news

News April 3, 2025

BREAKING: வக்ஃபு திருத்த மசோதா நிறைவேறியது

image

12 மணி நேரம் காரசார விவாதத்திற்கு பிறகு, மக்களவையில் வக்ஃபு திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேறியது. மசோதாவிற்கு ஆதரவாக 288 எம்பிக்களும், எதிராக 232 எம்பிக்களும் வாக்களித்துள்ளனர். இதையடுத்து மாநிலங்களவையில் மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும். அங்கு நிறைவேறும் பட்சத்தில் குடியரசுத்தலைவருக்கு அனுப்பப்பட்டு, அவர் கையெழுத்திட்டால், சட்டம் நடைமுறைக்கு வரும்.

News April 3, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஈகை ▶குறள் எண்: 225 ▶குறள்: ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின். ▶பொருள்: பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.

News April 3, 2025

சொந்த மண்ணில் இந்திய அணி எதிர்கொள்ள உள்ள அணிகள்

image

நடப்பு ஆண்டில் இந்தியாவில் நடைபெற உள்ள போட்டிகளின் பட்டியலை BCCI வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா அணியுடன் 2 டெஸ்ட், 3 ODI, 5 டி20 போட்டிகளிலும் விளையாட உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டி நவ.14ஆம் தேதி தொடங்குகிறது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டிகள் நவ.30ஆம் தேதி தொடங்குகிறது.

News April 3, 2025

அரசு பதவியில் இருந்து நீக்கப்படும் மஸ்க்?

image

எலான் மஸ்கிற்கு கொடுக்கப்பட்ட பணிகள் முடிந்ததும், அவர் சிறப்பு அரசு பணியில் (DOGE தலைவர்) இருந்து விடுவிக்கப்படுவார் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் தெரிவித்துள்ளார். பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு தனது தொழிலில் கவனம் செலுத்தினாலும், அவர் தொடர்ந்து டிரம்பின் அதிகாரப்பூர்வமற்ற ஆலோசகராக செயல்படவே வாய்ப்புள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன.

News April 3, 2025

வக்ஃப் சட்ட (திருத்த) மசோதா: பாஜக செய்யும் மாற்றம் என்ன?

image

வக்ஃப் சட்ட திருத்தத்தின்படி, வக்ஃப் வாரியம் தன் சொத்துகளை மாவட்ட கலெக்டர்களிடம் பதிவு செய்யவேண்டும். இதனால் சரியான மதிப்பீட்டை செய்யமுடியும். தற்போது வக்ஃப் உறுப்பினர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். இனி அனைத்து உறுப்பினர்களும் அரசால் பரிந்துரைக்கப்படுவர். தலைமை செயல் அலுவலர் (mutawallis), 6 மாதங்களுக்குள் சொத்து விவரங்களை பதிவேற்ற வேண்டும். அரசு தணிக்கை செய்யும்.

News April 3, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஏப்ரல் – 03 ▶பங்குனி – 20 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:00 AM – 11:30 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 01:30 AM & 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 01:30 PM – 03:00 PM ▶எமகண்டம்: 06:00 AM – 07:30 AM ▶குளிகை: 09:00 AM – 10:30 AM ▶திதி: சஷ்டி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶சந்திராஷ்டமம்: சுவாதி ▶நட்சத்திரம்: ரோகிணி ம 12.32

News April 3, 2025

வக்ஃபு விவகாரம்.. காங். MLA மரண எச்சரிக்கை

image

வக்ஃபு திருத்த மசோதா நிறைவேறினால் உயிரை மாய்த்து கொள்வேன் என பீகார் காங். MLA இஷார்குல் ஹுசைன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது சிறுபான்மையினருக்கு எதிரான பிரச்னை மட்டும் அல்ல, அடுத்ததாக குருத்வாரா, தேவாலயங்கள், கோயில்களின் நிலங்களை கைப்பற்ற அரசு இதுபோன்றதொரு மசோதாவை கொண்டுவரும் எனவும் அவர் கூறியுள்ளார். முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்பவே இப்படி செய்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News April 3, 2025

இந்தியாவில் அதிகம் வாங்கப்பட்ட கார் இதுதான்

image

இந்தியாவில் அதிக பயணிகள் வாகனங்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் மாருதி சுசூகி முதலிடத்தில் உள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும் 17.60 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதற்கு அடுத்ததாக ஹுண்டாய் 5.98 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக 1.98 லட்சம் பேர் மாருதி சுசூகி வேகன் ஆர் காரை வாங்கியுள்ளனர். 1.96 லட்சம் பேர் டாடா பன்ச் காரை வாங்கியுள்ளனர்.

News April 3, 2025

கர்நாடகாவில் பைக் டாக்சிக்கு தடை விதிக்க ஐகோர்ட் உத்தரவு

image

கர்நாடகாவில் 6 வாரங்களுக்குள் ரேபிடோ, ஊபர் உள்ளிட்ட நிறுவனங்களின் பைக் டாக்சி சேவைக்கு தடை விதிக்க அந்த மாநில ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பைக் டாக்சி இயக்குதலுக்கான தனி விதிகள், வழிகாட்டுதல்களை உருவாக்கவும் கர்நாடக அரசுக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. அதேபோல், பைக் டாக்சிக்கான உரிய சட்டங்கள் வரும்வரை பைக்குகளை வணிக போக்குவரத்து வாகனமாக இயக்க அனுமதி வழங்க உத்தரவிட முடியாது எனவும் கூறியுள்ளது.

News April 3, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 03) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

error: Content is protected !!