர தீர்வு காண வேண்டும் அவர்கள் கோரிக்கை வைத்த நிலையில், அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

News March 31, 2025

IPL: டூப்ளசிஸ் தான் டாப்..!

image

SRHக்கு எதிரான நேற்றைய போட்டியில் டூப்ளசிஸ் 50 ரன்களை எடுத்தார். இதன்மூலம், 2020 முதல் IPL-ல் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் அவர் முதலிடத்தை பிடித்தார். 76 போட்டிகளில் 2,798 ரன்களை அடித்துள்ளார். இந்த பட்டியலில் ஷுப்மன் கில் (2,788) 2ஆம் இடத்திலும், கே.எல்.ராகுல் (2,719) 3ஆம் இடத்திலும், கோலி (2,433) 4ஆம் இடத்திலும் உள்ளனர். ரோஹித் ஷர்மா (1,738) 14ஆம் இடத்தை பிடித்துள்ளார்.

News March 31, 2025

திமுக பார்க்காத எதிரிகளா? ஸ்டாலின்

image

மத்திய பாஜக அரசின் சதித் திட்டங்களுக்கு தமிழ்நாடும், திமுகவும் முதன்மை தடையாக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனவே, அத்தடையை அகற்ற பல்வேறு வடிவங்களில் அவர்கள் எதிரிகளை உருவாக்குவார்கள் எனவும், நாடகங்களை நடத்தி திசை திருப்ப பார்ப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த மாதிரியான நாடகங்களை 75 ஆண்டுகளாக, திமுக பார்த்துக் கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

News March 31, 2025

கொழுப்பு, BP குறைய இதை சாப்பிடுங்க!

image

திராட்சையில் உள்ள ஹைட்ராக்ஸி சின்னமேட்ஸ் எனும் நுண்ணூட்டச்சத்து கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். நார்ச்சத்து, வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்த ப்ரோக்கோலி, கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது. அவகேடோவில் உள்ள மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு, LDL கொலஸ்ட்ராலை குறைக்கிறது. கீரை, முள்ளங்கி இலை, பாலக்கு, கொத்தமல்லி இலைகள் கொழுப்பு மற்றும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

News March 31, 2025

வம்பிழுத்த USA.. ஆயுதங்களை லோட் செய்த ஈரான்!

image

அணு ஆயுத ஒப்பந்தத்திற்கு சம்மதிக்காவிட்டால் குண்டு போடுவோம் என டிரம்ப் எச்சரித்த நிலையில், ஈரான் ஏவுகணைகளை தயார்நிலையில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலத்தடியில் உள்ள தங்களது ரகசிய ஏவுகணை நகரங்களில், ஏவுகணைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியாது என ஈரான் அதிபர் மசூத் முன்பே கூறியிருந்தார்.

error: Content is protected !!