India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதுவரை ₹193 கோடி ரூபாய் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மார்ச் 16 முதல் இன்று வரை ₹82.63கோடி ரொக்கம், ₹89.41 கோடி மதிப்பிலான தங்கம் உட்பட மொத்தம் ₹192.67 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கும்ப ராசியின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் இன்று சஞ்சரித்துள்ளதால் 12 ராசிகளுக்கும் பலன்கள் கிடைக்கப் போகிறது. குறிப்பாக மேஷம், கன்னி, விருச்சிகம், தனுசு ராசியினர் ஏகபோக வாழ்க்கையை அனுபவிக்க உள்ளனர். கடன் தொல்லை நீங்குவது, புதிய பணி வாய்ப்பு, பொருளாதார நிலை சீரடைவது, குடும்ப மகிழ்ச்சி மேலோங்குவது, பணம், நகை சேர்க்கை என மேற்கண்ட ராசியினருக்கு பல்வேறு சுப பலன்கள் கிடைக்கப் போகிறது.

மகளின் ஆசையை நிறைவேற்றியது குறித்து நடிகர் கொட்டாச்சி நெகிழ்வுடன் பகிர்ந்துள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றில் அவர், ‘என் பொண்ணு மானசாவுக்கு ஒரு பெரிய கார் வாங்கணும்னு ரொம்ப நாள் ஆசை. எங்க வசதிக்கும் மீறி லோன் வாங்கித்தான் இந்த காரை வாங்க முடிஞ்சது. என் பொண்ணோட சந்தோஷம் முக்கியம். அவளோட ஆசைகளை நிறைவேற்றி சந்தோஷப்படுத்தும் போது, என் அப்பா, அம்மாவையே சந்தோஷப்படுத்துற மாதிரி ஃபீல் வருது’ என்றார்.

RCB அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர்கள் பட்லர், சஞ்சு சாம்சன் இருவரும் ஒருவர் பின் ஒருவராக அரை சதம் விளாசியுள்ளனர். RCB அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்துவரும் இவர்கள் பவுண்டரி, சிக்ஸர்கள் என விளாசி வருகின்றனர். தற்போது RR 12 ஓவர்கள் முடிவில் 124/1 ரன்கள் எடுத்துள்ளது. RR வெற்றிக்கு இன்னும் 60 ரன்கள் தேவைப்படும் நிலையில் 48 பந்துகள் கைவசம் உள்ளது.

இன்றைய இளம் தலைமுறையினர் சிலர், மது, சிகரெட் மற்றும் புகையிலை பழக்கங்களுக்கு அடிமையாகியுள்ள சூழலில், அதனால் உயிரிழப்பு ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மது அருந்துவது மகிழ்ச்சியாக தெரிந்தாலும், நிஜத்தில் அதனால் பிரச்னைதான் எனக் கூறியுள்ள நிபுணர்கள், புகைப்பிடிப்பது மற்றும் புகையிலை பொருட்களை உபயோகிப்பதால் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு உயிரிழக்கலாம் என எச்சரித்துள்ளனர்.

பதவி ஆசை கூறி தன்னை பாஜகவில் சேர அழைப்பு விடுத்ததாக முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் கூறியுள்ளார். தென்காசி தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அவர், ‘இப்போதுதான் பலர் பாஜகவில் இணைகின்றனர். ஆனால், 2014இல் பெட்ரோலியம், துறைமுக துறைகளில் முக்கிய பொறுப்பு தருவதாகக் கூறி என்னை அழைத்தனர். ஆனால், இந்த மண்ணையும், மக்களையும் நேசித்ததால் நான் அங்கு செல்லவில்லை’ எனக் கூறியுள்ளார்.

விராட் கோலிக்கு கிரிக்கெட்டை தாண்டி, அவரது ஹேர் ஸ்டைலுக்கென தனி பாலோயர்கள் உண்டு. கோலியின் ஹேர் கட் புகைப்படங்களை பிரபல ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆலிம் ஹக்கீம் அவ்வப்போது தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிடுவார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வரும். இந்நிலையில், விராட் கோலி ஹேர் கட் செய்ய குறைந்தது ரூ.1 லட்சம் செலவிடுவதாக, ஆலிம் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

விப்ரோ தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து தியரி டெலாபோர்ட் ராஜினாமா செய்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக ஸ்ரீனிவாஸ் பாலியா நாளை பொறுப்பேற்கிறார். இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் தலைமை செயல் அதிகாரியாக இருந்த தியரி டெலாபோர்ட், 2022 – 23 நிதியாண்டில் ரூ.82 கோடி சம்பளம் வாங்கி கவனம் ஈர்த்தவர். இவரது பதவி காலத்தில் விப்ரோ பங்குகள் 117% ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட்டில் தோனி போல, அரசியலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நல்ல ஃபினிஷர் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கிண்டல் அடித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் பிரசாரம் செய்த அவர், ஊழலும், காங்கிரஸும் உடைக்க முடியாத கூட்டணி வைத்துள்ளதாக விமர்சித்தார். இந்திய அளவில் ஆதிக்கம் செலுத்திவந்த காங்கிரஸ் கட்சி, தற்போது ஒரு சில மாநிலங்களில் மட்டுமே ஆட்சி செய்து வருவதாகவும் கூறினார்.

தேசிய திறனறி தகுதித் தேர்வில் வெல்லும் மாணவர்களுக்கு மாதம் ₹1000 வழங்கப்படுகிறது. 8ம் வகுப்பில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 9-12ஆம் வகுப்பு வரை மொத்தம் ₹48000 வழங்கப்படும். மாதந்தோறும் 7ஆம் தேதி மாணவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் நிலையில், நாளை இந்தத் தொகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை, நாளை கிடைக்காவிட்டால் திங்கட்கிழமை வரவு வைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sorry, no posts matched your criteria.