news

News March 25, 2024

அதிக கேட்சுகளை பிடித்து விராட் கோலி சாதனை

image

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். பஞ்சாப் வீரர் பேர்ஸ்டோவின் கேட்சை பிடித்த அவர், ஐபிஎல் மற்றும் சர்வதேச T20 போட்டிகளில் அதிக கேட்சுகளை (173*) பிடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்னதாக அதிக கேட்சுகளை பிடித்த சுரேஷ் ரெய்னா (172), தற்போது 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார். 167 கேட்சுகளுடன் ரோஹித் ஷர்மா 3ஆவது இடத்தில் உள்ளார்.

News March 25, 2024

IPL: பெங்களூரு அணிக்கு 177 ரன்கள் இலக்கு

image

பஞ்சாப்பிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில், பெங்களூரு அணிக்கு 177 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, ஒரு பக்கம் அதிரடியாக விளையாடினாலும், இன்னொரு பக்கம் விக்கெட்டுகளையும் இழந்து வந்தது. கேப்டன் ஷிகர் தவான் (45) பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த, 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 176 ரன்கள் குவித்தது. சிராஜ், மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

News March 25, 2024

மகளிர் ஜல்லிக்கட்டுப் போட்டி

image

மகளிருக்கான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த முயற்சி எடுத்து வருவதாக சுற்றுலா நிறுவன உரிமையாளரும், ஜல்லிக்கட்டு ஆர்வலருமான வி.கே.தனபாலன் தெரிவித்துள்ளார். 2025இல் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் முடிந்த பிறகு, மகளிருக்கு ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறிய அவர், தமிழக அரசு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறும் முயற்சிகளை எடுத்து வருவதாக கூறியுள்ளார்.

News March 25, 2024

‘ரஜினி 71’ படத்தின் புதிய அப்டேட்

image

ரஜினியின் 171ஆவது படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “தலைவர் 171 படத்தின் முன் தயாரிப்பு பணிகளுக்கே 4 முதல் 5 மாதங்கள் தேவைப்படுகிறது. படப்பிடிப்பை ஜூன் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளோம். இந்த கதைக்காக 1.5 வருடம் கடுமையாக உழைத்துள்ளேன். இந்தப் படம் முடிந்த ஒரு மாதத்திற்கு பிறகு கைதி 2ஆம் பாகம் தொடங்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

News March 25, 2024

ஒழுங்குமுறை கவுன்சிலுக்கு அனுமதி இல்லை

image

இன்ஜினீயரிங், மருத்துவம், சட்டம் போன்ற உயர்கல்வி படிப்புகளை திறந்தவெளி, தொலைதூரம் மற்றும் ஆன்லைன் வழிக் கல்வியில் அனுமதிக்க ஒழுங்குமுறை கவுன்சில், அமைப்புக்கு அனுமதியில்லை என பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தெரிவித்துள்ளது. இதேபோல முனைவர், ஆராய்ச்சிப் படிப்பையும் இந்த முறையில் பெற தடை செய்துள்ளதாக UGC தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களை <>கிளிக் <<>>என்ற இணையதளத்தில் அறியலாம்.

News March 25, 2024

பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்

image

வரும் மே 26ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபில் இறுதிப்போட்டியை காண வரும் பார்வையாளர்கள், தங்களது ஐபிஎல் டிக்கெட்டுகளை காண்பித்து மாநகர பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளலாம். போட்டி முடிந்த பின்னர், அண்ணா சதுக்கம், சென்னை பல்கலை., அண்ணா சாலை ஓமந்தூரார் மருத்துவமனை ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என மாநகரப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

News March 25, 2024

அரசு ஊழியர்களுக்கு GOOD NEWS

image

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளத்துடன் சேர்த்து ஊதிய உயர்வு மற்றும் அரியர் தொகை கிடைக்கவுள்ளது. அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 46 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, தற்போது 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வு ஜனவரி மாதம் முதலே அமலாக இருப்பதால் இந்த மாதம் 2 மாத அரியர் தொகையுடன் ஊதிய உயர்வு கிடைக்கவுள்ளது.

News March 25, 2024

“பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம்”

image

மோடி மீண்டும் பிரதமரானால் அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறிவிடும் என முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். தமிழர்களைத் தீவிரவாதிகளாகவும், பிச்சைக்காரர்களாகவும் பாஜகவினர் சித்தரிப்பதாக குற்றம்சாட்டிய அவர், தமிழர்களை வெறுக்காத பிரதமர் வேண்டும் என்றால், பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், பாஜகவுக்கு தமிழக மக்கள் வாக்களிப்பது அவமானமான செயல் எனவும் அவர் விமசித்தார்.

News March 25, 2024

கோர விபத்தில் 2 பேர் பலி

image

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே லாரி மோதி 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்னக்காம்பாளையம் பிரிவு என்ற இடத்தில் சாலையை கடந்த இருவர் மீது அதிவேகமாக வந்த லாரி மோதியது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி ஓட்டுநரை சிறைபிடித்த பொது மக்கள், அவரை கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மக்களை சமாதானம் செய்தனர்.

News March 25, 2024

நிவாரண நிதி கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளோம்

image

சென்னை மற்றும் தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை எனக் குற்றம்சாட்டிய முதல்வர் ஸ்டாலின், அது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளதாக தெரிவித்துள்ளார். நாங்குநேரி பிரசாரத்தில் பேசிய அவர் ஆட்சி, பதவி இருப்பதால் பாஜகவுக்கு ஆணவம் அதிகரித்துவிட்டது என்றார். மேலும், பாஜகவுக்கு வாக்களிப்பது எதிர்கால சந்ததியினருக்கு செய்யும் துரோகம் எனவும் எச்சரித்தார்.

error: Content is protected !!