India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இன்று முதல் கீழ்காணும் வருமான வரி அமலுக்கு வருகிறது. 1) ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வருமானம் கொண்டோருக்கு 5%, 2) ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை வருமானம் உடையோருக்கு 10%, 3) ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வருமானம் கொண்டோருக்கு 15%, 4) ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு 20%, 5) ரூ.15 லட்சம், அதற்கு மேல் வருமானம் உடையோருக்கு 30% வரி அமலாகிறது.

அரண்மனை 4 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியதற்கு இயக்குநர் சுந்தர் சி விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், “அரண்மனை 4 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. ஆனால் கால்ஷிட் பிரச்சினையால் அவரால் நடிக்க முடியவில்லை. இதனால் விலகி விட்டார். மற்ற 3 பாக அரண்மனை படங்களுடன் ஒப்பிடுகையில் அரண்மனை 4 படம் மாறுபட்ட கோணத்தில் இருக்கும்” என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் அரசியல் கட்சியினர் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பரப்புரை கூட்டத்திற்கு அழைத்து வரப்படும் ஆண்களுக்கு குவார்ட்டர், பிரியாணி, ₹500 ரொக்கம், பெண்களுக்கு ₹500 ரொக்கம் தரப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதுவும், விடுமுறை தினமான நேற்று இளைஞர்களை அதிகளவில் தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு அரசியல் கட்சிகள் பயன்படுத்தியுள்ளன. அவர்களுக்கு ₹1000 வரை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டம், நிதி ஆயோக் போன்றவை ரத்து செய்யப்படும் என கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண்துறைக்கு தேசிய அளவில் தனி பட்ஜெட் வெளியிடப்படும். 12ஆம் வகுப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும். கவர்னர் பதவி ஒழிக்கப்படும். மத்திய அரசு கொண்டு வந்த 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் ரத்து செய்யப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் அதில் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாட்டு பாஜகவில் இருந்து அடுத்தடுத்து விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். முன்னாள் எம்எல்ஏ ப.இளவழகன் மீண்டும் இபிஎஸ் முன்னிலையில் இணைந்துள்ளார். அதேபோல், நேற்று இரவு பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், தொழிலதிபருமான KPD இளஞ்செழியனும் தனது தொண்டர்களுடன் அதிமுகவில் இணைந்தார். இருவருக்கும் அதிமுகவில் முக்கியப் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடியரசுத் தலைவரை நிற்கவைத்து படம்பிடித்து வெளியிடுவது என்னவகை பண்பாடு? பெரும் அதிர்ச்சியளிக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். பிரதமர், முன்னாள் துணை பிரதமர் ஆகியோருக்கு தேசத்தின் முதல் குடிமகவான குடியரசுத் தலைவரை எங்ஙனம் மதிக்க வேண்டும் என்பது தெரியாதா? என்று விமர்சித்த அவர், இந்த அவமதிப்பு இவர் பெண்மணி என்பதாலா? (அ) இவர் பழங்குடி என்பதாலா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊழலுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மீரட்டில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசுகையில், “மத்திய அரசின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை தொடரும். என்னை அச்சப்படுத்த நடக்கும் முயற்சி வெற்றி பெறாது. நாட்டை கொள்ளையடித்தோரிடம் இருந்து ஊழல் பணம் மீட்கப்படும். என்மீது எத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்தாலும், ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கையை நிறுத்த முடியாது” என்றார்.

நடப்பு 2024 ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. நடந்து முடிந்த 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்த மும்பை அணி, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஹர்திக் பாண்டியா கேப்டனாக பொறுப்பேற்றதும் பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது ஒரு புள்ளி கூட எடுக்காதது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது. இன்றைய போட்டியில் மும்பை அணி வெல்லுமா? என கமெண்டில் சொல்லுங்க

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 3ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்ததால், சாலையோரம் மற்றும் நடுத்தர வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை கடந்த மாதம் ரூ.1960.30ஆக இருந்த நிலையில், ரூ.30.50 குறைந்து ரூ.1,930ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனால், வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
Sorry, no posts matched your criteria.