India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இன்று (மார்ச் 27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

இந்தியாவில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத 22.5 லட்சம் வீடியோக்களை நீக்கியிருப்பதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமான வீடியோ பகிர்வு தளமான யூடியூப்பை இந்தியாவில் 46.2 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். 2023 அக்டோபர் முதல் டிச., வரையிலான காலத்தில் வெளியான வீடியோக்களை நீக்கியுள்ள யூடியூப் நிறுவனம், உலகளவில் இதே காலத்தில் வெளியான 90 லட்சம் வீடியோக்களை நீக்கியுள்ளது.

பிக் பாஷ் கிரிக்கெட் விளையாடும் இந்திய வீரர் நிகில் சௌத்ரி, ஆஸ்திரேலியாவில் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியிருக்கிறார். 2011ஆம் ஆண்டு நள்ளிரவில் காரில் வைத்து நிகில் தன்னை பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். தடயவியல் பரிசோதனைகளும் அதனை உறுதிபடுத்தியுள்ளன. ஆனால், பெண்ணின் சம்மதத்துடன்தான் உறவு கொண்டதாக நிகில் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

*ஸ்டெர்லைட் ஆலையை திமுக அரசு தான் நீதிமன்றத்தில் வாதாடி மூடியது – ஸ்டாலின்
*ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு.
*ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்தும் முடிவை இங்கி., நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
*GT அணிக்கு எதிரான போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் CSK அணி வெற்றி பெற்றது.
*இந்திய பங்குகளில் அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடு ₹13,893 கோடியாக அதிகரித்துள்ளது.

இன்று (மார்ச் 27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

GT அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், CSK அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 17ஆவது ஐபிஎல் தொடரின் 7ஆவது போட்டியில், டாஸ் வென்ற GT அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த CSK அணி 206 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 207 ரன்கள் இலக்கை துரத்திய GT அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோல்வியடைந்தது.

உலக அழகிப் போட்டியில் முதல்முறையாக பங்கேற்க இருப்பதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் தலைமையிலான ஆட்சியில், பெண்களுக்கு பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு செப்டம்பரில் மெக்ஸிகோவில் நடைபெற உள்ள உலக அழகிப் போட்டியில் சவுதி அரேபியா சார்பில் 27 வயதாகும் மாடல் ரூமி அல்கஹ்தானி பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள பிரான்சிஸ் ஸ்காட் பாலத்தின் மீது சிங்கப்பூர் சரக்குக் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்துள்ளது. இதில் பாலம் இடிந்ததால் அதில் பயணித்த கார்களும் ஆற்றில் விழுந்தது. ஆற்றில் விழுந்தவர்களை மீட்புப் படையினர் மீட்டனர். இதனிடையே கப்பலை இயக்கிய மாலுமி உள்பட 22 பேரும் இந்தியர்கள் எனவும், அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மெதுவாக நகரும் கிரகமான சனி, 2025ஆம் ஆண்டு பெயர்ச்சி அடைய இருக்கிறார். கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குள் செல்லும் சனியால் சில ராசிகள் சிக்கல்களை அனுபவிக்கப் போகின்றனர். கடகம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய 4 ராசியினர் மீதுதான் சனிப் பெயர்ச்சியின் தாக்கம் அதிகமாக இருக்கப் போகிறது. இந்த ராசியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். மொத்தம் உள்ள 39 தொகுதிகளுக்கு இதுவரை 628 ஆண்கள், 109 பெண்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 405 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள் என்பதால் மேலும் பலர் வேட்பு மனுத்தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.