India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனின் பிறந்த நாள் விழாவில் நடிகர் அஜித் கலந்துகொண்டார். நடராஜன், நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். அவரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நேற்று இரவு நடந்த பார்ட்டியில் கலந்துகொண்ட அஜித், நடராஜனுக்கு கேக் ஊட்டிவிட்டு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த கவுரவ் வல்லப் அக்கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். திசையின்றி பயணிக்கும் காங்கிரஸில் செயல்பட தனக்கு விருப்பமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், சனாதனத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பவோ, நாட்டை வளப்படுத்துபவர்களை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்றோ, தன்னால் கூற முடியாது என்றும் கூறியுள்ளார்.

வெற்றி பெற்று விட்டோம் என்பதற்காக ஆடக்கூடாது, எப்போதுமே அமைதி காக்க வேண்டும் என கொல்கத்தா அணி கேப்டன் ஷ்ரேயஸ் தெரிவித்துள்ளார். டெல்லிக்கு எதிராக 270 ரன்கள் அடிப்போம் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை, இந்த தொடர் வெற்றி அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், ஐபிஎல் போட்டியில் எதுவும் நடக்க வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் இருப்போம் என்றும் கூறினார்.

வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தியும், சிபிஐ வேட்பாளர் ஆனி ராஜாவும் வேட்புமனு தாக்கல் செய்தனர். I.N.D.I.A கூட்டணியில் உள்ள கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவது விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து முத்தரசன் கூறும்போது, வயநாடு தொகுதியில் யார் வென்றாலும் அது I.N.D.I.A கூட்டணியின் வெற்றிதான் என்றும், ராகுல் போட்டியிடுகிறார் என்பதற்காக எங்கள் வேட்பாளரை திரும்ப பெற முடியாது எனவும் கூறினார்.

பாகிஸ்தான் தொழிலதிபர் மியான் முகம்மது மான்சா, அந்நாட்டின் முகேஷ் அம்பானி என அழைக்கப்படுகிறார். 1941இல் கொல்கத்தாவில் பிறந்த அவர், 1947ஆம் ஆண்டு பிரிவினையின் போது குடும்பத்தினருடன் பாகிஸ்தானுக்கு சென்றார். பஞ்சு ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள அவருக்கு, ரூ.1.38 லட்சம் கோடி சொத்துகள் உள்ளன. ஷாகீத்கானை தொடர்ந்து, பாகிஸ்தானின் 2வது பெரிய பணக்காரராக உள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சஞ்சய் நிருபம், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில், உத்தவ் தாக்கரே சில தொகுதிகளில் தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய அவரை, காங்., தலைமை கட்சியை விட்டு நீக்கியது. இந்நிலையில், ஷிண்டே அணியின் சார்பாக, மும்பை வடக்கு தொகுதியில் அவர் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நீட் பல்மருத்துவ முதுநிலை படிப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 259 பல்மருத்துவ கல்லூரிகளில் இருக்கும் 6,228 இடங்களை நிரப்ப கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதனை natboard.edu.in. என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம், மதிப்பெண் விவரங்களை ஏப்.12 முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் ஹோன்ஷூ கிழக்கு கடற்கரைக்கு அருகே சற்றுமுன் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும், சுனாமி எச்சரிக்கை தொடர்பாகவும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. நேற்று தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 9 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியர்களின் ஆயுள்காலம் சராசரியாக 8 ஆண்டுகள் அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. லான்செட் மருத்துவ இதழில் 1990-2021 வரை இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. அதில் உலகத்தில் 6.2 ஆண்டுகளும், இந்தியாவில் 8.3 ஆண்டுகளும் ஆயுள்காலம் அதிகரித்துள்ளதாகவும், சுவாச நோய்கள், பக்கவாதம், புற்றுநோயால் ஏற்படும் மரணம் குறைந்ததே காரணம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி 5 நாட்கள் பட்டினி கிடந்ததாக தெரிவித்துள்ளார். ஐநாவில் இந்திய தூதரகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், 50 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் இருந்தபோது, பிறரிடம் லிப்ட் கேட்டு கார்களில் பயணித்ததாக தெரிவித்தார். மேலும் பல்கேரியா-செர்பியா இடையேயான நிஷ் பகுதியில் பயணித்த போது 5 நாள்கள் பட்டினி இருந்ததாகவும் நாராயணமூர்த்தி கூறினார்.
Sorry, no posts matched your criteria.