India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பாரதிய ஜனதா கட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்று பேசியிருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “விஷப் பாம்பை கூட நம்பலாம். ஆனால் பாஜகவை நம்ப முடியாது” என்று கடுமையாக சாடியிருக்கிறார். “பாஜக நாட்டை அழித்து வருகிறது, ED போன்ற தன்னாட்சி அமைப்புகள் பாஜகவுக்கு கட்டுப்பட்டு நடக்கின்றன.” என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை மம்தா முன்வைத்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ரூ.605 கோடி வரி பாக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், அதில் 2013-14 முதல் 2017-2018 மற்றும் 2019-20ஆம் மதிப்பீட்டு ஆண்டுகளில் ரூ.308.65 கோடி வருமான வரி செலுத்தப்படாமல் உள்ளது. மேலும் அதற்கான வட்டி ரூ.296.22 கோடி சேர்த்து, மொத்தம் ரூ.605 கோடியை செலுத்துமாறு குறிப்பிட்டுள்ளது.

மத்தியில் I.N.D.I.A. கூட்டணி ஆட்சி அமைந்த உடன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திருச்சியில், துரை வைகோவை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், மக்களின் நலன் கருதி தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளும் அகற்றப்படும் என உறுதி தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட காலை உணவுத் திட்டம் உலகம் முழுவதும் விரிவடைந்து வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

அதிகாரம் தேவை என நினைத்திருந்தால் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்போம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நீலகிரி தொகுதி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், INDIA கூட்டணியில் பல கட்சிகள் உள்ளதால் அங்கு ஒற்றுமை இல்லை எனக் கூறினார். மேலும், குடும்ப உறுப்பினர்களுக்கு ஆட்சி, அதிகாரம் தேவை என்பதால் மத்தியிலும் ஆட்சியை பிடிக்க ஸ்டாலின் துடிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

தன்னை விலைக்கு வாங்கும் அளவுக்கு பாஜகவிடம் வசதி கிடையாது என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜகவில் இணையப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் உலா வந்தது. இதற்கு X பக்கத்தில் பதிலளித்துள்ள அவர், தன்னை விலைக்கு வாங்க முயற்சித்தால் அது அவர்களால் முடியாது என்பதை உணர்வார்கள் எனக் கூறியுள்ளார். பிரகாஷ் ராஜின் இந்த X பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு 35% ஆக இருந்த வேலைவாய்ப்பின்மை தற்போதைய பாஜக ஆட்சியில் 65% அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், ஐஐடியில் உயர் தொழில்நுட்பக் கல்வி பயின்றவர்கள் கூட 30% பேர் வேலை இல்லாமல் தவிப்பதாக கூறினார். மேலும், தனிநபர் சராசரி வருவாயில் இந்தியா 120ஆவது இடத்தில் உள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.

கடந்த நிதியாண்டில் வங்கிகள் அபராதமாக மட்டும் சுமார் ₹35,000 கோடியை வசூல் செய்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். வங்கிக் கணக்கில் குறைந்த பட்ச கட்டணம் இல்லை, எஸ்.எம்.எஸ் சர்வீஸ்கள், கூடுதலாக ஏடிஎம் மையங்களை பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு அபராதம் மற்றும் சேவைக் கட்டணமாக இந்தத் தொகை வசூலிக்கப் பட்டுள்ளது. குறைந்தபட்ச தொகை இல்லை என்பதற்காக மட்டும் ₹21,000 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

3 ஆண்டுகால திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக உள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். காரமடை பிரசாரத்தில் பேசிய அவர், திமுகவில் ஓடாய் உழைப்பவர்களுக்கு பதவி கிடைக்காது. அங்கு வாரிசு அரசியலுக்கே முக்கியத்துவம் தருவதாக குற்றம்சாட்டினார். மேலும், நீட் தேர்வை கொண்டு வந்த திமுக, காங்கிரஸ் கட்சியினர் தற்போது அதனை ரத்து செய்துவிடுவோம் என பொய் பேசி வருவதாக கடுமையாக சாடினார்.

BWF தாமஸ் மற்றும் உபெர் கோப்பை பேட்மிண்டன் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் பட்டியலை, இந்திய பேட்மிண்டன் சங்கம் அறிவித்துள்ளது. சீனாவின் செங்டுவில் ஏப்.27 முதல் மே 5ஆம் தேதி வரை நடைபெறும் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில், லக்ஷ்யா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராவதற்காக பி.வி.சிந்துவுக்கு இத்தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தற்போது மிக முக்கியமான கட்டத்தில் உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நாட்டை உருவாக்குபவர்கள், நாட்டை அழிப்பவர்கள் இடையே உள்ள வித்தியாசத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு, அரசியலமைப்பு உரிமைகளை காங்கிரஸ், INDIA கூட்டணி உறுதியாக செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.