news

News April 19, 2024

ALERT: வாக்காளர் பெருமக்களே !

image

இந்தியாவின் அடுத்த ஐந்து ஆண்டு விதியைத் தீர்மானிக்கும் தேர்தல் இது என்பதை அழுத்தமாக உங்கள் மனதில் வையுங்கள். ஜனநாயகத்தைக் காக்க இன்று ஒருநாள் நேரத்தை வாக்குச்சாவடியில் செலவிடுங்கள். அடையாள அட்டையோடு செல்லுங்கள். வாக்கு செலுத்தும்போது, வாக்காளரின் பெயர், சின்னம் உள்ளிட்டவற்றை தெளிவாக பாருங்கள். நீங்கள் வாக்களிக்கும் சின்னம்தான் ‘விவிபேட்’ இயந்திரத்திலும் காட்டுகிறதா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

News April 19, 2024

இஸ்ரேலுக்கு உதவி; 28 ஊழியர்களை நீக்கியது கூகுள்

image

கூகுள் நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 28 ஊழியர்களை அந்நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தி வருகிற இஸ்ரேல் ராணுவத்துக்கு ஏஐ & கிளவுட் தொழில்நுட்ப சேவை வழங்க கூகுள் $1.2 பில்லியனுக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ராணுவத்துக்கு தொழில்நுட்ப ரீதியாக உதவுவதை எதிர்த்து நியூயார்க் & கலிபோர்னியாவில் உள்ள கூகுள் அலுவலகங்களில் ஊழியர்கள் மேல் தர்ணா செய்தனர்.

News April 19, 2024

இந்திய ஜனநாயகத்தை பெருமைப்படுத்திய கூகுள்

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஜனநாயகத் திருவிழாவை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது இந்த சிறப்பு டூடுலில், Google என ஆங்கில மொழியில் உள்ள இரண்டாவது ‘O’-வுக்கு பதிலாக சுட்டு விரலில் வாக்கு செலுத்தியதற்கான அடையாள மையுடன் கூடிய எமோஜி வகையிலான படம் இடம்பெற்றுள்ளது. வாக்குப்பதிவின் அவசியம் குறித்து பயனர்களும் எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது.

News April 19, 2024

‘டைம்’ இதழின் பட்டியலில் இடம்பிடித்த சாக்ஷி மாலிக்

image

‘டைம்’ இதழ் வெளியிட்ட 2024ஆம் ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க பிரபலங்கள் பட்டியலில் சாக்ஷி மாலிக் (31) இடம்பிடித்துள்ளார். ‘டைம்’ இதழ் வெளியிட்ட குறிப்பில், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்ற ஒரே வீராங்கனை சாக்ஷி மாலிக். பெண்கள் & குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைக்கு எதிராக போராடிவரும் அனைவருக்கும் சாக்ஷி முன்னுதாரணமாகத் திகழ்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளது.

News April 19, 2024

வெப்ப நோய்களை விரட்டும் தாகமுக்தி குடிநீர்

image

வெயில் காலத்தில் ஏற்படும் தொற்று நோய்களில் இருந்து உடலை தற்காத்துக்கொள்ள தாகமுக்தி மூலிகைக் குடிநீரை பருகலாமென சித்த மருத்துவம் பரிந்துரைக்கிறது. வெட்டிவேர், பதிமுகம், கருங்காலி, நன்னாரி, சுக்கு போன்றவற்றின் தொகுப்பான தாகமுக்தி மூலிகைப் பொடியை (ஒரு தேக்கரண்டி) ஐந்து லிட்டர் நீரில் போட்டு லேசாகக் கொதிக்க வைத்து, குடிநீராக பயன்படுத்தலாம். இந்தக் குடிநீர் சிறுநீர் எரிச்சலுக்கும் தீர்வளிக்கும்.

News April 19, 2024

மகாபாரதம் கதையை படமாக எடுக்கும் லிங்குசாமி

image

மகாபாரதம் கதையை தழுவிய புராணப் படமொன்றை லிங்குசாமி இயக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகவுள்ள இந்த படத்தை மிகப்பெரிய பாலிவுட் நிறுவனம் ஒன்று தயாரிக்க உள்ளதாம். அர்ஜுனன் & அவனது மகன் அபிமன்யுவை மையமாக வைத்து உருவாகவுள்ள இப்படத்திற்கு கதை எழுதும் வேலையை எழுத்தாளர் ஜெயமோகன் கவனித்து வருகிறார்.

News April 19, 2024

IPL: சென்னை – லக்னோ அணிகள் இன்று மோதல்

image

நடப்பு ஐபிஎல் தொடரின் 34ஆவது போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடைபெற உள்ளது. இதில், LSG , CSK அணிகள் மோதவுள்ளன. நடந்து முடிந்த 6 போட்டிகளில் CSK 4 போட்டிகளிலும், LSG 3 போட்டிகளிலும் வென்று, புள்ளிப்பட்டியலில் முறையே 2 ஆவது & 5 ஆவது இடங்களில் உள்ளன. MI-க்கு எதிரான முந்தைய போட்டியில் வெற்றி அடைந்த CSK அணி, அதே பாதையில் பயணிக்குமென நீங்கள் நினைக்கிறீர்கள்? என்று இங்கே குறிப்பிடவும்.

News April 19, 2024

பாஜகவின் ‘பி’ டீமாக காங்கிரஸ் சீரழிந்து வருகிறது

image

மதச்சார்பற்ற கொள்கையில் இருந்து வெகுவாக விலகிவிட்ட காங்கிரஸ் பாஜகவின் ‘பி’ டீமாக மாறி சீரழிந்து வருகிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மலப்புரத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், பாஜக உடனான காங்கிரஸின் போட்டி தேர்தல் அரசியல் & அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டியாகவே உள்ளது. கேரளாவில் பாஜக வேட்பாளர்களில் 4இல் ஒருவர் முன்னாள் காங்கிரஸ் தலைவர்களாக உள்ளனர்” என்றார்.

News April 19, 2024

ஏப்ரல் 19 வரலாற்றில் இன்று!

image

➤1506 – லிஸ்பனில் போர்த்துக்கீசியர்களால் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ➤1775 – அமெரிக்கப் புரட்சிப் போர் தொடங்கியது. ➤1882 – உயிரியலாளர் சார்லஸ் டார்வின் பிறந்த நாள். ➤1975 – இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது. ➤1988 – ஐ.பி.கே.எஃப்-க்கு எதிராக உண்ணாவிரதமிருந்த அன்னை பூபதி மறைந்த நாள். ➤2006 – நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி வெடித்தது.

News April 19, 2024

ஏழை நாடாகவே இந்தியா இருக்கும்

image

2029ஆம் ஆண்டுக்குள் உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்தாலும், இந்தியா ஏழை நாடாகவே இருக்கும் என ஆர்பிஐ முன்னாள் கவர்னர் டி.சுப்பாராவ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “சவுதியை உதாரணமாக பாருங்கள். பணக்கார நாடாக மாறுவதற்கு, வளர்ந்த நாடாக மாற வேண்டிய அவசியமில்லை. பிரிக்ஸ் & ஜி 20 நாடுகளிலும், இந்தியா மிகவும் ஏழ்மையாகவே உள்ளது. வளர்ச்சி விகிதத்தை விரைவுபடுத்த வேண்டும்” என்றார்.

error: Content is protected !!