news

News April 11, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

News April 11, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ அண்ணாமலையை ஆதரித்து பிரதமர் மோடி வாக்கு சேகரிப்பு
➤ பாஜக வந்தால் அமைதியான இந்தியா அமளியாகும் – முதல்வர் ஸ்டாலின்
➤ ஊழல் செய்யும் கூடாரமாக அதிமுக மாறியுள்ளது – அண்ணாமலை
➤ அண்ணாமலை விளம்பர பிரியர் – இபிஎஸ்
➤ ஏப்ரல் 20ஆம் தேதி கில்லி ரீ ரிலீஸ்
➤ தமிழக தடகள வீரருக்கு 2 ஆண்டு தடை

News April 11, 2024

கடைசி பந்தில் குஜராத் த்ரில் வெற்றி

image

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி த்ரில் வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் 196 ரன்கள் குவித்தது. அந்த அணியின் பராக் 76 ரன்கள் எடுத்தார். 197 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய குஜராத் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரஷித் கான் வெற்றியை வசப்படுத்தினார். குஜராத் கேப்டன் கில் 72 ரன்கள் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

News April 11, 2024

பாஜகவை கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்

image

தேர்தல் விதிகளை வெளிப்படையாக பாஜக மீறினாலும், தேர்தல் ஆணையம் அதனை கண்டுகொள்வதில்லை என ஆம் ஆத்மி கட்சி தலைவர் அதிஷி குற்றம்சாட்டியுள்ளார். அசாமில் அவர் பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “பாஜகவுக்கு முன்னதாக பிரசாரத்துக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தோம். ஆனால் அமித்ஷா ரோடு ஷோ நடத்துவதால், எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நாங்கள் இடத்தை மாற்றியதால் தொண்டர்களால் வர முடியவில்லை” என்றார்.

News April 11, 2024

பெரும் பணக்காரர் அந்தஸ்தை இழக்கும் டிரம்ப்!

image

பங்குச்சந்தையில் தொடர்ந்து டிரம்ப் மீடியா பங்குகளின் மதிப்பு சரிவால், பணக்காரர்கள் பட்டியலில் இருந்து அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் வெளியேறி உள்ளார். மார்ச்சில் உச்சத்தில் இருந்த அவரது நிறுவன பங்குகள் தற்போது 50% வீழ்ச்சியை கண்டுள்ளன. இதனால் புளூம்பெர்க் வெளியிட்ட உலகின் 500 பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 4.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் டிரம்ப் 653ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

News April 11, 2024

பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் விதிமீறல்

image

சென்னை தியாகராய நகரில் நேற்று நடைபெற்ற பிரதமர் மோடியின் வாகனப் பேரணியில் விதிமீறல் நடைபெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழிசைக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க பிரதமர் மோடி நேற்று வாகனப் பேரணி நடத்தினார். அதில், தேர்தல் விதிமுறைகளை மீறி சாலைகளில் விளம்பர பதாகைகளை வைத்ததாக மாம்பலம் மற்றும் பாண்டி பஜார் காவல் நிலையங்களில் தேர்தல் அதிகாரிகள் புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

News April 10, 2024

குடிபோதை வாக்காளர்களுக்கு தடை கேட்ட மனு தள்ளுபடி

image

வாக்காளர்கள் குடிபோதையில் வாக்களிப்பதை தடுக்க நடவடிக்கை கோரிய மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஆந்திராவைச் சேர்ந்த ஜனவாகினி கட்சி இதே கோரிக்கைக்கு தொடர்ந்த வழக்கை பிப்.28ஆம் தேதி ஆந்திர ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இது விளம்பர நோக்கத்திற்காக தொடரப்பட்ட வழக்கு என்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

News April 10, 2024

துபாய் கோயிலில் முன்பதிவு முறை அறிமுகம்

image

துபாயில் புதிதாக கட்டியுள்ள கோயிலில், பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் குவிந்து வருவதால் முன்பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி திறந்து வைத்த இந்தக் கோயிலில் மார்ச் 1 முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போதிலிருந்து கூட்டம் அதிகரித்து வருவதால், அதனை தவிர்க்க https://www.mandir.ae/visit என்ற இணையதளம் மூலம் தரிசன நேரத்தை முன்கூட்டியே பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 10, 2024

இந்த ராசிகளுக்கு தேடி வந்து பணம் கொட்டப் போகிறது

image

நவ கிரகங்களின் மங்கள நாயகனான குரு பகவன் கொடுக்க ஆரம்பித்தால் யாராலும் தடுக்க முடியாது என்பது ஐதீகம். மே மாத கிரக நிலைகளின் படி ரிஷப ராசிக்கு அவர் இடம்பெயர உள்ளதால் மேஷம், ரிஷபம், கடகம், துலாம் ராசியினருக்கு பணம் தேடி வந்து கொட்டப் போகிறது. ஆடம்பர வாழ்க்கைக்கான யோகம், திடீர் அதிர்ஷ்டம், பண வரவு, திருமணம் கைகூடும், குழந்தை பிறக்கும் பாக்கியம் என பல்வேறு சுப பலன்கள் இவர்கள் அனுபவிக்க உள்ளனர்.

News April 10, 2024

பிரதமர் ஆளுநர் மாளிகையில் தங்கலாமா?

image

தேர்தல் பரப்புரைக்காக நேற்று சென்னை வந்திருந்த பிரதமர் மோடி, ராஜ் பவனில் இரவை கழித்துவிட்டு காலையில் வேலூர் புறப்பட்டார். இதுகுறித்து விமர்சித்திருக்கும் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, “தேர்தல் விதிமுறைகளை மீறி ராஜ் பவனில் தங்குகிறார் பிரதமர். அங்கேயே பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதையே முதல்வர் செய்தால் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளுமா?” என்று பேசியிருக்கிறார்.

error: Content is protected !!