India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து சமூகத்தை பிரிக்க நினைப்பதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸின் தேர்தல் அறிக்கை பாகிஸ்தான் தேர்தலுக்கான வாக்குறுதிகள் போல தெரிவதாக கூறிய அவர், மக்களை பிளவுப்படுத்த நினைக்கும் காங்கிரசின் மோசமான அரசியலை கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். தேசத்திற்காக பாஜக உழைப்பதாக கூறிய அவர், மக்கள் அனைவரும் பாஜகவில் இணைய விரும்புவதாக தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் பி.ஏ.பி., பாசன கால்வாயில் குளித்த சிறுமிகள் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று கால்வாயில் குளிக்கச் சென்ற திருப்பூரை சேர்ந்த சந்தோஷ், வீணா, ப்ரீத்தா ஆகியோர் வீடு திரும்பவில்லை. இன்று தேவனாம்பாளையம் அருகே 3 பேரின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன. 3 பேரின் உடல்களை மீட்ட போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை என்பது வாக்குறுதிகளின் பட்டியல் மட்டுமல்ல, அது நீதியை விரும்பும் தேசத்தின் குரல் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஜனநாயகத்தை காப்பதற்காக வாக்களிக்க வேண்டும் என்றார். ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகிறது. வாக்கு இயந்திரங்கள் மீதும் மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது என்றார்.

2047 வரை இந்தியா பொருளாதாரம் ஆண்டுக்கு 8% வளர்ச்சி அடையும் எனக் கூறிய நிதி ஆலோசகர் சுப்ரமணியன் கணிப்பை ஏற்க IMF மறுத்துள்ளது. இது குறித்து பேசிய IMF செய்தித் தொடர்பாளர் ஜூலி கோசாக், “பன்னாட்டு நிதியத்தின் இந்திய பிரதிநிதியாக சுப்ரமணியன் தெரிவித்த கணிப்புகள், முற்றிலும் அவருடைய தனிப்பட்ட கருத்து. நிதியத்தின் ஊழியர்களின் பணிகளிலிருந்து பிரதிநிதிகளது பணிகள் மாறுபடும்” எனக் குறிப்பிட்டுள்ளது.

கோடை வெயில் உச்சத்தில் இருக்கும்போது, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய Heat Stroke ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு Heat Stroke ஏற்பட வாய்ப்பு அதிகம். அவர்கள் உச்சி வெயிலின்போது வெளியிலேயே செல்லக்கூடாது. இளைஞர்களுக்குமே கூட உடலில் போதுமான நீர் இல்லையென்றால் Heat Stroke ஏற்படலாம் என்கிறார்கள்.

விஷாலுடன் இணைந்து நடித்திருக்கும் ‘ரத்னம்’ படம் தனக்குத் திருப்புமுனையாக அமையும் என பிரியா பவானி சங்கர் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார். ஊடகத்துறையிலிருந்து சினிமாவுக்கு வந்த அவருக்கு வருமானத்துக்குக் குறைவில்லை என்றாலும், குறிப்பிட்டுச் சொல்லத்தக்க வெற்றியாக ஒரு படம் அமையவில்லை. இந்த வருத்தத்தை ரத்னம், இந்தியன் 2 ஆகிய இரு படங்கள் போக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்தது முதலே ரசிகர்கள் அவர் மீது வெறுப்பை உமிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி, ‘மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதில் அவருடைய தவறு எதுவும் இல்லை. மும்பை அணி நிர்வாகம் தான் பாண்டியாவை கேப்டனாக நியமித்துள்ளது’ என பாண்டியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

மாநில உரிமைகள் குறித்த 16 வாக்குறுதிகளில் ஒன்றை ஏற்க பாஜக தயாரா? என காங். மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். சமூக நீதி, பொருளாதாரத்திற்கு தேர்தல் அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக கூறிய அவர், திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகள் ஒத்துப்போவது இயற்கையானது எனவும் தெரிவித்தார். பாஜக, பாமக போன்று கொள்கைகளில் முரண்பட்ட கட்சிகளுடன் காங். கூட்டணி அமைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

கார் விபத்தில் சிக்கிய பிரபல தமிழ் நடிகை அருந்ததி நாயர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 3 வாரமாக மருத்துவமனையில் செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சை பெற்றுவரும் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது சிகிச்சைக்கு திரையுலகினர் நிதி உதவி அளிக்க வேண்டும் என குடும்பத்தினர் உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளனர்.

SRH அணிக்கு எதிரான லீக் போட்டியில் CSK அணி தோற்றதற்கு ருதுராஜின் கேப்டன்ஷிப் தான் காரணமென முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியிருந்தார். அதற்கு முகமது கைஃப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “CSK அணி வென்றால், தோனி தான் காரணம் என்று பாராட்டுவதும், தோற்றால் அதற்கு ருதுராஜ் கெய்க்வாட் மீது பழி சுமத்துவதும் தவறு. இந்தப் போக்கை அனைவரும் கைவிட வேண்டும்” எனக் கூறினார்.
Sorry, no posts matched your criteria.