India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரவிந்த் கெஜ்ரிவாலை பாஜக கொலை செய்ய முயற்சிப்பதாக அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். ராஞ்சியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், சர்வாதிகாரத்திற்கு எதிராக I.N.D.I.A கூட்டணி போராடி வருவதாகத் தெரிவித்தார். சர்க்கரை நோயாளியான எனது கணவர் 12 ஆண்டுகளாக இன்சுலின் எடுத்து வருகிறார். ஆனால், இன்சுலின் தராமல் அவரை கொல்லப் பார்க்கிறார்கள் என்றார்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை விரிவுப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கவிருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது தமிழ்நாட்டில் தகுதிவாய்ந்த 1.7 கோடி பெண்களை இத்திட்டம் சென்றடைகிறது. தேர்தல் நேரத்தில் இதுகுறித்து பேசிய அமைச்சர் உதயநிதி, தேர்தல் முடிந்த பின்னர், இத்திட்டம் அனைத்து பெண்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று உறுதியளித்தார். அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

நீரிழிவு நோயாளிகள் உணவில் வாழைப்பூ, பாகற்காய், வெந்தயம் ஆகியவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும். நாவல் கொட்டை, மருதம் பட்டை, சிறுகுறிஞ்சான், வேப்பம் பட்டை, கடலழிஞ்சில் ஆகிய ஐந்தையும் சம அளவு பொடி செய்து காலை, இரவு ஆகிய நேரங்களில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். அதே போல, ஆவாரம்பூ, சுக்கு, ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்த நீரை கசாயமாக பருகலாம்.

மோசமான வானிலை காரணமாக அமித் ஷாவின் பிரசார பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், 2அம் கட்டத் தேர்தல் வருகிற 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக டார்ஜிலிங் பகுதியில் அமித் ஷா பரப்புரை மேற்கொள்வதாக இருந்த நிலையில், அவர் பயணித்த ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாததால் பரப்புரை ரத்து செய்யப்பட்டது.

தற்போதைய சூழலில் நடுத்தர மக்கள் மாதத் தவணையில் பொருட்களை வாங்குவது அதிகரித்துள்ளது. பலர் EMI-இல் சிக்கி கடனை அடைக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில், EMI மூலம் பொருள்களை வாங்குவதாக இருந்தால் ‘40% EMI’ விதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதாவது, உங்களது மொத்த சம்பளத்தில் மாத EMI 40%ஐ தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி 1 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. RCB தரப்பில் சிறப்பாக ஆடிய ஜேக்ஸ் (55), படிதார் (52) அரை சதம் அடித்தனர். கடைசிவரை போராடிய கரண் ஷர்மா 25 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், பெர்குசன் 2 ரன்கள் எடுக்க முயற்சித்து ரன் எடுத்து அவுட்டானார். இதையடுத்து KKR த்ரில் வெற்றிபெற்றது.

கடந்த வாரம் இந்தியாவின் டாப் 10 நிறுவனங்களின் மூலதன மதிப்பு ரூ.1.40 இலட்சம் கோடி சரிந்தது. ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ் கடுமையாக பாதிக்கப்பட்டன. டிசிஎஸ்-இன் மூலதன மதிப்பு 62,538 கோடி சரிந்து ரூ.13.84 இலட்சம் கோடியாக உள்ளது. அதே போல, இன்ஃபோசிஸ் ரூ.30,488 கோடியை இழந்து ரூ.5.85 இலட்சம் கோடியாக உள்ளது. ஐசிஐசிஐ, எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளின் மதிப்பும் கணிசமாக சரிந்தது.

ரயில்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க கூடுதல் பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு மக்கள் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்வதால் ரயில்வே கோட்ட அலுவலர்களுக்கு தெற்கு ரயில்வே புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு நிறுத்தத்திலும், ரயில் நிற்கும் நேரத்தை அதிகரிக்கவும், பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து கூடுதல் ரயில்களை இயக்கவும் உத்தரவிட்டுள்ளது.

சினிமா அழியாது என்பதற்கு ‘கில்லி’ படத்தின் ரீரிலீஸே சாட்சி என இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார். ‘ரத்னம்’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், விரைவில் போலீஸ் கதை அம்சம் கொண்ட படத்தை இயக்க இருப்பதாகக் கூறினார். மேலும், ‘கில்லி’ படத்தின் ரீரிலீஸுக்கு கூடியுள்ள கூட்டம், சினிமா எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை காட்டுகிறது. நல்ல படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதாகத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் வாக்களித்திருப்பதாக புள்ளி விவரங்கள் வெளியாகியிருக்கின்றன. 19ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் 8 லட்சத்து 60 ஆயிரம் பெண்கள் ஆண்களை விட அதிகமாக வாக்களித்துள்ளனர். 2.12 கோடி ஆண்கள் வாக்களித்திருக்கும் நிலையில், 2.21 கோடி பெண்கள் வாக்குப்பதிவு செய்திருக்கின்றனர். 2019ஆம் ஆண்டு ஆண்களே அதிகமாக வாக்களித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.