news

News April 9, 2024

இந்திய குடும்பங்களில் கடன் அதிகரிப்பு

image

இந்தியாவில் குடும்பங்களின் சேமிப்பு குறைந்து, கடன் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023 டிசம்பர் நிலவரப்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தில் குடும்ப கடன்கள் 40% வரை உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளன. அதே நேரம், குடும்ப சேமிப்பு 5.1% குறைந்துள்ளது. விலை ஏற்றத்தால் வீடு, வாகனங்கள் போன்ற சொத்துகளை வாங்க மக்கள் அதிக கடன் பெறுவதால் சேமிப்பு குறைந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

News April 9, 2024

இதுதான் மோடியின் உத்தரவாதமா?

image

தேர்தலுக்குப் பின் ஊழலில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி கூறிய முறை ஏற்கத்தக்கதல்ல என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர்களை சிறையில் அடைப்பதுதான் மோடியின் உத்தரவாதமா? தேர்தலுக்குப் பிறகு பாஜகவினரை சிறையில் அடைப்பேன் என கூறினால் என்னவாகும்? ஆனால், ஜனநாயகத்திற்கு எதிரான இதுபோன்ற கருத்துகளை ஒருபோதும் கூற மாட்டேன் என தெரிவித்தார்.

News April 9, 2024

FDக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்

image

ஹெச்டிஎஃப்சி வங்கி 18 முதல் 21 மாத கால அளவிற்கான வைப்புத் தொகைக்கு 7.25% வட்டி வழங்குகிறது. ஐசிஐசிஐ வங்கி 15 மாத வைப்புத் தொகைக்கு 7.20% வட்டி தருகிறது. கோடக் வங்கி 390 நாள்கள் முதல் 391 நாள்களுக்கு 7.4% வட்டியும், பஞ்சாப் நேஷ்னல் வங்கி 400 நாள்களுக்கு 7.30% வட்டியும் தருகிறது. ஸ்டேட் பேங்க்கை பொருத்தமட்டில் 2 முதல் 3 ஆண்டுகள் வரையிலான வைப்புத் தொகைக்கு 7% வட்டி வழங்குகிறது.

News April 9, 2024

சற்று நேரத்தில் சென்னையில் ரோடு ஷோ

image

பிரதமர் மோடி இன்று மாலை 6.30 முதல் 7.30 மணி வரை சென்னையில் சாலைப் பேரணி செல்கிறார். 6.10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் அவர், 6.30 மணிக்கு தி.நகர் பனகல் பார்க் பகுதியில் இருந்து பேரணியை தொடங்குகிறார். தேனாம்பேட்டை சிக்னல் வரை சுமார் 2 கிமீ ஊர்வலமாக வரும் மோடி, சென்னை பாஜக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார். பின்னர் கிண்டி ராஜ் பவனில் இரவை கழிக்கவுள்ளார்.

News April 9, 2024

முதல்வர் ஸ்டாலின் மீது புகார்

image

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக முதல்வர் ஸ்டாலின் மீது அதிமுகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியதை குறிப்பிட்ட அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை, தேர்தல் விதிகளை மீறிய முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

News April 9, 2024

காண்போரை அசர வைக்கும் 9 வயது சிறுமி

image

ஹரியானாவைச் சேர்ந்த 9 வயது சிறுமி 75 கிலோ எடையை தூக்கி காண்போரை அசர வைத்துள்ளார். பஞ்ச்குலா பகுதியைச் சேர்ந்தவர் அர்ஷியா கோஸ்வாமி. இவர் ஜிம்மில் 75 கிலோ எடையை தூக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி 2 மில்லியன் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது. உடற்பயிற்சி ஆர்வலர்கள் பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

News April 9, 2024

பெண்ணுக்கு முத்தம் கொடுத்த பாஜக வேட்பாளர்

image

மேற்கு வங்கத்தின் பாஜக வேட்பாளர் ககென் முர்மு, பிரசாரத்தின் போது பெண்ணுக்கு முத்தம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மோடியின் குடும்பம் என்று கூறிக்கொண்டு வாக்கு கேட்டு வரும் நபர்கள் செய்யும் வேலையை பாருங்கள் என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். தற்போது மால்டா வடக்கு தொகுதியின் எம்.பி.யாக இருக்கும் ககென் முர்மு, மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

News April 9, 2024

பாஜக வேட்பாளருக்கு திடீர் சிக்கல்

image

திருவனந்தபுரம் பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் சமர்பித்த பிரமாணப் பத்திரத்தை சரிபார்க்குமாறு வருமான வரித்துறைக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ராஜீவ் சந்திரசேகர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் அவரது ஓராண்டு வருமானம் வெறும் ரூ.680 என குறிப்பிடப்பட்டிருந்ததால் காங்கிரஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. விவரங்கள் முறையாக இல்லாமல் இருந்தால், அவரது வேட்புமனு ரத்தாக வாய்ப்புள்ளது.

News April 9, 2024

கிளி ஜோதிடர்கள் விடுவிப்பு

image

வனத்துறையால் கைது செய்யப்பட்ட கிளி ஜோதிடர்கள் செல்வராஜ், சீனிவாசன் விடுவிக்கப்பட்டனர். கடலூர் அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பாமக வேட்பாளர் தங்கர்பச்சான், அங்கிருந்த செல்வராஜிடம் கிளி ஜோதிடம் பார்த்தார். இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், கிளியை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

News April 9, 2024

மலட்டுத்தன்மை குறித்த ஆய்வில் அதிர்ச்சி தகவல்

image

மலட்டுத்தன்மை கொண்ட ஆண்களின் குடும்பத்தினருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குழந்தைப்பேறு பிரச்னை கொண்ட ஆண்களின் பெற்றோர், சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், சிலருக்கு எலும்பு, திசு மற்றும் பெருங்குடல் புற்றுநோய் பாதிப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது. எனினும், தீவிர ஆய்வு நடந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

error: Content is protected !!