India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மகாலட்சுமி திட்டம் என்ற பெயரில் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. இந்நிலையில் இத்திட்டம் சாத்தியமில்லாதது என்ற கருத்து எழுந்துள்ளது. அதேநேரம், தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ரூ.1,000, கர்நாடகாவில் கிரகலட்சுமி என்ற திட்டத்தில் ரூ.2,000 வழங்குவதை சுட்டிக்காட்டும் அரசியல் விமர்சகர்கள், இத்திட்டம் சாத்தியமே என்கின்றனர்.

4 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 12ஆம் தேதி வரை சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 4-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.10, 12-இல் நடைபெற இருந்த முழு ஆண்டுத் தேர்வுகள், ரம்ஜான் பண்டிகை காரணமாக ஏப்.22, 23க்கு ஒத்திவைக்கப்பட்டன. இதனால், தேர்வுக்கு ஆயத்தப்படுத்தும் வகையில் ஏப்ரல் 12 வரை மாணவர்களுக்கு பாடம் நடத்துமாறு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறாததால் அதிமுகவினர் நொந்துபோய் உள்ளனர் என திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் கிண்டலாக பேசியுள்ளார். தேசிய கூட்டணியில் இல்லாத அதிமுகவினர் ‘INDIA’ கூட்டணி பிரதமர் வேட்பாளர் குறித்து பேசுவது பரிதாபமாக உள்ளது. ஏற்கெனவே நொந்துபோய் இருக்கும் அதிமுகவினர் குறித்து பேச நாங்கள் விரும்பவில்லை. INDIA கூட்டணியைப் பொறுத்தவரை பிரதமர் வேட்பாளரை சரியான நேரத்தில் அறிவிப்பார்கள் என்றார்.

நாடு முழுவதும் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட 7 பேர் கும்பலை சிபிஐ கைது செய்துள்ளது. டெல்லி, ஹரியானா மாநிலங்களில் 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் கடத்தி வரப்பட்டு விற்பனைக்காக வைத்திருந்த 3 பச்சிளம் குழந்தைகளை அவர்கள் மீட்டனர். ரூ.5.5 லட்சம் ரொக்கம் மற்றும் சில ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். குழந்தைகளை கடத்தி, விற்று வந்த 7 பேர் கும்பலையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என நாடே கூறி வருவதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார். தமிழகத்தில் பரப்புரை மேற்கொண்டு வரும் அவர், எங்கள் கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளர் மோடி என கூற முடியும். I.N.D.I.A கூட்டணியால் கூற முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். மேலும், திமுக, காங். கூட்டணி ஜனநாயகத்தை பற்றி பேச முடியாது என்றும், நாட்டை சூறையாடுவதுதான் அவர்களின் எண்ணம் எனவும் அவர் விமர்சித்தார்.

விஜய், அஜித் ஆகியோரின் படங்களை இயக்கி வெற்றிப் பட இயக்குநராக இருந்த எஸ்.ஜே.சூர்யா, நடிகராக அறிமுகமாகி அசுர வளர்ச்சி கண்டுள்ளார். தமிழில் பல படங்களை கைவசம் வைத்திருக்கும் அவர், நானி நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றில் அறிமுகமாக இருக்கிறார். இந்நிலையில் மலையாளத்திலும் ஃபகத் பாசில் நடிக்கும் புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டை மோடி அழித்து கொண்டிருப்பதாக சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மக்களிடம் அவர் வெளியிட்டார். அப்போது பேசிய சோனியா காந்தி, எதிர்க்கட்சியினரை தனது கட்சியில் சேரும்படி பாஜக நிர்பந்திப்பதாக விமர்சித்தார். இதேபோல் நாட்டையும், நாட்டின் ஜனநாயகத்தையும் பிரதமர் மோடி அழிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப அலைக்கு வாய்ப்புள்ளது. வெப்ப அலையில் இருந்து தப்பிக்க தாகம் இல்லையெனினும் போதுமான நீர் அருந்த வேண்டும். உடலின் நீர் சத்தை தக்க வைக்க ORS, வீட்டில் தயாரிக்கப்பட்ட லஸ்ஸி, நீராகாரம், எலுமிச்சை நீர், மோர், இளநீர் அருந்தலாம். லேசான, வெளிர் நிற தளர்வான பருத்தி ஆடைகளை அணியலாம். கண்களை பாதுகாக்க சன் கிளாஸ், திறந்தவெளியில் தலையை மூட தொப்பி அல்லது குடையை பயன்படுத்தலாம்.

மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் 100ஆவது நாள் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் அவரது மனைவி பிரேமலதா, மகன் சண்முக பாண்டியன் கண்ணீர் மல்க அழுது, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து, நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்திய பொதுமக்களுக்கு அக்கட்சியின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

பிரதமர் மோடி மீண்டும் பதவியேற்றால் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்த பணிகளை அதிகாரிகள் தற்போதே தொடங்கியுள்ளனர். 2030க்குள் முதியோர் ஓய்வூதியத்தை 50% அதிகரிக்கவும், வேலைகளில் 50% பெண்கள் இருப்பதை உறுதி செய்யவும், மின் வாகன விற்பனையை 30% ஆக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். வெளிநாடுகளில் தூதரக அலுவலகங்களை விரிவுபடுத்துதல், தனியார் முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.