India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், சிறப்பாக விளையாடிய ஹென்ரிச் கிளாசனுக்கு ஐதராபாத் அணி சார்பில் மெடல் வழங்கப்பட்டுள்ளது. 4 பவுண்டரி, 7 சிக்சர்கள் என மொத்தம் 80(34) ரன்கள் குவித்த அவர், அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதனால் ஐதராபாத் அணி சார்பில் இன்று அவருக்கு, பெரிய மெடல் ஒன்று வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன், அதிக ரன் குவித்தவருக்கான ஆரஞ்சு கேப்பையும் பெற்றுள்ளார்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் வாரத்தின் 7 நாட்களும் மோடி தமிழகத்தில் இருப்பதாக கனிமொழி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் மழை பாதிப்பு வந்த போதெல்லாம் தமிழ்நாட்டுக்கு வர மறந்த மோடி, தேர்தல் வந்ததும் வருகிறார். பாஜகவுக்கு தேர்தலில் வாக்கு கிடைத்தால் மட்டும் போதும். தமிழக மக்களின் நலன்களில் அவர்களுக்கு சிறிதும் அக்கறை இல்லை” என விமர்சித்தார்.

அருணாச்சலின் 3 மாவட்டங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திராப், சாங்லாங், லாங்டிங் மாவட்டங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் ஏப்.1 முதல் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 3 காவல்நிலைய பகுதிகளிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை செய்து கொள்வேன் எனக் கூறியதால் மத்திய அரசு சாலை அமைத்ததாக எம்பி கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார். குடியாத்தத்தில் வாக்கு சேகரித்த அவர், “கடந்த தேர்தலில் இங்கு ரிங் ரோடு அமைப்பதாக வாக்குறுதி கொடுத்தேன். அமைச்சர் நிதின் கட்கரியிடம் இது குறித்து பேசும் போது, இப்போது முடியாது எனக் கூறினார். அப்படி என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்றேன். அதன் பிறகே அவர் சாலை அமைக்க நிதி ஒதுக்கினார்” என்றார்.

கெஜ்ரிவாலை டெல்லி முதல்வர் பதவியிலிருந்து நீக்கக் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கெஜ்ரிவால், அங்கிருந்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இந்நிலையில் அவரை பதவி நீக்கக் கோரி தொடுக்கப்பட்ட மனு விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றத்தால் தலையிட முடியாது என கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

செந்தில் பாலாஜி வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய ED-க்கு அமர்வு நீதிபதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ED வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய செந்தில் பாலாஜியின் மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட இருந்த நிலையில், மீண்டும் வாதங்களை முன்வைக்க அவர் அனுமதி கோரினார். இதை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய ED-க்கு உத்தரவிட்டு, வழக்கை ஏப்ரல் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

2024ஆம் ஆண்டு TANCET தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. எம்பிஏ, எம்சிஏ படிப்புகள் உள்ளிட்ட பிஜி படிப்புகளில் சேர்வதற்காக தமிழ்நாட்டில் மாநில அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வே TANCET. இந்த ஆண்டுக்கானத் தேர்வு கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது. அதற்கான முடிவை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. tancet.annauniv.edu. என்ற இணையதளத்தில் முடிவை தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

தேர்தல் நெருங்கி வருவதால் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? என்பதை அறிய பலர் முயற்சிக்கின்றனர். இதற்கு https://voters.eci.gov.in/ என்ற தளத்தில் வாக்காளர் பட்டியலில் உள்ள தேடல் என்பதைக் கிளிக் செய்யவும். EPIC/விவரங்கள்/மொபைல் எண் மூலம் எளிதாகச் சரிபார்க்கலாம். VOTER HELPLINE ஆப் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். பெயர் இல்லை என்றால் தாசில்தார் அலுவலகத்தில் படிவம்-6 மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்பட்டு சின்னம் ஒதுக்கவில்லை என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். சின்னம் ஒதுக்காததால், இரட்டை இலை சின்னத்தில் அவர் போட்டியிடுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “2 மாதத்துக்கு முன்பே சின்னம் கேட்டேன். நீதிமன்றமும் உத்தரவிட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக சின்னம் ஒதுக்கவில்லை” என்று தெரிவித்தார்.

வருமான வரித்துறைக்கு எதிராக காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2014 -2017 வரையிலான 4 ஆண்டுகால காங்கிரஸ் வரவு செலவு கணக்கை மறு ஆய்வு செய்ய வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. இதை எதிர்த்து காங்கிரஸ் தாக்கல் செய்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Sorry, no posts matched your criteria.