news

News April 1, 2025

பிளவுவாத அரசியல்: ஸ்டாலினை விமர்சித்த யோகி

image

மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கும் நிலையில், TN CM ஸ்டாலின் மீது UP CM யோகி ஆதித்யநாத் குற்றஞ்சாட்டியுள்ளார். தனது வாக்கு வங்கிக்கு ஆபத்து இருப்பதால் மொழி அடிப்படையில் பிளவை ஏற்படுத்த ஸ்டாலின் முயற்சிப்பதாகவும், அவர் குறுகிய அரசியல் செய்வதாகவும் யோகி சாடியுள்ளார். இதுபோன்ற பிளவுவாத அரசியலுக்கு எதிராக மக்கள் ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News April 1, 2025

CSK போட்டியில் செல்போன்கள் அபேஸ் .. 8 பேர் கைது

image

சென்னை சேப்பாக்கத்தில் நடத்த IPL போட்டியின் போது 36 செல்போன்களை திருடிய வடமாநிலத்தைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். சேப்பாக்கத்தில் கடந்த மார்ச் 28ஆம் தேதி நடைபெற்ற போட்டியை காண வந்தவர்களிடம் இருந்து செல்போன்கள் திருடப்பட்டுள்ளன. 4 சிறுவர்கள் உட்பட 8 பேரும், வேலூர் வழியாக தப்ப முயன்றபோது தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

News April 1, 2025

இந்தியா வருகிறார் ‘விண்வெளி நாயகி’!

image

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பார்த்தபோது, இந்தியாவும் இமயமலையும் ரம்மியமாக காட்சியளித்ததாக இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். விரைவில் தனது தந்தையின் நாடான இந்தியாவிற்கு செல்வேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கு வரவேண்டும் என சுனிதாவுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

News April 1, 2025

உ.பி.யில் தமிழ் கல்வியா? ஆதாரத்த கொடுங்க…

image

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினை சாடி இருந்த யோகிக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். அடுத்ததாக பேட்டி ஒன்றில் உ.பி.யில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகள் கற்றுகொடுக்கப்படுவதாக யோகி தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழை எத்தனை மாணவர்கள் கற்கின்றனர்? ஆசிரியர்கள் உள்ளனரா? என்பதை சொல்லுங்கள் என காங். எம்.பி. கார்த்தி சிதம்பரம் Xல் கேட்டுள்ளார்.

News April 1, 2025

நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு கனமழை

image

கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், ஏப்ரல் 4, 5 ஆகிய தேதிகளில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

News April 1, 2025

ரேஷன் கார்டு ‘KYC’ ஏப்.30 வரை அவகாசம் நீட்டிப்பு

image

ரேஷன் கார்டில் ‘<<15929022>>KYC<<>>’ மேற்கொள்ள நேற்றுடன் அவகாசம் முடிந்த நிலையில், தற்போது ஏப்.30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரேஷன் மோசடிகள் அதிகமாக நடப்பதால் பொதுமக்களை KYC மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டது. இதன் மூலம் தகுதியில்லாத ரேஷன் கார்டுகள் நீக்கம் செய்யப்பட்டு தகுதியான மக்களுக்கு மட்டும் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் விளக்கம் அளித்துள்ளது. உடனே உங்கள் ரேஷன் கார்டுக்கு விரல் பதிவை செய்யுங்க..

News April 1, 2025

உச்சத்தை தொட்ட யுபிஐ பரிவர்த்தனை

image

நாட்டில் பெரும்பாலானோர் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், யுபிஐ மூலம் மார்ச் மாதத்தில் ₹24.77 லட்சம் கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டதாக NPCI தெரிவித்துள்ளது. இது இதுவரையில் இல்லாத உச்சம் ஆகும். சராசரி பரிவர்த்தனை மதிப்பும் ஒரு நாளைக்கு ₹79,903 கோடியாக உயர்ந்துள்ளது, இது பிப்ரவரி மாதத்தை விட 1.9% அதிகமாகும். பரிவர்த்தனை மதிப்பு அடிப்படையில் 25% அதிகரித்துள்ளது.

News April 1, 2025

நாடாளுமன்றத்தில் ‘எம்புரான்’ விவகாரம்.. எம்.பி.க்கள் அதிரடி

image

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எம்புரான் பட விவகாரம் குறித்து விவாதிக்க கோரி கேரள எம்.பி.கள் தீர்மானம் கொண்டு வந்தனர். மக்களவை செயலாளருக்கு எம்.பி. ஹிபி ஈடன் அளித்த நோட்டீஸில் குஜராத் கலவரம் குறித்து உண்மைகள் எம்புரான் படத்தில் இடம்பெற்றதால் சங்பரிவார் அமைப்புகள் அதனை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார். அது தொடர்பாக அவர் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

News April 1, 2025

தமிழக பாஜக தலைவர் மாற்றமா?

image

தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அண்ணாமலையை நீக்கினால்தான் கூட்டணி என்பதில் அதிமுக உறுதியாக இருப்பதாகவும், அதனால்தான் பாஜக தலைமை இந்த மாற்றத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பாஜக தலைவர் ரேஸில் வானதி, தமிழிசை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

News April 1, 2025

நண்பனின் தாயுடன் தகாத உறவு.. இளைஞர் கொலை!

image

நண்பரின் தாயுடன் தகாத உறவிலிருந்த இளைஞரை, பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் அடித்தே கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பீகாரின் சிதாமார்கியை சேர்ந்த ராஜாகுமார்(22). இவர், டெல்லியில் ஹோட்டலில் வேலை செய்தபோது தனது நண்பருடன் அடிக்கடி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது தாயுடன் காதல் மலர்ந்துள்ளது. இதனை நேரில் பார்த்த அந்த பெண்ணின் கணவர், உறவினர்கள் ராஜாகுமாரை கொடூரமாகத் தாக்கியதில் உயிரிழந்தார்.

error: Content is protected !!