news

News April 7, 2024

அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

image

சிரியா தலைநகரில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். இதனால் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த வேண்டுமென அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இஸ்ரேல் மீது எந்த நேரத்திலும் ஈரான் மிகப் பெரிய தாக்குதலை நடத்தலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இஸ்ரேல் நாட்டின் மீதான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா தலையிடக் கூடாது என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News April 7, 2024

என்.ஐ.ஏ அதிகாரிகள் மீதான தாக்குதலுக்கு ஆளுநர் கண்டனம்

image

மே.வங்கத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது மிகவும் தீவிரமான பிரச்சனை என அம்மாநில ஆளுநர் அனந்த போஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு வெடிகுண்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்காக என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்ற காரின் கண்ணாடியை சிலர் உடைத்து தாக்குதல் நடத்தினர். இதனை கண்டித்துள்ள ஆளுநர், ‘சட்டத்தை கையில் எடுப்பதை அனுமதிக்க முடியாது. இதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்’ என்றார்.

News April 7, 2024

பிரதீப் ரங்கநாதனுக்கு இத்தனை கோடி சம்பளமா?

image

கோமாளி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் லவ் டுடே படத்தை இயக்கி, நடித்ததன் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாராகிவரும் எல்.ஐ.சி படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை அவர் இயக்கவுள்ளதாகவும், அதற்காக ரூ.10 கோடி சம்பளம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News April 6, 2024

99 வயதில் அமெரிக்க குடியுரிமை பெற்ற மூதாட்டி!

image

அமெரிக்காவில் வசிக்கும் மூதாட்டி ஒருவர், தனது 99 வயதில் அமெரிக்கக் குடியுரிமையை பெற்றுள்ளார். 1925ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்த தைய்பாய், ஃப்ளோரிடாவில் தனது மகளுடன் வசித்து வரும் நிலையில், தற்போது குடியுரிமை பெற்றுள்ளார். இதனை அமெரிக்கக் குடியுரிமை அலுவலகம் தனது X பக்கத்தில், ‘வயது என்பது வெறும் எண் மட்டுமே’ என பகிர்ந்திருந்தது. குடியுரிமை வழங்க இத்தனை தாமதம் ஏன் என நெட்டிசன்கள் வினவியுள்ளனர்.

News April 6, 2024

ராஜஸ்தான் அணி அபார வெற்றி

image

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் ஆடிய பெங்களூர் அணி, 183 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய கோலி சதமடித்தார். இதனை தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணியும் மிகச் சிறப்பாக ஆடியது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய அந்த அணியின் பட்லர் சதமடித்தார். 5 பந்துகள் எஞ்சி இருக்கும் நிலையிலேயே அந்த அணி வெற்றி இலக்கை எட்டியது.

News April 6, 2024

மக்களவைத் தேர்தலில் போட்டியிட போவதில்லை

image

மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென பாலிவுட் நடிகர் கோவிந்தா அறிவித்துள்ளார். சமீபத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்த கோவிந்தா, மும்பை வடமேற்கு தொகுதியில் வேட்பாளராக களமிறங்குவார் என கூறப்பட்டது. இந்நிலையில், நாக்பூரில் பேசிய அவர், ‘தேர்தலில் போட்டியிடுவது குறித்து முதல்வருடன் ஆலோசிக்கவில்லை. சிவசேனா வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்வதற்காக வந்துள்ளேன்’ என்றார்.

News April 6, 2024

தமிழகத்தில் ரூ.193 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்

image

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதுவரை ₹193 கோடி ரூபாய் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மார்ச் 16 முதல் இன்று வரை ₹82.63கோடி ரொக்கம், ₹89.41 கோடி மதிப்பிலான தங்கம் உட்பட மொத்தம் ₹192.67 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

News April 6, 2024

ஏகபோக வாழ்க்கை வாழப் போகும் ராசிகள்

image

கும்ப ராசியின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் இன்று சஞ்சரித்துள்ளதால் 12 ராசிகளுக்கும் பலன்கள் கிடைக்கப் போகிறது. குறிப்பாக மேஷம், கன்னி, விருச்சிகம், தனுசு ராசியினர் ஏகபோக வாழ்க்கையை அனுபவிக்க உள்ளனர். கடன் தொல்லை நீங்குவது, புதிய பணி வாய்ப்பு, பொருளாதார நிலை சீரடைவது, குடும்ப மகிழ்ச்சி மேலோங்குவது, பணம், நகை சேர்க்கை என மேற்கண்ட ராசியினருக்கு பல்வேறு சுப பலன்கள் கிடைக்கப் போகிறது.

News April 6, 2024

மகளின் ஆசையை நிறைவேற்றிய கொட்டாச்சி!

image

மகளின் ஆசையை நிறைவேற்றியது குறித்து நடிகர் கொட்டாச்சி நெகிழ்வுடன் பகிர்ந்துள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றில் அவர், ‘என் பொண்ணு மானசாவுக்கு ஒரு பெரிய கார் வாங்கணும்னு ரொம்ப நாள் ஆசை. எங்க வசதிக்கும் மீறி லோன் வாங்கித்தான் இந்த காரை வாங்க முடிஞ்சது. என் பொண்ணோட சந்தோஷம் முக்கியம். அவளோட ஆசைகளை நிறைவேற்றி சந்தோஷப்படுத்தும் போது, என் அப்பா, அம்மாவையே சந்தோஷப்படுத்துற மாதிரி ஃபீல் வருது’ என்றார்.

News April 6, 2024

பட்லர், சஞ்சு சாம்சன் அரை சதம்

image

RCB அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர்கள் பட்லர், சஞ்சு சாம்சன் இருவரும் ஒருவர் பின் ஒருவராக அரை சதம் விளாசியுள்ளனர். RCB அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்துவரும் இவர்கள் பவுண்டரி, சிக்ஸர்கள் என விளாசி வருகின்றனர். தற்போது RR 12 ஓவர்கள் முடிவில் 124/1 ரன்கள் எடுத்துள்ளது. RR வெற்றிக்கு இன்னும் 60 ரன்கள் தேவைப்படும் நிலையில் 48 பந்துகள் கைவசம் உள்ளது.

error: Content is protected !!