India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைத்தது யார் என நாட்டு மக்களிடம் ஸ்டாலின் எடுத்துரைக்க வேண்டுமென பாஜக வலியுறுத்தியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா, கச்சத்தீவு ஒப்படைக்கப்பட்டபோது மத்தியிலும், தமிழகத்திலும் எந்த கட்சி ஆட்சியில் இருந்தது என ஸ்டாலின் எடுத்துரைக்க வேண்டும் என்றார். கச்சத்தீவை ஒப்படைத்த காங்கிரஸூடன் திமுக ஏன் கூட்டணியில் உள்ளது எனவும் வினவினார்.
நடப்பு ஐபிஎல் தொடர் விசித்திரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய புள்ளிப்பட்டியலின்படி, முதல் 4 இடங்களில் இருக்கும் அணிகள் மொத்தமாக ஒரே ஒரு IPL கோப்பையை (GT) மட்டுமே வென்றிருக்கிறது. ஆனால், கடைசி 6 இடங்களில் இருக்கும் அணிகள் மொத்தமாக 15 கோப்பைகளை வென்றிருக்கின்றன. அதாவது, சூப்பர்ஸ்டார் அணிகள் அனைத்தும் இந்தமுறை வீழ்ச்சியை கண்டுள்ளன.
சற்றுமுன் ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. க்யூஷு தீவில் 6.2 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை. நான்கு தினங்களுக்கு முன் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 3000 பேர் உயிரிழந்தனர். அந்த சோகத்தில் இருந்து உலகம் இன்னும் மீள்வதற்கு முன் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 170 ரன்களை வெற்றி இலக்காக ஆர்சிபி நிர்ணயித்துள்ளது. பெங்களூரில் நடக்கும் இப்போட்டியில் முதலில் ஆர்சிபி பேட்டிங் செய்தது. நட்சத்திர வீரர் கோலி 7 ரன்னில் ஆட்டமிழந்த போதிலும், மற்ற வீரர்கள் அதிரடி காட்டினர். இதனால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு ஆர்சிபி அணி 169 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக லிவிங் ஸ்டோன் 40 பந்துகளில் 54 ரன்களை விளாசினார்.
தன்னைத் தானே பழுதுநீக்கி சரிசெய்து கொள்ளும் அற்புதத் திறன் கொண்டது நமது உடல். உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றும், <<15972009>>குறிப்பிட்ட நேரத்தில்<<>> தன்னை தானே சரிசெய்து கொள்கின்றன. அதை புரிந்து நடந்தால் ஆரோக்கியமாக வாழலாம். இந்த இயற்கை சுழற்சியில் உடலின் நச்சுகள் நீக்கப்படுகின்றன, ஜீரணம் மேம்படுகிறது, நோய் எதிர்ப்பு சக்தி வலிமை பெறுகிறது. ஆகவே உங்கள் தினசரி பழக்கங்களை இந்த நேரங்களுக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளுங்கள்.
ஐபிஎல் போட்டியில் இதுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), குஜராத் டைடன்ஸ் அணிகள் 5 முறை மோதியுள்ளன. இதில் ஆர்சிபி அதிக முறையாக 3 முறை வென்றுள்ளது. குஜராத் டைடன்ஸ் 2 முறை வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் குஜராத் வென்றால் 3-3 என சமன் பெறும். ஆர்சிபி வெற்றி பெற்றால் 4-2 என குஜராத் அணி மீது ஆதிக்கம் செலுத்தும். இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும்? கீழே கமெண்ட் பண்ணுங்க.
நாடு முழுவதும் பல பயனர்களுக்கு UPI சேவைகள் முடங்கியுள்ளன. DownDetectorஇன் தரவுகளின்படி, இன்று மதியம் முதல் பலருக்கு UPI சேவைகள் செயல்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால், அவசரத்திற்கு பணப்பரிமாற்றம் செய்ய முயன்றோர் அவதிக்குள்ளானார்கள். உங்களுக்கு இந்த சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டதா என கமெண்ட்டில் சொல்லுங்க.
வாக்கு வங்கிக்காக வக்ஃபு வாரிய மசோதா குறித்து தவறான கருத்து பரப்பப்படுவதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். மக்களவை விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர், வக்ஃபு வாரிய மசோதா மூலம் இஸ்லாமிய மக்களின் மத விவகாரத்தில் அரசு தலையிட போவதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் குற்றசாட்டுகளை மறுத்தார். வக்ஃபு வாரிய சொத்துகளை திறம்பட நிர்வகிக்கும் நோக்குடனேயே மசோதாவில் சரத்துகள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்தியர்களில் 3-ல் ஒருவர் தூக்கப் பற்றாக்குறையால் அவதிப்படுவதாக Wakefit நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 4500 பேரிடம் நடத்திய ஆய்வில் 58% பேர் இரவு 11 மணிக்கு பின்னரே உறங்க செல்வதும், 44% பேர் விழித்தெழும்போது சோர்வாக உணருவதாகவும் தெரிய வந்துள்ளது. 18% பேர் காலை 9 மணிக்கு மேல் தான் எழுகின்றனராம். படுக்கையில் செல்போன் பயன்படுத்துவதே இதற்கு முக்கிய காரணமாம். நீங்க எப்படி?
வக்ஃபு வாரிய நிர்வாகத்தில் முஸ்லிம் அல்லாதோர் நியமிக்கப்பட மாட்டர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இஸ்லாமியர் அல்லாதோரை வக்ஃபு நிர்வாகத்தில் நியமிக்கும் வகையில் எந்த சரத்தும் மசாேதாவில் இல்லை என்றும், 1995ஆம் ஆண்டு சட்டத்தில் கவுன்சில், போர்டு தொடர்பாக உள்ள சரத்துகள் மசோதா மூலம் திருத்தப்பட இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.