India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நவகிரகங்களின் நீதிமானான சனி பகவானின் அஸ்தமன செயல்பாடு 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சில ராசிகளுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கும். அந்த வகையில், மிதுனம், கடகம், சிம்மம், மீனம் ராசியினருக்கு கோடி கோடியாக பணம் கொட்டப் போகிறது. குறையில்லாத செல்வம், வியாபாரத்தில் லாபம், புதிய தொழில் தொடங்கும் யோகம், வெளிநாட்டு வேலை வாய்ப்பு போன்ற பல சுப பலன்கள் மேற்கண்ட ராசியினரை தேடி வரப்போகிறது.

தமிழ்நாட்டில் நேற்று இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு நடந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 69.46% எனக் குறைத்து அறிவிக்கப்பட்டது விவாதமாகியுள்ளது. இது குறித்து விளக்கிய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி, வாக்குச்சாவடியின் அதிகாரிகள் அளிக்கும் தோராயக் கணக்கே ஊடகத்திடம் அளிக்கப்படும். இறுதியாகவே 17சி படிவத்தில் கையெழுத்திட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை தெரியும் என்றார்.

சுற்றுச்சூழல் மாசுபாடுகள் போன்ற பல காரணங்களால் ஏற்படும் தொண்டை சார்ந்த பிரச்சனைகளான தொண்டை வலி, தொண்டை தொற்று அல்லது அழற்சிக்கு சுடு நீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த உப்பு நீர், தொண்டை வலி அல்லது எரிச்சல் தொடர்புடைய தொல்லைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது. சளி, சைனஸ் தொற்றுகளை தடுக்கவும் இந்த உப்பு கரைசல் உதவி புரிகிறது.

இளன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஸ்டார்’ படத்தில் கவின் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் “மெலடி…” என்ற பாடலின் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டது. அதில், பெண் வேடமிட்டு குத்தாட்டம் போடு கவின், பார்ப்பதற்கு அச்சு அசலாக பெண் போலவே காட்சியளிக்கிறார். இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வரும் நெட்டிசன்கள், கவினைப் பார்க்க மீரா மிதுன் போலவே இருப்பதாக கூறி வருகின்றனர்.

ஒரு தேக்கரண்டி கசகசாவை எடுத்து இரண்டு முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து, பசும்பாலில் கலந்து காய்ச்சி சிறிது கற்கண்டு சேர்த்து பருகினால் நிம்மதியான உறக்கத்தை பெறலாம். வெள்ளரி பிஞ்சு, இளநீர், மோர், நீராகாரம், லெமன் ஜூஸ் ஆகியவை சிறுநீரகத்தை குளுமைப்படுத்தும். தும்பைப்பூ, சுக்கு, காயம் இவற்றை எடுத்து நைத்து கடுகு எண்ணெயில் போட்டு காய்ச்சி காதில் சில துளிகள் விட்டால் காது வலி குணமாகும்.

இந்தியாவின் பிரதமராக மோடியை மூன்றாம் முறையாக தேர்ந்தெடுக்கும் வகையில் இந்தியர்கள் அவருக்கே வாக்களிக்கும்படி, அமெரிக்கப் பாடகியான மேரி மில்பென் கோரிக்கை வைத்திருக்கிறார். மோடி கடந்த வருடம் அமெரிக்கா சென்றிருந்தபோது, அவர் முன்பாக இந்திய தேசிய கீதத்தை பாடி, மோடியை மெய்சிலிர்க்க வைத்தார். அதற்காக மில்பென்க்கு மோடி பாராட்டு தெரிவித்தபோது, மோடியின் பாதங்களைத் தொட்டு மில்பென் வணங்கினார்.

SRHக்கு எதிரான போட்டியில் DC வீரர் மெர்குர்க் 15 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம் ஐபிஎல்லில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் 3ஆவது இடம் பிடித்தார். முதல் இடத்தில் ஜெய்ஸ்வால் (13 பந்து) உள்ளார். KL ராகுல், கம்மின்ஸ் 14 பந்துகளில் அடித்துள்ளனர். யூசுப் பதான், பூரண், நரைன் 15 பந்துகளில் அரை சதம் அடித்துள்ளனர். மெர்குர்க் 65 (18) ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஹைதராபாத் அணி நிர்ணயித்த 267 ரன்கள் இலக்கை துரத்தி ஆடிவரும் டெல்லி அணி 4 ஓவரில் 61/2 ரன்கள் எடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக SRH வீசிய 3ஆவது ஓவரில் மட்டும் டெல்லி வீரர் மெக்குர்க் 30 ரன்கள் அடித்துள்ளார். முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டிய அவர் 3ஆவது பந்தில் சிக்ஸர் அடித்தார். பின் 4ஆவது பந்தில் பவுண்டரி அடித்த அவர், கடைசி 2 பந்துகளிலும் சிக்ஸர்கள் விளாசினார்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் நடைமுறை விதிகளைத் தளர்த்த வேண்டும் என திமுக எம்பி வில்சன் வலியுறுத்தியுள்ளார். தேர்தல் முடிந்த நிலையிலும், மக்கள் ரூ.50,000க்கு மேல் எடுத்துச் செல்ல தடை தொடர்வது நியாயமற்றதாகும் எனக் கூறிய அவர், மக்கள் நலப் பணிகள் உள்ளிட்டவற்றை தடையின்றி செயல்படுத்த விதிகளை தளர்த்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடகாவில் 20 இடங்களில் வெற்றி பெறுவோம் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் காங்கிரஸ் தனித்து களமிறங்கியுள்ள நிலையில், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. மொத்தமுள்ள 28 இடங்களில் 25 தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக நேரடியாக மோதுகிறது.
Sorry, no posts matched your criteria.