news

News April 15, 2024

BREAKING: வங்கிக் கணக்கில் ரூ.1000 வந்தது.. செக் பண்ணுங்க

image

தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்தாலும் மகளிர் உரிமைத்தொகை வழங்க எந்த தடையும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்த நிலையில், குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் ₹1000 வரவு வைக்கும் பணி தொடங்கியுள்ளது. ஒவ்வொருவருக்கு வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. இன்று மாலைக்குள் அனைவருக்கும் வந்துவிடும். ஆனால், மேல்முறையீடு செய்தவர்களுக்கு ₹1000 வராது. அவர்களுக்கு அடுத்த மாத தவணையில் தான் வழங்கப்படும்.

News April 15, 2024

அதிகரிக்கும் விலை, அலறும் இல்லத்தரசிகள்

image

தங்க நகைகள் மீது இந்தியப் பெண்களுக்கு எப்போதும் தனி விருப்பம் உண்டு. சுப நிகழ்ச்சிகளுக்கு வித விதமான நகைகளை அணிவதை பெருமையாகவே கருதுகின்றனர். ஆனால், கடந்த சில நாள்களாக அதன் விலை உயர்வதை கண்டு அறண்டுள்ளனர். விலை உயர்வு செய்தி வரும்போதெல்லாம், இனி தங்கம் வாங்க முடியுமா என புலம்பி வருகின்றனர். எனினும், தங்கம் மீதான விருப்பம்தான் குறையுமா? என்பது தெரியவில்லை.

News April 15, 2024

திமுக கூட்டணிக்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு

image

மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணிக்கு தமிழ்நாட்டின் தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. அந்தவகையில், எல்பிஎஃப், எச்எம்எஸ், ஏஐடியூசி, சிஐடியூ, ஐஎன்டியூசி உள்ளிட்ட 12 தொழிற்சங்கங்கள் I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அத்துடன், விவசாயிகள், தொழிலாளர்களை வஞ்சிக்கும் மோடி அரசை அகற்றி நாட்டை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

News April 15, 2024

ஒரு மணி நேரத்துக்கு ரூ.5 லட்சம் வாடகை

image

பரப்புரைக்கு பயன்படுத்தப்படும் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் வாடகை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, ஒற்றை இன்ஜின் ஹெலிகாப்டர்களுக்கு ஒரு மணிநேரத்துக்கு ரூ.1.5 லட்சம் வரையிலும், இரட்டை இன்ஜின் ஹெலிகாப்டர்களுக்கு ரூ.3.5 லட்சம் வரை கட்டணமாக உள்ளது. அதைப்போல சிறிய ரக விமானங்களை பொறுத்தவரை ஒரு மணிநேர பயன்பாட்டுக்கு ரூ.4.5 லட்சம் முதல் ரூ.5.25 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

News April 15, 2024

மாணவர்களுடன் உரையாடுகிறார் ராகுல்

image

நீலகிரியில் தனியார் கல்லூரி மாணவர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று கலந்துரையாட உள்ளார். தான் போட்டியிடும் வயநாடு தொகுதியில் இன்று அவர் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனிடையே, கேரள எல்லையில் உள்ள தாளூரில் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். தொடர்ந்து, தேவாலயம் ஒன்றில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகளையும் அவர் சந்திக்க உள்ளார்.

News April 15, 2024

ED கைதுக்கு எதிரான கெஜ்ரிவால் மனு விசாரணை

image

ED கைதுக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கெஜ்ரிவால், தனது கைது சட்ட விரோதம் எனக்கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, ஏப்ரல் 9இல் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவரின் மேல்முறையீட்டு மனுவை, உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது. இந்த வழக்கில் மார்ச் 21இல் அவர் கைது செய்யப்பட்டார்.

News April 15, 2024

விமானக் கட்டணம் பலமடங்கு உயர்வு

image

சென்னையிலிருந்து முக்கிய நகரங்களுக்கான விமானக் கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது. கோடை விடுமுறையில் பொழுது போக்குவதற்கு பலர் வெளியூர்களுக்கு செல்வதாலும், விஸ்தாரா விமான சேவை பாதிக்கப்பட்டிருப்பதாலும், டிக்கெட் விலை அதிகரித்துள்ளது. டெல்லிக்கான கட்டணம் ₹8,000 வரை அதிகரித்துள்ளது. ஸ்ரீநகர், ஜெய்ப்பூருக்கான கட்டணம் ₹10,000-ஐ தாண்டிவிட்டது. மதுரைக்கான கட்டணம் ₹5,000- ₹8,000ஆக உயர்ந்துள்ளது.

News April 15, 2024

ஈரான்: அமெரிக்காவுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை

image

ஈரான்-இஸ்ரேல் மோதலில் அமெரிக்கா தலையிட்டால், ஈரானுக்கு ஆதரவாக போரில் ரஷ்யா களமிறங்கும் என்று புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிரியாவில் உள்ள ஈரானிய தூதரகம் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிடக்கூடாது என்றும், அப்படி தலையிட்டால், ஈரானுக்கு ஆதரவாக போரில் ரஷ்யா குதிக்கும் என்றும் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News April 15, 2024

ரோஹித்தின் சதம் சுயநலமானது

image

சென்னை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சதம் விளாசிய ரோஹித் சர்மா, அணியின் வெற்றிக்கு முயற்சிக்கவில்லை என்று மும்பை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இதையொட்டி, ட்விட்டரில் #Selfish என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. அதேசமயம், ரோஹித் தனித்து நின்றாலும், மற்ற வீரர்களிடம் இருந்து அவருக்கு எந்த ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை என ரோஹித் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

News April 15, 2024

சசிகுமார் நடிக்கும் புதிய படம்

image

கழுகு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் நடிகர் சசிகுமார் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ‘ஃப்ரீடம் ஆகஸ்ட் -14’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கதாநாயகியாக லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் உருவாக உள்ளது. ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

error: Content is protected !!