India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாகை எம்பி செல்வராஜ் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாக முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். அரை நூற்றாண்டு காலம் பொதுவுடமை இயக்கத்தில் தன்னை முழுமையாக ஒப்படைத்து, டெல்டா மாவட்ட ரயில்வே திட்டங்களுக்காகவும், வேளாண் மக்கள் உரிமைக்காகவும் பல போராட்டங்களை நடத்தியவர். என் மீது தனிப்பட்ட முறையில் பாசம் வைத்த அவரின் இழப்பு தமிழ் சமூகத்திற்கு பெரும் இழப்பு என தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் மக்களவைத் தேர்தலோடு, சட்டமன்றத்திற்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்கு புங்கனூர் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் 15 பேர் கடத்தப்பட்டதாக அக்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு புகார் தெரிவித்துள்ளார். ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகரின் ஆதரவாளர்களே கடத்தியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

நாகை எம்.பி செல்வராஜ் மறைவுக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவால் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும், கட்சி பொறுப்புகளையும், மக்கள் பிரதிநிதி என்ற முறையில் தொகுதிப் பிரச்னைகளிலும் ஓயாது செயல்பட்டு முன்னுதாரணமாக திகழ்ந்து வந்ததாக நினைவுகூர்ந்துள்ளார். அத்துடன், அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

*ஒரு ஸ்பூன் வெந்தயத்துடன் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி, சுமார் 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு குடித்து வந்தால், நுரையீரலில் உள்ள சளி கரைந்து வெளியேறும். *தினமும் மூச்சுப்பயிற்சி செய்வதன் மூலம் நுரையீரல் சளி கரைந்து வெளியேற வாய்ப்பு உள்ளது. *சளி வெளியேற கொதிக்கும் நீரில் ஆவி பிடிக்கலாம். *கொதிக்கும் நீரில் உப்பு கலந்து, வெதுவெதுப்பாக இருக்கும்போது வாயில் ஊற்றி கொப்பளிக்க நுரையீரலில் உள்ள சளி குறையும்.

நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையை RCB பெற்றுள்ளது. DCக்கு எதிரான நேற்றைய போட்டியில் RCB 47 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, ப்ளே-ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது. புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறிய RCB, இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், 6 போட்டிகளில் வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் ( இன்று காலை 10 மணி வரை) இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, புதுக்கோட்டை, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில், தற்போது மலையாள படங்களுக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தமிழ் ரசிகர்களைக் கவரும் விதமாக ‘கட்டீஸ் கேங்’ மலையாள படத்தை அனில் தேவ் இயக்கியுள்ளார். உன்னிலாலு, சவுந்தரராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தில் கதாநாயகன் ரஜினியின் தீவிர ரசிகராக நடித்துள்ளார். இந்நிலையில், ரஜினி ரசிகர்களை கெளரவிக்கும் விதமாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு படக்குழு சீருடை வழங்கியது.

காங்., சிறுபான்மையினரின் நலனில் மட்டும் அக்கறை கொண்டுள்ளதாக பாஜக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தனது எம்பி நிதியில் 70%க்கும் மேல் சிறுபான்மையினருக்கு செலவிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ரேபரேலியில் பிரசாரம் செய்த அவர், பல ஆண்டுகளாக எம்பியாக இருக்கும் சோனியா காந்தி வாக்களித்த மக்களுக்காக எதையும் செய்யவில்லை, என்றார்.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருவதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள பணத்தை வெளியே எடுத்து வருகின்றனர். மே மாதத்தில் மட்டும் சுமார் ₹17 ஆயிரம் கோடி மதிப்பிலான பங்குகளை அவர்கள் விற்றிருக்கிறார்கள். இதனால் இந்திய பங்குச்சந்தைகளில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது. இந்தப் பணத்தை அவர்கள் சீனாவில் முதலீடு செய்துவருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

நடிகர் விஜய் நன்றாகச் செயல்படக் கூடியவர் என்றும், அவர் அரசியல் கட்சி தொடங்கியதில் மகிழ்ச்சி எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அத்துடன், எம்ஜிஆரைப் போல அவர் சம்பாதித்த பணத்தை பொதுமக்கள், மாணவர்களுக்குச் செலவு செய்ய நினைப்பதாகவும் புகழ்ந்து கூறினார். முன்னதாக, நேற்று இபிஎஸ் பிறந்தநாளையொட்டி, அவருக்கு விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.