India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச இடைக்கால அரசு தலைவர் முகமது யூனுஸ், அங்கு இந்தியாவை வம்பிழுக்கும் வகையில் பேசியுள்ளார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் நிலங்களால் மூடப்பட்டுள்ளதாகவும், எனவே கடல் பரப்பு உள்ள வங்கதேசத்தில் முதலீடுகளை செய்து, சீனா பொருளாதார விரிவாக்கம் செய்யலாம் என அழைப்பு விடுத்துள்ளார். அவரது இந்த பேச்சு இந்தியாவை வம்பிழுக்கும் வகையில் அமைந்துள்ளது.
சீனாவுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. அந்நாட்டின் வடகிழக்கு மாகாணமான லியானிங்கில், சுமார் 1,000 டன் அளவுக்கு தங்கப் படிவங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இந்த தங்கத்தை எடுப்பது மிகக் கடினம் என்று சர்வதேச நிபுணர்கள் கூறினாலும், சீன நிபுணர்கள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. தங்கம் எடுத்தே தீருவோம் என்கின்றனர். உலகில் தற்போது தங்கம் அதிகம் உற்பத்தி செய்யும் நாடாக சீனா உள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று (ஏப்ரல் 01) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (ஏப்ரல் 01) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
காற்று மாசுபாட்டால் மாரடைப்பு வரும் ஆபத்து உள்ளதாக சீனாவின் ஃபூடான் பல்கலை., ஆய்வில் தெரிய வந்துள்ளது. காற்றுமாசை ஏற்படுத்தும் துகள்களை சுவாசிக்க நேரிட்டால், அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளேயே மாரடைப்பு ஏற்படலாம். அந்த அளவுக்கு காற்றுமாசு ஆபத்தானது என்கிறது WHO அறிக்கை. காற்றில் உள்ள நைட்ரஜன் டை ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு மற்றும் நுண்ணிய துகள்கள் தான் இதற்கு காரணமாம்.
தினமும் 10 நிமிடம் ஓடுவதன் மூலம் மகிழ்ச்சியான மனநிலை ஏற்படும் என்கின்றனர் ஜப்பானிய ஆய்வாளர்கள். ஓடுவதால் பெருமூளை தமனியில் ரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரித்து, மூளையின் செயல்பாடு அதிகரிக்கிறது. இதனால் மூலையில் ஆக்சிஜன் அளவு அதிகரிப்பதுடன், மூளையின் முன்புரணியை தூண்டுவதன் மூலமாக மூளை சிறப்பாக செயல்பட்டு மகிழ்ச்சி ஏற்படும் என்றும் அவர்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஓடத் தயாரா?
➤மேஷம் – ஓய்வு ➤ரிஷபம் – நட்பு ➤மிதுனம் – புகழ் ➤கடகம் – சிரமம் ➤சிம்மம் – சினம் ➤கன்னி – ஆதாயம் ➤துலாம் – கவனம் ➤விருச்சிகம் – பாசம் ➤தனுசு – பகை ➤மகரம் – உதவி ➤கும்பம் – பாராட்டு ➤மீனம் – நிறைவு.
அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர், ஃபர்ஸ்ட் சிங்கிள், செகண்ட் சிங்கிள் என அனைத்தும் வரவேற்பை பெற்றதால், ட்ரெய்லர் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஏப். 3-ஆம் தேதி ட்ரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப். 10-ல் ரிலீசாகும் குட் பேட் அக்லி படத்தில் த்ரிஷா, பிரசன்னா, சுனில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். காலை எழுந்தவுடன் ஒருமுறை, இரவு தூங்கும் முன் ஒருமுறை. ஆனால், நம்மில் பலர் காலையில் பல் துலக்குவதை மட்டுமே வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். ஆனால், இரவு தூங்குவதற்கு முன் துலக்குவது மிக அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். அப்போதுதான், நாம் சாப்பிட்ட உணவின் மிச்சங்கள் பற்களில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்கும்.
கேரளாவில் தேசிய சுகாதாரப் பணியாளர்களின் (ASHA) போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ரிட்டயர்மென்ட் பெனிபிட், பணிநிரந்தரம், மருத்துவ வசதி, ஞாயிறு விடுமுறை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை கோரி அவர்கள், திருவனந்தபுரத்தில் கடந்த 50 நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் கோரிக்கைகளை ஏற்காத நிலையில், தங்கள் கூந்தலை வெட்டியும், மொட்டையடித்தும் இவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.