India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சுங்கக் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் (ஏப்ரல் 1 முதல்) அமலுக்கு வருகின்றன. அதன்படி மாநிலத்தில் உள்ள 74 சுங்கச் சாவடிகளில், 40 சுங்கச்சாவடிகளில் முதல் கட்டமாக இந்த கட்டண உயர்வு (5% முதல் 10% வரை) அமலுக்கு வருகிறது. இதன்படி, வாகனங்களின் வகைகளின் அடிப்படையில் 6 விதமான சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கப்படும். ஆண்டுதோறும் ஏப்ரல் 1, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
பாகிஸ்தானில் ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக, அமைதிக்கான நோபல் பரிசுக்கு அந்நாட்டின் Ex PM இம்ரான் கானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நார்வேயில் உள்ள பார்டியட் சென்ட்ரம் என்ற கட்சியுடன் தொடர்புடைய பாகிஸ்தான் உலக கூட்டணியின் உறுப்பினர்கள் அவரது பெயரை பரிந்துரைத்துள்ளனர். தற்போது சிறையில் இருக்கும் இம்ரான் கான், 2019-லும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.
இன்றைய நவீன வாழ்க்கை முறையில் சிலர் இரவு சாப்பாட்டை 11 மணிக்கு சாப்பிடுகின்றனர். ஆனால், இது மிகவும் தவறானது என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். சூரியன் மறைந்தவுடன் நமது உடலில் மெலடோனின் என்ற தூக்கத்தை வரவழைக்கும் ஹார்மோன் சுரக்கும் என்றும் அது அதிகம் சுரப்பதற்குள் உணவருந்திவிடுவது நல்லது என்றும் கூறுகின்றனர். தாமதமாக சாப்பிடுவது தூக்கத்தை கெடுக்கும்.
சேலத்தில் தெரு நாய் கடித்ததில் 9 வயது சிறுவன் கிஷோர் பரிதாபமாக உயிரிழந்தார். ஒரு வாரத்திற்கு முன்பு சிறுவனை தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. அதனை அவர் வீட்டில் சொல்லாமல் மறைத்திருக்கிறார். திடீரென நேற்று சிறுவனின் உடல்நலன் குன்றவே, பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். ஆனால், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘டெல்லி சென்றீர்களா?, தொடர் மௌனத்திற்கு காரணம் என்ன?’ என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, மௌனம் அனைத்தும் நன்மைக்கே என செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்கள் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில், செங்கோட்டையன் தனியாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில்தான், ஒற்றை வரியில் அவர் பதிலளித்துவிட்டு சென்றுள்ளார்.
கற்றாழை ஜூஸ் குடித்தால் பின்வரும் பலன்கள் கிடைக்கும்: * உடல் வெப்பத்தைத் தணியும் *நீர்க்கடுப்பு, நீர்தாரை எரிச்சல் நீங்கும் *மாதவிடாய் கோளாறுகள், உடல் வெப்பம், உடல் காந்தல் போன்ற பாதிப்புகள் குறைய உதவும் *கண்களில் எரிச்சலைப் போக்கும் *வயிற்றுப்புண் ஆற உதவும், வயிற்றின் எரிச்சலை சரிசெய்யும். *வெயிலில் இருந்தும் மூல நோயில் இருந்தும் நம்மைக் காக்கும் *மலச்சிக்கல் நீங்க உதவும்.
உடல் நலக்குறைவால் உயிரிழந்த தவெக செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் சூரிய நாராயணின் குடும்பத்தினரிடம் விஜய் போனில் இரங்கல் தெரிவித்துள்ளார். வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று மதியம் உயிரிழந்தார். அவரது உடல் செங்கல்பட்டு இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் நிலையில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
வளர்ப்பு நாயிடம் அத்துமீறியதால் இளம்பெண் ஒருவர் கம்பி எண்ணிய சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. ப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த குமின்ஸ்கி என்ற இளம்பெண், தன்னை Dog Mom என அழைத்துக் கொண்டு வளர்ப்பு நாயுடன் பாலியல் செயல்பாட்டில் ஈடுபட்ட வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இது சர்ச்சை ஆனதால், விலங்குடன் உடலுறவு வைத்தல், அதனை படம் பிடித்தல் ஆகிய குற்றங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
KKR அணிக்கு எதிரான இன்றைய IPL போட்டியில் மும்பை வீரர் அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். வெறும் 23 வயதாகும் இவருக்கு இதுதான் முதல் போட்டியாகும். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், முதல் போட்டியிலேயே, 18 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்திருக்கிறார். மும்பை அணி இவரை வெறும் 30 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
PF பணத்தை வெளியே எடுக்க விரும்புவோர், அதற்காக பல நாள்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதனை தீர்க்கும் வகையில், இனி 3 நாள்களில் பணம் எடுக்கும் வசதியை PF நிறுவனம் தொடங்கியுள்ளது. இத்திட்டம் நாளை (ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வருகிறது. அதிகபட்சம் ஒரு லட்ச ரூபாய் வரை பணம் எடுக்க விரும்புவோர், ஆன்லைனில் அப்ளை செய்தால் அடுத்த 3 நாள்களில் வங்கிக் கணக்கில் பணம் வந்துவிடும்.
Sorry, no posts matched your criteria.