news

News April 2, 2025

BREAKING: இவர்தான் புதிய பாஜக தலைவர்..?

image

சட்டமன்றத் தேர்தலை கணக்கில் கொண்டு ஏப்.9ம் தேதி பாஜக மாநிலத் தலைவர் அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. கொங்கு பகுதியில் பாஜக வலுவாக இருக்கிறது. இதனால், தென் மாவட்டங்களில் தேவர், நாடார், தேவேந்திர குல வேளாளர் ஆகிய பெரும்பான்மை சமூகத்தினரிடம் இணக்கமாக இருக்கும் நயினாரை தலைவராக அறிவிக்க தலைமை முடிவு செய்துள்ளதாம். இதை அறிந்த, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் அவரை சந்தித்து வாழ்த்து கூறியுள்ளனர்.

News April 2, 2025

ஹாக்கிக்கு விடை கொடுத்த இந்திய வீராங்கனை

image

இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 15 ஆண்டுகளாக விளையாடிவரும் அவர், இந்திய ஹாக்கி வரலாற்றில் அதிக போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். இதுவரை 320 போட்டிகளில் விளையாடிய வந்தனா, 158 கோல்களை அடித்துள்ளார். ‘இது சரியான நேரம் என்பதால் ஓய்வை அறிவித்தேன். இந்த முடிவு எளிதானது அல்ல’ என அவர் தெரிவித்துள்ளார்.

News April 2, 2025

தமிழக மீனவர்களை மத்திய அரசு மறந்து விடுகிறது: CM

image

கச்சத்தீவு மீட்பு தொடர்பான தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய <<15965956>>CM ஸ்டாலின்<<>>, இலங்கை அரசுடனான ஒப்பந்தத்தை திருத்தி அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி மீனவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுவதாகவும், தமிழக மீனவர்களை மத்திய அரசு மறந்துவிடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வு என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

News April 2, 2025

4 மாவட்டங்களுக்கு விடுமுறை

image

காசிவிசுவநாத சாமி கோயில் குடமுழுக்கு, பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்திற்கு ஏப்.7, 11ஆம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சனி, ஞாயிறு, திங்கள்கிழமை (ஏப்.5,6,7) என தொடர்ந்து 3 நாள்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வருகிறது. ஏற்கெனவே, நெல்லை, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஏப்.7ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News April 2, 2025

கச்சத்தீவை மீட்க தனித் தீர்மானம் கொண்டுவந்தார் CM

image

கச்சத்தீவை திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டுவந்துள்ளார். தீர்மானத்தை முன்மொழிந்து அவையில் பேசிய அவர், இலங்கை அரசிடம் தவிக்கும் மீனவர்கள், படகுகளை நல்லெண்ண அடிப்படையில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இலங்கை செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமருடன் இந்த விவகாரம் தொடர்பாக பேச வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

News April 2, 2025

விண்வெளியில் ஆல்கஹால் மேகம்: சரக்குமழை பொழியுமா?

image

விண்வெளியில் பல ஆச்சரியங்கள் உள்ளன. அக்விலா விண்மீன் தொகுப்பில் 10,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஆல்கஹால் மேகம் இருக்கிறதாம். 400 குவிண்டிலியன் லிட்டர் மெத்தில் ஆல்கஹாலை கொண்டுள்ள இது, சூரிய மண்டலத்தை விட 1,000 மடங்கு பெரியது. பூமியில் உள்ள ஒவ்வொருவரும் தினமும் 3 லட்சம் லிட்டர் குடித்தாலும் அதனை காலி செய்ய 1 பில்லியன் ஆண்டுகளாகும். பூமியில் இருந்து தொலைவில் இருப்பதால் சரக்கு மழை பொழிய வாய்ப்பில்லை.

News April 2, 2025

உல்லாச வாழ்க்கை.. தலையில் கல்லை போட்டு கொலை

image

சென்னை அனகாபுத்தூரில் பாக்யலட்சுமி (33) என்பவர் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையான பாக்யலட்சுமிக்கு முதல் திருமணம் நடைபெற்று 2 குழந்தைகள் உள்ளன. கணவரைப் பிரிந்து தற்போது ஞான சித்தன் என்பவருடன் வசித்து வந்த நிலையில், அவர் வேறொரு நபருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஞான சித்தன், பாக்யலட்சுமியை கொன்றுவிட்டு போலீசில் சரண் அடைந்துள்ளார்.

News April 2, 2025

‘அர்ஜுன் ரெட்டி’ நடிகையிடம் அத்துமீறிய இயக்குநர்

image

அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்த ஷாலினி பாண்டே, 22 வயதில் தனக்கு நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். தெலுங்கு பட ஷூட்டிங்கின்போது கேரவனில் உடை மாற்றிக் கொண்டிருந்த நேரத்தில், கதவை தட்டாமல் இயக்குநர் உள்ளே நுழைந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். கோபத்தில் அந்த இயக்குநரை வெளியே போகச் சொல்லி, தான் கத்தியதாகவும் ஷாலினி பாண்டே தெரிவித்துள்ளார். எந்த இயக்குநராக இருக்கும்?

News April 2, 2025

கோடை விடுமுறை.. விமான பயணிகளுக்கு குட் நியூஸ்

image

கோடை விடுமுறையை ஒட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து 206 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. பயணிகளின் கூட்டத்தை சமாளிக்க கோடை காலம் முழுவதும் 42 சர்வதேச, விமானங்கள், 164 உள்நாட்டு விமானங்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை 50,000த்தில் இருந்து 60,000ஆக அதிகரித்துள்ளதால் விமான சேவைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

News April 2, 2025

அப்பாவான ரெடின் கிங்ஸ்லி!

image

பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி – நடிகை சங்கீதா ஆகியோருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023ஆம் ஆண்டு இத்தம்பதிகள் காதலித்து பெரியோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், திரைத்துறையினரும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அண்மையில் சங்கீதாவுக்கு நடந்த வளைகாப்பு போட்டோஸ் வைரலானது.

error: Content is protected !!