news

News April 9, 2024

இந்தியர்கள் பூஜ்ஜியத்தை உருவாக்கியது எப்படி?

image

பூஜ்ஜியம் என்ற கருத்துக்கு முதலில் இலக்கத்தை கண்டுபிடித்தவர்கள் இந்தியர்கள். குவாலியர் கோட்டையில் பூஜ்ஜியம் குறித்த ஆதாரம் உள்ளது. பூஜ்ஜியம் எங்கிருந்து தொடங்கியது என்பதற்கு சரியான சான்றுகள் இல்லை. ஆனாலும், தரையில் கற்களைக் கொண்டு கணக்கீடு செய்தபோது பூஜ்ஜியம் உருவானதாக நம்பப்படுகிறது. பூஜ்ஜிய வடிவ கற்களை தரையில் வைக்கும்போது விழும் உருண்டையான அச்சுகளில் இருந்து பூஜ்ஜியம் உருவானதாக கூறப்படுகிறது.

News April 9, 2024

ஸ்டாலின் சொல்பவர் தான் அடுத்த பிரதமர்!

image

தமிழக முதல்வர் ஸ்டாலின் கை காட்டுபவரே இந்தியாவின் அடுத்த பிரதமராகப் பதவியேற்பார் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். பிச்சனூரில் பரப்புரையில் ஈடுபட்ட அவர், “மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர். பிரதமர் வருவதால் தமிழகத்தில் மக்களிடம் எந்த மாற்றமும் ஏற்படாது. தமிழகம் முழுவதும் திமுக அலை வீசுகிறது. வடக்கில் I.N.D.I.A கூட்டணி அலை வீசுகிறது. நிச்சயம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும்” என்றார்.

News April 9, 2024

IPL: 1,000 ரன், 100 விக்கெட், 100 கேட்ச் சாதனை

image

ஐபிஎல் வரலாற்றில், 1,000 ரன்கள், 100 விக்கெட்டுகள் மற்றும் 100 கேட்சுகளை பிடித்து, CSK வீரர் ஜடேஜா புதிய சாதனையை படைத்துள்ளார். கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் அபாரமாக பந்துவீசி, 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல், ஃபில் சால்ட், ஷ்ரேயஸ் ஐயர், மிட்செல் ஸ்டார்க் ஆகியோரது கேட்சுகளை பிடித்து இந்த மகத்தான சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனையை இதுவரை எந்தவொரு வீரரும் படைத்ததில்லை.

News April 9, 2024

ஸ்டாலின் முதலில் தன் வீட்டில் அதை செய்யட்டும்!

image

சொந்த மகன் மற்றும் மகளுக்கு இடையே பாரபட்சம் காட்டும் முதல்வர் ஸ்டாலின் முதலில் தனது வீட்டில் சமூக நீதியை நடைமுறைப்படுத்தட்டும் என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார். திருவள்ளூரில் பேசிய அவர், “பெண்ணுரிமை, சமத்துவம், சம உரிமை, இட ஒதுக்கீடு, ஜனநாயகம் என மேடைகளில் வசனம் பேசும் ஸ்டாலின், தனது மகனை மட்டும் அமைச்சராக்கியுள்ளார். அவர் ஏன் தனது மகளை அரசியலுக்கு கொண்டு வரவில்லை” என்றார்.

News April 9, 2024

திரைப்படங்கள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

image

இந்துத்துவா படங்களை திரையிட்டு தேர்தல் நேரத்தில் பாஜக பதற்றத்தை உருவாக்குவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். உலகம் முழுவதுமே படங்களை பிரசாரத்திற்கு பயன்படுத்தி வந்த வரலாறு இருக்கிறது. தமிழ்நாட்டிலும் திராவிட இயக்கங்கள் படங்கள் மூலம் தனது கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தன. ஆனால், திரைப்படங்கள் தேர்தலில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்துவது சந்தேகம்தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

News April 9, 2024

ரூ.1 லட்சத்தை எட்டுமா வெள்ளி?

image

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நடுத்தர வகுப்பு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரம் வெள்ளியின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டில் வெள்ளியின் விலை 7.19% உயர்ந்தது. ஆனால், நடப்பு ஆண்டில் 3 மாதத்தில் மட்டும் 11% விலை ஏற்றம் கண்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ₹88,000ஆக இருக்கும் சூழலில், இது ரூ.1 லட்சம் வரை உயரக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

News April 9, 2024

முதல் முறையாக வரலாற்று உச்சம் தொட்ட சென்செக்ஸ்

image

வாரத்தின் 2ஆம் நாளான இன்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, முதல் முறையாக வரலாற்று உச்சமாக பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 381.78 புள்ளிகள் உயர்ந்து 75,124.28 புள்ளிகளாகவும், தேசிய குறியீட்டு எண் நிஃப்டி 98.80 புள்ளிகள் உயர்ந்து 22,765.10 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முக்கிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்படுகின்றன.

News April 9, 2024

நடிகை ஆர்த்தி பாஜகவில் இணைந்தார்

image

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர்களான ஆர்த்தி மற்றும் அவரது கணவர் கணேஷ் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர். மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, கடந்த சில நாட்களாக பாஜகவுக்கு ஆதரவாகவும், அண்ணாமலைக்கு ஆதரவாகவும் கோவை தொகுதியில் ஆர்த்தி பிரசாரம் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், இன்று அண்ணாமலை முன்னிலையில் நடிகை ஆர்த்தியும், அவரது கணவர் கணேஷும் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.

News April 9, 2024

IPL: லக்னோ அணிக்கு பின்னடைவு

image

லக்னோ அணியின் நட்சத்திர பவுலரான மயங்க் யாதவ், ஏப்.12ஆம் தேதி நடைபெறும் டெல்லிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7ஆம் தேதி குஜராத்துக்கு எதிரான போட்டியில் 1 ஓவர் வீசி 13 ரன் கொடுத்த நிலையில், வயிற்று பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து பாதியில் வெளியேறினார். இதனால் ஒருவாரம் சிகிச்சை பெற வேண்டி இருப்பதால், அடுத்த போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார்.

News April 9, 2024

அமேதிக்கு ஆசைப்படும் பிரியங்காவின் கணவர்

image

உ.பி மாநிலத்தின் அமேதி தொகுதியில் பிரியங்கா காந்தியின் கணவரான ராபர்ட் வதேரா போட்டியிட விரும்புவதாக தெரிய வந்துள்ளது. லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த தேர்தலில் ஸ்மிருதி இரானியை வெற்றிபெற வைத்ததை தவறு என அமேதி மக்கள் கருதுகின்றனர். அதனை சரிசெய்ய நான் அங்கு போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறார்கள்” என்று தனது அரசியல் ஆசையை சூசகமாக வெளிப்படுத்தினார்.

error: Content is protected !!