India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸுக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸுக்கு எதிராக போட்டியிடும் 5 ஓபிஎஸ்களுக்கு ,1. திருமங்கலம் ஒ.பன்னீர்செல்வம் – வாளி, 2. ராமநாதபுரம் ஒ.பன்னீர் செல்வம் – கண்ணாடி டம்ளர், 3. கங்கைகொண்டான் ம.பன்னீர் செல்வம் – பட்டாணி, 4. சோலையழகுபுரம் ஒ.பன்னீர் செல்வம் – திராட்சை, 5. உசிலம்பட்டி ஒ.பன்னீர்செல்வம் – கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாரடைப்பால் நேற்றிரவு காலமான நடிகர் டேனியல் பாலாஜியின் மறைவிற்கு மநீம தலைவர் கமல் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து, “இளவயது மரணங்களின் வேதனை பெரிது. கண் தானம் செய்ததனால் மறைந்த பின்னும் அவர் வாழ்வார். ஒளியை கொடையளித்துச் சென்றிருக்கும் பாலாஜிக்கு என் அஞ்சலி” என X தளத்தில் பதிவிட்டுள்ளார். டேனியல் பாலாஜி, கமலுடன் இணைந்து வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்திருந்தார்.

லக்னோவில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் பூரண் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இந்த போட்டியில் கே.எல்.ராகுல் கேப்டனாக அல்லாமல் சாதாரண வீரராக விளையாடுவார். புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் அணி 5ஆவது இடத்திலும், லக்னோ அணி கடைசி இடத்திலும் உள்ளது. இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றிபெறும்?

இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்கவில்லை என திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளா். இது தொடர்பாக பேசிய அவர், “பாஜக நிரந்தரமாக ஆட்சியில் இருக்கும் என தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகளின் அடிமையாக அந்த அமைப்பு இருந்து வருகிறது. இந்த தேர்தல் மக்களுக்கும், பாஜகவுக்கும் நடக்கிற சுதந்திரப் போர். இதில் மக்கள் நிச்சயம் வெல்வார்கள்” என்றார்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்பு படிப்பதற்காக நடைபெற இருந்த தேர்வு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 10 மற்றும் 12ஆம் தேதிகளில் நடைபெற இருந்த பட்டயப் படிப்புக்கான தேர்வுகள் ஏப்ரல் 24, 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகை காரணமாக தேர்வு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தேர்வு வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தின் குவாலியரை சேர்ந்த கல்லூரி மாணவரான பிரமோத் குமார் தண்டோடியாவுக்கு ரூ.42 கோடி வங்கி பரிவர்த்தனைக்கு வரி செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு முதல் மும்பை மற்றும் டெல்லியில் இயங்கும் நிறுவனம், தனது பான் எண்ணை தவறாக பயன்படுத்தி வருகிறது. இது எப்படி சாத்தியம் என்பது எனக்கு தெரியவில்லையென பிரமோத் குமார் தண்டோடியா வேதனை தெரிவித்துள்ளார்.

நடிகர் டேனியல் பாலாஜி மறைவுக்கு சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் டேனியல் பாலாஜி இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு சூர்யா தனது X பக்கத்தில், “டேனியல் பாலாஜியின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியும், வலியும் அடைந்தேன். ஒரு காட்சி சரியாக வருவதற்கு தன்னை தானே எப்போதும் உந்தி கொள்பவர். ‘காக்க காக்க’ படத்தின் இனிமையான நாட்கள் நினைவுகளாக நிழலாடுகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

நடப்பு ஐ.பி.எல்லில் இதுபோன்ற மோசமான பவுலிங்கை வைத்து கொண்டு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கோப்பையை வெல்ல வாய்ப்பே இல்லையென இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆருடம் கூறியுள்ளார். நேற்று சின்னசாமி மைதானத்தில் நடந்த KKR அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் ஆடிய RCB அணி 182 ரன்களை குவித்தது, இருப்பினும் பந்துவீச்சாளர்கள் சொதப்பவே, 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ராமநாதபுரம் தொகுதியில் பாஜக ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேட்புமனுக்களை வாபஸ் பெறும் அவகாசம் முடிந்த நிலையில், சின்னங்கள் ஒதுக்கப்பட்டது. தனக்கு வாளி, திராட்சை, பலாப்பழம் ஆகிய 3 சின்னங்களை விருப்ப சின்னங்களாக ஓபிஎஸ் கேட்டிருந்தார். இந்நிலையில், ஓபிஎஸ்க்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலூர் குடியாத்தம் அருகே நீரில் மூழ்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சரோஜா, அவரது மகள் லலிதா உள்பட 4 பேர் முனீஸ்வரன் கோயிலுக்கு சென்றனர். சாமி தரிசனத்தை முடித்துவிட்டு அருகிலிருந்த ஏரியில் குளித்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சம்பவத்தை அடுத்து 4 பேரின் சடலங்களையும் கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.