India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பொன்முடி அமைச்சராக பதவியேற்ற நிகழ்வில் முதல்வரும், ஆளுநரும் சுவாரசியமாக பேசிக்கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு பொன்முடி ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பொறுப்பேற்றார். பதவியேற்பு முடிந்த நிலையில், ஆளுநரிடம் பேசிய முதல்வர், இங்கிருந்து நேரடியாக தேர்தல் பரப்புரைக்காக திருச்சி செல்கிறேன் என்றார். அதை கேட்ட ஆளுநர் ரவி, முதல்வரிடம் ஆல் த பெஸ்ட் என்று கூறினார்.

17ஆவது ஐபிஎல் தொடர் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை – பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு போட்டி தொடங்க உள்ள நிலையில், மாலை 6.30 மணியளவில் ஐபிஎல் தொடக்க விழா நடைபெறுகிறது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்று கலை நிகழ்ச்சிகள் நடத்த உள்ளனர். முதல் போட்டியில் யார் வெற்றி பெறுவாங்கன்னு கமெண்ட்ல சொல்லுங்க.

புதுச்சேரியில் பாஜக சார்பில் நமச்சிவாயம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில், என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஒன்றரை மாதத்திற்கு முன்பாகவே புதுச்சேரியில் பாஜக போட்டியிடும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். இதையடுத்து, நீண்ட இழுபறிக்குப் பின் இன்று வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் காங்., சார்பாக வைத்திலிங்கம் போட்டியிடுகிறார்.

சூது கவ்வும் 2ம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. முதல்பாகத்தில் விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி நடித்திருந்தனர். வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதால் 2ஆம் பாகம் எடுக்கப்படுகிறது. இதில் விஜய் சேதுபதிக்கு பதிலாக மிர்ச்சி சிவா நடிக்கிறார். படத்தை எம்எஸ் அர்ஜூன் இயக்குகிறார். அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படக்குழுவால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ED வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் மார்ச் 28இல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட உள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜி, எவ்வித ஆதாரமும் இல்லாமல் ED தன்னை கைது செய்துள்ளதாகவும், வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரியும் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது வரும் வியாழக்கிழமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுர்ஜித் சிங் யாதவ் என்ற சமூக ஆர்வலர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். முன்னதாக, கெஜ்ரிவால் சிறையில் இருந்தே கட்சியை வழிநடத்துவார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்யமாட்டார் என AAP தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நிலவில் ஆம்ஸ்ட்ராங் இறங்கிய இடத்தை சந்திரயான் 2 ஆர்பிட்டர் படம்பிடித்துள்ளது. 54 ஆண்டுகளுக்கு முன்பு 1969ஆம் ஆண்டு முதல்முறையாக அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் தரையிறங்கினார். அங்கு அவர் வைத்த கருவி தற்போதும் செயல்பட்டு வருகிறது. அந்த இடத்தை நிலவை சுற்றிவரும் சந்திரயான் 2 ஆர்பிட்டர் 2021ம் ஆண்டில் படம்பிடித்துள்ளது.

அதிமுக, திமுக தொடர்ந்து பாட்டாளி மக்களுக்கு எதிராக இருந்து வருவதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், பாமக ஆரம்பித்த காலம் தொட்டு தொண்டர்கள் நலனை முன்னிறுத்தியே கட்சி முடிவுகளை எடுத்து வருகிறது. இப்போதும் தொண்டர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். அவர்களின் உணர்வுகளுக்கு எதிராக எந்த முடிவையும் கட்சி எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் தொடர்வது குறித்து 2 நாட்களில் அறிவிக்கப்படும் என பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணிக்கு புரட்சி பாதம் ஆதரவு தருவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், திருவள்ளூர் தொகுதி கேட்டு அவர் விடுத்த கோரிக்கையை அதிமுக நிராகரித்ததாக தெரிகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அவர், கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமணமான பெண்கள் ஆடை கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டியதில்லை என்று நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “திருமணமான ஆண்கள், இதுபோல்தான் ஆடை அணிய வேண்டும் என கட்டுப்பாடு உள்ளதா. இல்லைதானே. அப்படியெனில், திருமணமான பெண்களிடம் மட்டும் அதை எப்படி எதிர்பார்க்கலாம்? காலம் மாறிவிட்டது. அவர்களுக்கு என்ன பிடிக்கிறதோ, அதை செய்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.