news

News April 25, 2024

இன்றைய நல்ல நேரம்!

image

▶ஏப்ரல் – 24 | ▶ சித்திரை – 11 ▶கிழமை: புதன் | ▶திதி: பிரதமை ▶நல்ல நேரம்: காலை 09:30 – 10:30 வரை, மாலை 04:30 – 05:30 வரை ▶கெளரி நேரம்: காலை 10:30 – 11:30 வரை, மாலை 06:30 – 07:30 வரை ▶ராகு காலம்: 12:00 – 01:30 வரை ▶எமகண்டம்: காலை 07:30 – 09:00 வரை ▶குளிகை: காலை 10:30 – 12:00 வரை ▶சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.

News April 25, 2024

மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்கிறார் கள்ளழகர்

image

மதுரை வண்டியூர் வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி கள்ளழகர் மோட்சம் அளிக்கும் வைபவம் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து, இன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்வு நடைபெற உள்ளது. வரும் 25ஆம் தேதி பூப்பல்லக்கு நடைபெறும். 26ஆம் தேதி மதுரையில் இருந்து புறப்படும் கள்ளழகர், 27ஆம் தேதி அழகர் மலைக்கு திரும்புகிறார்.

News April 25, 2024

பூனையால் படிப்பை தவறவிட்ட மாணவர்!

image

சீனாவில் நுழைவுத்தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்தும், பூனையைத் துன்புறுத்தியதற்காக மாணவர் ஒருவருக்கு கல்லூரியில் சேர வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அங்கு சமீபத்தில் சூ (Xu) என்ற மாணவர் பூனையை அடித்து துன்புறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதனால் நான்ஜிங் பல்கலைக்கழகம், இயற்பியல் படிப்பில் சூ முதல் மதிப்பெண் பெற்றிருந்தாலும், நடத்தை அடிப்படையில் நிராகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

News April 24, 2024

கருப்பு உலர் திராட்சையில் இத்தனை நன்மைகளா?

image

கருப்பு உலர் திராட்சையில் பாஸ்பரஸ் மற்றும் போரான் கால்சியம் சத்துக்கள் இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்த உதவும். மேலும், ரத்த சோகை உள்ளவர்கள், இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து கருப்பு உலர் திராட்சையை உட்கொண்டு வந்தால், உடலில் ரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கும்.

News April 24, 2024

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

image

ஈரானுடன் வர்த்தகத் தொடர்பில் ஈடுபட்டால், பொருளாதார தடை விதிக்க நேரிடுமென பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. 3 நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபை சந்தித்து பேசினார். அப்போது, இருநாடுகள் இடையே பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பாக 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த சூழலில், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

News April 24, 2024

எழுத்தாளர் ஜெயகாந்தன் பிறந்த நாள் இன்று!

image

பேரறிவின் சிறுப்பிள்ளைத் தனங்களும், சிற்றறிவின் மேதா வித்தனங்களும் நிறைந்த மண்ணின் மைந்தர்களில் ஒருவரான எழுத்தாளர் ஜெயகாந்தன் பிறந்த நாள் இன்று. ‘என் வாசகனுக்குப் பிடித்தவிதமாக எல்லாம் எழுத முடியாது. நான் எழுதுவதை விரும்புகிறவனே எனது வாசகன்’ என எண்ணுவதை அப்பட்டமாக வெளிப்படுத்துவதில் இவருக்கு நிகர் யாருமில்லை. தமிழ் இலக்கிய உலகில் ஜெயகாந்தனின் படைப்புகள் காலம் கடந்தும் என்றும் நிலைத்திருக்கும்.

News April 24, 2024

பெற்றோர் அருகே குழந்தைக்கும் இருக்கை வசதி கட்டாயம்

image

விமானப் பயணத்தின் போது 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர்களின் அருகிலேயே இடம் ஒதுக்க வேண்டுமென விமான நிறுவனங்களுக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளுடன் அமர முடியாமல் போனது குறித்து பயணிகள் புகார் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, விமானப் பயணத்தின் போது குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் உடனிருப்பதை உறுதி செய்ய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News April 24, 2024

ஏப்ரல் 24 வரலாற்றில் இன்று!

image

➤ 1800 – அமெரிக்க காங்கிரஸ் நூலகம் நிறுவப்பட்டது. ➤ 1916 – அயர்லாந்துக் கிளர்ச்சியாளர்கள் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக டப்ளினில் போராட்டங்களில் இறங்கினர். ➤ 1967 – சோயூஸ் 1 விண்கலத்தில் பயணித்த ரஷ்ய வீரர் விளாடிமிர் கொமரோவ் தனது பாராசூட் திறக்கப்படாததால் உயிரிழந்தார். இவரே விண்வெளிப் பயணத்தில் உயிரிழந்த முதல் விண்வெளி வீரர் ஆவார். ➤ 1992 – இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டு வரப்பட்டது.

News April 24, 2024

மேற்கத்திய ஊடகங்களை விளாசிய ஜெய்சங்கர்

image

மேற்கத்திய ஊடகங்கள் தகவல் தெரியாமல் அல்ல, தாங்களும் இந்தியத் தேர்தலில் போட்டியிடுவதாகக் கருதுவதால், நமது ஜனநாயகத்தை விமர்சித்து வருவதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மேற்கத்திய ஊடகங்கள் நமது நாட்டின் தேர்தல் முறை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், தேர்தல் ஆணையம், காலநிலை என அனைத்தையும் பற்றி கேள்வி கேட்பார்கள் எனவும் சாடினார்.

News April 24, 2024

வேலையின்மை குறித்த அறிக்கைக்கு அரசு மறுப்பு

image

சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) கடந்த மார்ச் 26இல் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் 83% இளைஞர்கள் வேலையின்மையால் அவதிப்படுவதாகக் கூறியிருந்தது. இந்த அறிக்கைக்கு மத்திய அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், சர்வதேச அளவிலான தொழிலாளர்கள் புலம்பெயர்வு, பல்வேறு பணிபுரியும் தொழிலாளர்களின் வளர்ச்சியை ஐஎல்ஓ கணக்கில் கொள்ளவில்லையென மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

error: Content is protected !!