India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் சில நாள்களுக்கு பிறகு மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. காலையில் தருமபுரி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது. இந்நிலையில், இன்று முதல் ஜன.1-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், மீண்டும் குடைக்கு வேலை வந்திருக்கிறது. உங்க பகுதியில் மழை பெய்யுதா?

கிராமப்புறங்களில் அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் MBC/DNC சமூகத்தை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு TN அரசு ஊக்கத்தொகை வழங்குகிறது. அதன்படி, 3 – 5-ம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ₹500-ம், 6-வது பயிலும்போது ₹1000-ம் வழங்கப்படுகிறது. இதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹1 லட்சத்துக்கு மேல் இருக்கக் கூடாது. திட்டத்திற்கு விண்ணப்பிக்க பள்ளியின் தலைமை ஆசிரியரை அணுகவும். SHARE.

விஜய் தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்த போது அவருக்கு 18 வயதுதான். அப்போதே மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற சிந்தனை அவருக்கு மேலோங்கி இருந்ததாக விஜய்யின் நண்பரும் நடிகருமான தாமு சொல்கிறார். தன்னுடைய முதல் படத்திற்கு வாங்கிய சம்பளத்தில் ஏழை எளியோருக்கு புடவை, உணவு பொருள்களை விஜய் வாங்கிக்கொடுத்தாராம். இந்த குணம் தான் அவருக்கு தற்போது வரை நீடிப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

பீர் குடித்தால் உடலுக்கு நல்லதல்ல என்பது பொது அறிவுரை. அதை மாற்றும் விதமாக Beer-ஐ வைத்து தடுப்பூசியை உருவாக்கியுள்ளார் USA ஆய்வாளர் கிறிஸ் பக். ஈஸ்ட் செல்களை வைரஸ் துகள்களுடன் இணைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் தொழில்நுட்பத்தை முயற்சித்துள்ளார். இந்த பீரை குடித்து பரிசோதித்ததில், உடலில் Antibodies உருவானது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவ துறையில் இது ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது.

உண்மைதான்.. அரியலூர், தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், தங்கம் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மஞ்சள் தாலிக்கயிறை கையில் வைத்தபடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படி விலை உயர்ந்து கொண்டே சென்றால் பெண் குழந்தைகளுக்கு எப்படி திருமணம் செய்வது என கேள்வி எழுப்பிய அவர்கள், தங்க விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். உங்கள் கருத்து என்ன?

2026 தேர்தலில் தவெகவிற்கு என்ன சின்னம் வழங்கப்படும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆட்டோ, விசில் உள்ளிட்ட பரிந்துரைகளை ஏற்கெனவே தேர்தல் ஆணையத்திடம் தவெக வழங்கியிருந்தது. இந்நிலையில் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தனியார் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. சில நாள்களுக்கு முன்பு ’அருமையான சின்னம் நமக்கு கிடைச்சிருக்கு. ஆனால் இப்போது சொல்லமாட்டோம்’ என KAS பேசியது குறிப்பிடத்தக்கது.

உளுந்துார்பேட்டை சிப்காட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் காலணி தொழிற்சாலையை CM ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். ₹1,350 கோடி மதிப்பிலான தொழிற்சாலையின் 50% கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும் ₹139 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கலெக்டர் ஆபிஸ் உட்பட ₹1,774 கோடியில் 314 முடிவுற்ற பணிகளையும் துவக்கி வைத்தார். பின்னர், 2.16 லட்சம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்த CBI விசாரணை சமீப நாள்களில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே தவெகவின் முக்கிய நிர்வாகிகளிடம் CBI அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவை டிச.29-ம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சிடிஆர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகனுக்கும் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் 2022 டிச.26 அன்று மனிதக் கழிவு கலக்கப்பட்டது. ஆனால் இந்த சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் ஆகியும், இதுவரை குற்றவாளிகள் யார் என்பது உறுதியாக தெரியாமல், நீதி கிடைப்பதில் தாமதம் நீடிக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், இந்த விவகாரம் திமுகவிற்கு பெரும் நெருக்கடியாக மாற வாய்ப்புள்ளது.

நடிகை மீனா தனது மகள் நைனிகாவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய போட்டோவை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். நைனிகா, 5 வயதில் விஜய்யின் ‘தெறி’ படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தார். அதன் பிறகு ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பல ஆண்டுகளாக வெளியுலகத்தின் கண்ணில் படாமல் இருந்த நைனிகாவுக்கு தற்போது 14 வயதாகிறது. அடடே! அடையாளமே தெரியலையே இது நைனிகாவா? என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.